அமுதம் 40 சென்னையை நோக்கிய ஆதியின் பயணம் அவ்வளவு எளிதானதாக இல்லை. அவன் யோசிக்க, செயல்படுத்த, அவ்வளவு விஷயங்கள் இருந்தது சென்னையில்! முகிலன் அமெரிக்காவில் இருந்து வந்ததும் சென்னையில் மட்டுமே இருந்தான். கோதைக்காக ஊட்டிக்கும் தலைமறைவாக கோவைக்கும் வந்திருக்கிறான். அதனால் கண்டிப்பாக மீண்டும் சென்னை தான் சென்றிருப்பான் என்பதில் ஆதிக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதனால் அங்கு அவனின் ஆட்கள் பலரை பல பகுதிகளுக்கு அனுப்பி தேடச் சொல்லிவிட்டு இவனும் சென்னை சென்று கொண்டிருந்தான். ஆதி சென்னை […]
அமுதம் 38 சுந்தருக்கு மனமெல்லாம் எரிந்தது. ‘அப்பா அப்பா’ என்று தன்னை சுற்றி சுற்றி வந்த பெண், இன்று தன்னை அந்நியன் போல ஒதுக்குவது அவருக்கு வலித்தது. குடும்பத்தில் ஒருவனே ஆனாலும் முகிலன் சொன்னதை நம்பியிருக்க கூடாது. என்ன செய்யலாம்? அன்று விதி அப்படி அமைந்துவிட்டது. இல்லையென்றால் தோழியாய் தாங்கும் மீனாட்சி கோதையை அப்படி நினைத்திருப்பாளா? இல்லை அவளே சொல்லியிருந்தாலும் நான் கேட்டிருப்பேனா? எல்லாம் தலையெழுத்து என்று நொந்து கொண்டவர், கோதை தன்னிடம் கேட்ட கேள்விகளை அசை […]
அமுதம் 37 தன் சிப்பி இமைகளை மெல்ல மெல்லத் திறந்து தன் கருவிழியால் அந்த இடம் முழுவதும் அவள் பார்வையை ஓட்ட, ஏதோ மருத்துவமனை என்பது வரை புரிந்தது. தான் மயங்கும் முன் கண்ட தன் கணவனின் கண்ணீர் முகம் அவள் மனதில் கலக்கம் தர, ஆதியை பார்க்க வேண்டும் என்று எழுந்த ஆவலால் அவள் தன்னிலை உணராது எழுந்துகொள்ள முனைய அவளால் அது முடியாமல் போனது. அதிர்ந்த மனதை அடக்கி, கண்ணை கீழ் நோக்கி தன் […]
அமுதம் 36 கோதையின் வார்த்தைகளைக் கேட்ட சுந்தர் நொறுங்கிப் போனார். ஆதி நினைவிழந்த கோதையை பார்த்துக் கதறினான். அவளின் தோளிலிருந்தது வழியும் ரத்தத்தை நிறுத்த, தன் சட்டை கொண்டு இறுக்கிக் கட்டியவன் அவளை கைகளில் ஏந்தியபடி வாகனம் நோக்கி ஓட, அங்கே அதற்குள் ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. கோதையை ஆம்புலன்ஸில் விட்டவன் மருத்துவர் அவளுக்கு சுவாசிக்க பிராண வாயுவைப் பொருத்தியபடி மருத்துவமனை நோக்கி விரைவாகச் செல்லச் சொன்னார். ஆதி ஆம்புலன்ஸில் ஏறப்போனவன், நினைவு வந்தவனாய் அவரை காத்திருக்க […]
அமுதம் 35 வானளாவிய மரங்களுக்கு இடையில் இருந்த அந்த சிறு கிராமம், யாருக்கும் அவ்வளவு எளிதில் புலப்படாது. அவ்வளவு அடர்த்தி.. நம் கால்தடங்கள் பதிவதே அரிதான இடம் என்று நினைத்தால், மரங்களின் கிளைகளால்,அதன் அசாத்திய வளர்ச்சியால் சூரியக் கதிர்களே அம்மண்ணை தொட்டிருக்குமா என்பது சந்தேகம் தான். அங்கே ஓர் இடத்தில், கோர முகத்துடன், பன்னிருகைகளில் பற்பல ஆயுதம் தரித்த வனபத்ரகாளியின் சிலை உயர்ந்து நின்றது. காண்பவரை ஒரு நொடி கதிகலங்கச் செய்திடும் அத்தாயின் ரௌத்திர முகம். நேற்று […]
