Jeyalakshmi Karthik Novels “Respect is the foundation of a stable way of life and the basis of a code of conduct.” அமுதம் 18 எங்கோ சலங்கையை உலுக்கியது போல சிரிப்பொலி கேட்க, மெதுவாய் கண் திறந்து பார்த்தான் ஆதி. விடிந்து விட்டது. ஆனால் அவனருகில் மணவாட்டியைக் காணவில்லை.. சிரிப்பொலி தொடர்ந்து கேட்கவே முதல்நாளின் தாக்கம் ஏதும் இல்லாமல் புன்னகைக்கும் தன் பூவானவளின் குரலில் ஆதி பூரித்துப்போனான். தன் காலைக்கடன்களை […]
Jeyalakshmi Karthik Audio Novels அறிவியலும் ஆன்மீகமும் கலந்த நாவல். இந்தக் கதையை புத்தகமாக நீங்கள் வாசிக்க விரும்பினால், இதோ கீழே அதற்கான இணைப்பு உள்ளது.
Life is what happens while you are busy making other plans. அஜய் கிருஷ்ணாவின் திட்டப்படி வைபவ் நியமித்திருந்த வக்கீல் குழுமம் முழுமையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்திருந்தான் ரஞ்சித். வைபவ் அவர்களை அழைக்கும்போது ரஞ்சித்தின் மிரட்டலால் எல்லாம் இயல்பாக இருப்பது போல அவர்களும் பேசி தங்களைக் காத்துக் கொண்டனர். அவர்களை சந்திக்க வந்த அஜய், “உங்களை கஷ்டப்படுத்தனும்னு எனக்கு எந்த நோக்கமும் இல்ல. எனக்கு இன்னும் ஒரு வாய்தா கண்டிப்பா வேணும். […]
“As long as you’re alive, you always have the chance to start again.” அமுதம் 17 தன் தோள் சாய்ந்து சிறுபிள்ளை போல் உறங்கும் தன் மனைவியைக் கண்ட ஆதியின் உள்ளம் பூரித்தது. அவள் முகத்தில் வேதனையின் சாயல் தெரிகிறதா என்று அவனும் தேடினான். ஆனால் அதுவோ சொர்க்கமே கிடைத்துவிட்ட திருப்தியைப் பிரதிபலித்தது. அவன் அவளை அவள் வீட்டிலிருந்து அழைத்து வந்ததும் கால் டாக்ஸி வரவைத்து ஊட்டிக்குக் கிளம்பிவிட்டான். வண்டி ஏறிய சில […]
Modern William Shakespeare in 2025 “Alas, My Apple Hath Gone Mad!” – If Shakespeare Had to Deal with AutocorrectRight then, good gentle readers! Gather ’round and lend thine ears (or rather, thine eyes) to the first installment in our most mirthful series. Today, we shall plunge headfirst into the chaotic world of William Shakespeare and […]
“The way they leave tells you everything.” அமுதம் 16 ஆரம்பத்தில் முகிலனை கோதை யாரோ என்று நினைத்தது அவனை பெரிதாக பாதிக்கவில்லை. ஆதியை அத்தான் என்று கோதை அழைத்ததும் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால் அதன் பின் அவள் தன்னை, தன் தோற்றத்தை வர்ணித்த விதம் அவனை எரிச்சலடையச் செய்தது.. இருந்தும் அவளுக்கு நம் தோற்றம் பிடிக்கவில்லை. ‘பட்டிக்காடு’ அவள் என்றே அவள் பேச்சுக்களை ஒதுக்கிவிட்டான். ஆனால் தெருவின் வாண்டுகளும் அதே சொல்ல […]
Jeyalakshmi Karthik’s Classic அமுதம் 15 எதிர்பாராமல் நடந்த கோதையின் திருமணமும், அதிரடியாய் அவள் வெளியேறியதையும், தங்கள் தந்தையே அவர்களுக்காக நின்றதும், பெரியவர்களை பெரிதும் பாதித்தது. ஆதியின் பேச்சு, அவன் கோதையை அழைத்துச்சென்ற விதம் என்று இன்னும் பல குழப்பங்கள். அவரவர் ஒரு இடத்தில் அமர்ந்து கைத்தாங்கலாய், தலை சாய்த்து என்று ஆளுக்கொரு யோசனையில் இருக்க, புயல் போல வீட்டினுள் நுழைந்தான் அகிலன். “அம்மா, அப்பா! என்ன இதெல்லாம்? வீடெல்லாம் அலங்காரமா இருக்கு. என்ன விஷேக்ஷம்? என்கிட்ட […]
“Family betrayal may steal your innocence, but it gifts you wisdom in return.” அமுதம் 14 தன் வீட்டின் அலங்காரத்திலும் தாயின் அணுகுமுறையிலுமே துவண்டிருந்த கோதையிடம் ,அவளுக்கு திருமணம் என்று எப்படி சொல்வது என்று நொந்துபோனாள் சுபா. ஆனாலும் சொல்லித்தான் தீர வேண்டும்.. அனைவரும் கோதையை சமாதானம் செய்துகொண்டிருக்க, சுபா பொதுவாய், “இங்க என்ன விஷேசம்ன்னு கேட்டுட்டேன்”, என்றாள். “சொல்லு டீ என்னவாம் “, என்று கிருத்தி கேட்க.. கண்களில் வழியும் நீருடன்,” […]
“You never see the knife coming when it’s veiled by the warmth of family.” அமுதம் 13 ஆதிக்கு அன்று பேக்டரியில் நிறைய குழப்பங்கள். அவனும் இந்த ஒரு ஆண்டாக எல்லாம் பார்த்து பார்த்து தான் செய்கிறான். இருந்தும் தொழிலாளர்கள் சிலர் செய்யும் செயல்கள் அவனை நிம்மதியாக இருக்க விடுவதில்லை. ஏற்கனவே கோவைக்கும் நீலகிரிக்கும் அலைந்து கொண்டிருப்பவன். இன்று தொழிலாளர் இருவர் போட்ட சண்டையில் சமாதானம் செய்யவே இரவாகிப் போனது. இதற்குமேல் கோவை […]
அபிதா வீட்டிலிருந்து வெளியே வந்த அஜய்யின் முகம் பாறையைப் போல கடினமாக இருந்தது. ரஞ்சித் அவனிடம் எதையும் கேட்கவில்லை. அவன் முகம் தான் நிலைமையை பறைசாற்றிவிட்டதே. அஜய் நேராக தன் அலுவலகம் சென்று இருக்கையில் அமர்ந்தான். எதிரில் இருந்த பொருட்களை அடித்து உடைக்கும் அளவுக்கு அவனிடம் கோபம் கொட்டிக் கிடந்தது. ஆனால் இதையே எண்ணிக் கொண்டிருந்தால் இந்த மூன்று வருடமாக அவன் உழைத்த எதற்கும் மதிப்பில்லாமல் போய் விடும். அதனால் ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை எடுத்துக் கொண்டு […]
