சொல்லவா என் காதலை!

“Love conquers all” – Virgil சென்னையின் பரபரப்பான காலை வேளை. மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளுக்கு தேனீக்களாகக் கிளம்பிச் சென்று கொண்டிருக்கும் பேருந்து நிலையத்தின் மத்தியப் பகுதி. பச்சை நிற பூப்போட்ட சுடிதாரில் கண்களில் தேடலுடன் நின்றிருந்தாள் வெண்ணிலா. அவளுக்கான பேருந்து வர இன்னும் இரண்டு நிமிடம் இருந்தது. மெல்லிய சாரலாக மழை பெய்யத் துவங்கியதும் அவள் முகத்தில் இத்தனை நேரம் இருந்த அவசரம், தவிப்பெல்லாம் மறந்து போய் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. மழை […]

Amudham 3

அமுதம் 3 பூங்கோதையை வம்பு செய்துவிட்டு இளைஞர் பட்டாளம் உள்ளே முகிலனை பார்க்கச் சென்றது. வாசலில் ஆதியும், பூங்கோதையும் தனித்து இருந்தனர். மெதுவாக கோதையை நோக்கி கரம் நீட்டினான் ஆதி. அவனை அமர்த்தலாகக் கண்டவள் அவன் கரம் பற்றி எழுந்து, “நீங்க முதலிலேயே சொல்லிருக்கலாமே அத்தான்.” என்றாள். “நான் ஆதி மா, முகில் இல்ல. இன்னும் நீங்க என்ன அத்தான்னு கூப்பிடுறிங்க?” “விடுங்க. நான் உங்களை முதல்ல அப்படி கூப்பிடுட்டேன். அது அப்படியே வந்துடுச்சு. வாங்க உள்ள […]

Amudham 2

அமுதம் 2 அந்த பெரிய வீட்டின் பிரம்மாண்டத்தில் ஒரு நிமிடம் அசந்து போனான் ஆதி. “ஷிட் இந்த வீடு இன்னும் மாறவே இல்ல..” என்ற குரல் கேட்டு ஆதியின் மனது கனத்தது. வேறுயார்? எல்லாம் அவனோடு வந்த இந்த வீட்டின் வாரிசு முகிலன் தான். ‘அரண்மனை போல வீடு, திருவிழா போல சொந்தம், இவனுக்கு என்னைக்கு தான் இதோட அருமை எல்லாம் புரியுமோ?’ மனம் சொன்னாலும் அதை அப்படியே விட்ட ஆதி, “வா முகி உள்ள போகலாம்.” […]

Amudham 1

அமுதங்களால் நிறைந்தேன் To love and be loved is to feel the sun from both sides. அமுதம் 1 மயக்கும் மாலை வேளையில் அந்த பெரிய வீட்டின் உள்ளே மட்டும் அவ்வளவு பரபரப்பு. “மணி அண்ணா, அத்தான் ரூம் சுத்தம் பண்ணியாச்சா?” “ஆச்சு சின்னம்மா..” “ராசாத்தி அக்கா, அத்தான் ரூம்ல பூச்செண்டு மாத்தியாச்சா?” “ஆச்சு பாப்பா” “டிரைவர் அண்ணா ஏர்போர்ட் போயாச்சா??” “கடவுளே..ஏன் இப்படி எல்லாரையும் படுத்தி எடுக்கற? அவன் என்ன விருந்தாளியா? […]

அஞ்சுவண்ணப் பூவே! 3

Amazing Ajay! வீட்டுக்குள் நுழைந்த நிமிடம் முதல் அங்கு குடிகொண்டிருக்கும் அந்த அசவுகர்யமான அமைதி அவனை படுத்தி எடுத்தது. அவனே விலகிச் சென்றாலும் அவனை சுற்றிச் சுற்றி வரும் அவன் மனைவி இல்லாமல் அந்த அமைதி அவனைக் கொன்றது.   அவனாக அவளைத் தேடிச் சென்று காதல் கொள்ளவில்லை. அவளே அவனை நாடி வந்தாள். அவனைப் பற்றி அனைத்தும் தெரிந்து தான் காதல் புரிந்தாள். ஆனால் இன்று அவள் காட்டும் விலகலின் காரணம் தான் அவனுக்குப் புரியவில்லை. […]

அஞ்சுவண்ணப் பூவே! 2

கல்லூரி வளாகம் முழுவதும் பட்டாம்பூச்சிகள் வட்டமிட்டது போல அழகிய இளம்பெண்கள் சுற்றித் திரிய, அவர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்து பிறந்த பயனை அடைந்து கொண்டிருந்தனர் நம் இளைஞர் பட்டாளம். அதிலும் பி.காம் பிரிவில் இருக்கும் பெண்கள் எப்போது வருவார்கள் என்று காத்திருக்கும் கூட்டம் சற்று அதிகமே! அதற்கான முக்கிய காரணம் அவ்வகுப்பில் பயிலும் அந்த தேன்சிட்டு தான். அவளது பாந்தமான அழகைக் காணவே அவ்வகுப்பு மாணவிகள் வரும்போது வழியில் நிற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். “அதோ வரா […]

அஞ்சுவண்ணப் பூவே 1

Love Tale of Abhi! நிசப்தமான அறையில் அந்த குரல் திடீரென ஒலித்ததில் ஏதோ சிந்தனை வலையினில் சிக்கிக் கொண்டிருந்த அபிதா நிமிர்ந்து குரல் வந்த திசையில் நோக்கினாள். “என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்க அபி நீ? மாப்பிள்ளை நாலு தடவை போன் பண்ணிட்டார். ஏன் உன் போனை ஆஃப் பண்ணி வச்சிருக்க?” தாயின் பேச்சை கேட்டதும் சூன்யமாக இருந்த அவளது முகம் மெல்ல ஒளிர்ந்து பின் வருத்தத்தை பூசிக் கொண்டது. “ம்ச்” என்று உதட்டை சுழித்து […]

error: Content is protected !!