அமுதம் 34 ரிசார்ட்டின் ரவுடிகள் பிரச்சனையை ஆதி தீர்த்து வைத்ததால், உடனடியாக விலை பேசி அதை வாங்கினார்கள். இரண்டே நாட்களில் எதிர்பாராத அளவுக்கு சில மாற்றங்களை, அவரவர் செய்ய, திறப்பு விழா வேலையாய் ராஜேஸ்வரன் சுற்றித் திரிந்தார். அன்றும் காலை சீக்கிரமே கிளம்பி கீழே வந்த கோதை கண்டது கையில் கேமராவுடன் நின்ற புவனேஷைத்தான். “டேய் பொடியா… இதென்ன கழுத்துல டி.எஸ்.எல்.ஆர். தலைல தொப்பி, தோளில் கேமரா பேக். புது அவதாரமா?” “இல்ல நெட்டைகொக்கு. எனக்கு போட்டோக்ராபில […]
அமுதம் 33 வீட்டிற்கு வந்ததும் யார் யார் எந்தெந்த பொறுப்புகளில் இருக்க வேண்டும் என்று கலந்து பேசினார்கள். ராஜேஸ்வரன் ஒரு விஷயத்தில் உறுதியோடு இருந்தார். அனைவரும் பகுதி நேரமாக மேல் படிப்பு படிக்க வேண்டும். எந்த காரணத்திற்க்காகவும் இதை தளர்த்த மாட்டேன் என்றுவிட்டார். மதி படிக்கப்போவதாக ஏற்கனவே எடுத்த முடிவு தான். ஆனால் இவர்கள் பற்றி அவர் சொல்லவே இல்லை. இப்போது தான் சொல்கிறார். கோதை அமைதியாக,”மூன்று மாசம் போகட்டும் மாமா. யாருக்கு எந்த துறையில் மேலாண்மை […]
அமுதம் 32 காலையில் எல்லாம் நன்றாக இருக்க, வீடு வரை சென்று வரலாம் என்று கிளம்பிய கோதை, அங்கு அவளுடன் கிளம்பிய கூட்டத்தைக் கண்டு திகைத்துப் போனாள். காலையில் வந்து இறங்கிய சுபா, கிருத்தி, ராகுல், இன்பா, பிரவீன், அவர்களோடு மதி, சுஜி, ஷியாம் என்று வரிசை கட்டி நிற்க, அங்கே நின்ற அகிலயும், அருணாவையும் பார்த்து, “நீங்க மட்டும் ஏன் இங்க இருக்கீங்க? நீங்களும் இவங்களுக்கு துணையா வர வேண்டியது தானே?” என்று நக்கல் செய்ய, […]
அமுதம் 31 இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஆதி ஒரு மீட்டிங்கிற்காக கோவை போக வேண்டியவன், கோதை சொன்ன பாதுகாப்பு நடவடிக்கைகளால் அதை தள்ளி வைத்திருந்தான். மீண்டும் அவளைத் தனியாக விட்டுச் செல்ல முடியாத சூழ்நிலையில் அதை நாளைக்கு ஒத்திவைத்திருந்தான். கண்டிப்பாக நாளை போயே ஆகி வேண்டும். அவளின் தனிமை கருதி அந்த ஆர்டர் வேண்டாம் என்று நினைத்தவன் நாளை அவளின் முழு பட்டாளமே வருவதால், கோவை பயணத்தை முடிவு செய்துவிட்டான். காலையில் கோதை சோம்பலாய் எழ, ஃபுல் […]
அமுதம் 30 கோதையின் வார்த்தைக்கிணங்க ஆதி உடனே ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு மொத்த குடும்பத்திற்குமே பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்தான். அவனால் கோதையின் பேச்சை லேசாக எடுக்க முடியவில்லை. அவள் போலீஸ்காரர் மகள், எப்பொழுதும் ஒரு கவனம் அவளிடம் இருக்கும். ஏதோ ஒன்று சரி இல்லாமல் இருக்க போய் தான் அவள் தன்னிடம் அவ்வாறு சொல்லிருக்க வேண்டும் என்று தன் மனையாள் மீது கொண்ட நம்பிக்கையால் அனைத்தையும் செய்தான். அது மட்டுமின்றி அலுவலகம், வீடு இரண்டிற்கும் […]
