Amudham 36

அமுதம் 36 கோதையின் வார்த்தைகளைக் கேட்ட சுந்தர் நொறுங்கிப் போனார். ஆதி நினைவிழந்த கோதையை பார்த்துக் கதறினான். அவளின் தோளிலிருந்தது வழியும் ரத்தத்தை நிறுத்த, தன் சட்டை கொண்டு இறுக்கிக் கட்டியவன் அவளை கைகளில் ஏந்தியபடி வாகனம் நோக்கி ஓட, அங்கே அதற்குள் ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. கோதையை ஆம்புலன்ஸில் விட்டவன் மருத்துவர் அவளுக்கு சுவாசிக்க பிராண வாயுவைப் பொருத்தியபடி மருத்துவமனை நோக்கி விரைவாகச் செல்லச் சொன்னார். ஆதி ஆம்புலன்ஸில் ஏறப்போனவன், நினைவு வந்தவனாய் அவரை காத்திருக்க […]

ஆப்ரேஷன் சுபாஷ்

அந்த நண்பகல் வேளையில் அச்சிறு கிராமம் மிகுந்த அமைதியோடு காட்சியளித்தது. பெண்கள் ஆங்காங்கே வீட்டு வாயில்களிலும், புழக்கடையில் உள்ள திட்டுகளிலும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வாய் பேசிக்கொண்டிருந்ததாலும் கைகள் அரிசி புடைப்பது, பூ கட்டுவது என்று அமர்ந்தே செய்யும் பணிகளை செவ்வனே செய்து கொண்டிருந்தது. ஆண்கள் பெண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் விதமாக ஊரின் கூடம், வீட்டுத் திண்ணை என்று அவர்களும் கூடி அமர்ந்திருந்தாலும் கைகளில் செய்தித்தாள், வார இதழ் என்று ஏதோ ஒன்று இடம்பிடித்திருந்தது. ஊரின்அமைதியை […]

Amudham 35

அமுதம் 35 வானளாவிய மரங்களுக்கு இடையில் இருந்த அந்த சிறு கிராமம், யாருக்கும் அவ்வளவு எளிதில் புலப்படாது. அவ்வளவு அடர்த்தி.. நம் கால்தடங்கள் பதிவதே அரிதான இடம் என்று நினைத்தால், மரங்களின் கிளைகளால்,அதன் அசாத்திய வளர்ச்சியால் சூரியக் கதிர்களே அம்மண்ணை தொட்டிருக்குமா என்பது சந்தேகம் தான். அங்கே ஓர் இடத்தில், கோர முகத்துடன், பன்னிருகைகளில் பற்பல ஆயுதம் தரித்த வனபத்ரகாளியின் சிலை உயர்ந்து நின்றது. காண்பவரை ஒரு நொடி கதிகலங்கச் செய்திடும் அத்தாயின் ரௌத்திர முகம். நேற்று […]

Amudham 34

அமுதம் 34 ரிசார்ட்டின் ரவுடிகள் பிரச்சனையை ஆதி தீர்த்து வைத்ததால், உடனடியாக விலை பேசி  அதை வாங்கினார்கள். இரண்டே நாட்களில் எதிர்பாராத அளவுக்கு சில மாற்றங்களை, அவரவர் செய்ய, திறப்பு விழா வேலையாய் ராஜேஸ்வரன் சுற்றித் திரிந்தார். அன்றும் காலை சீக்கிரமே கிளம்பி கீழே வந்த கோதை கண்டது கையில் கேமராவுடன் நின்ற புவனேஷைத்தான். “டேய் பொடியா… இதென்ன கழுத்துல டி.எஸ்.எல்.ஆர். தலைல தொப்பி, தோளில் கேமரா பேக். புது அவதாரமா?” “இல்ல நெட்டைகொக்கு. எனக்கு போட்டோக்ராபில […]

Amudham 33

அமுதம் 33 வீட்டிற்கு வந்ததும் யார் யார் எந்தெந்த பொறுப்புகளில் இருக்க வேண்டும் என்று கலந்து பேசினார்கள். ராஜேஸ்வரன் ஒரு விஷயத்தில் உறுதியோடு இருந்தார். அனைவரும் பகுதி நேரமாக மேல் படிப்பு படிக்க வேண்டும். எந்த காரணத்திற்க்காகவும் இதை தளர்த்த மாட்டேன் என்றுவிட்டார். மதி படிக்கப்போவதாக ஏற்கனவே எடுத்த முடிவு தான். ஆனால் இவர்கள் பற்றி அவர் சொல்லவே இல்லை. இப்போது தான் சொல்கிறார். கோதை அமைதியாக,”மூன்று மாசம் போகட்டும் மாமா. யாருக்கு எந்த துறையில் மேலாண்மை […]

Amudham 32

அமுதம் 32 காலையில் எல்லாம் நன்றாக இருக்க, வீடு வரை சென்று வரலாம் என்று கிளம்பிய கோதை, அங்கு அவளுடன் கிளம்பிய கூட்டத்தைக் கண்டு திகைத்துப் போனாள். காலையில் வந்து இறங்கிய சுபா, கிருத்தி, ராகுல், இன்பா, பிரவீன், அவர்களோடு மதி, சுஜி, ஷியாம் என்று வரிசை கட்டி நிற்க, அங்கே நின்ற அகிலயும், அருணாவையும் பார்த்து, “நீங்க மட்டும் ஏன் இங்க இருக்கீங்க? நீங்களும் இவங்களுக்கு துணையா வர வேண்டியது தானே?” என்று நக்கல் செய்ய, […]

Amudham 31

அமுதம் 31 இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஆதி ஒரு மீட்டிங்கிற்காக கோவை போக வேண்டியவன், கோதை சொன்ன பாதுகாப்பு நடவடிக்கைகளால் அதை தள்ளி வைத்திருந்தான். மீண்டும் அவளைத் தனியாக விட்டுச் செல்ல முடியாத சூழ்நிலையில் அதை நாளைக்கு ஒத்திவைத்திருந்தான். கண்டிப்பாக நாளை போயே ஆகி வேண்டும். அவளின் தனிமை கருதி அந்த ஆர்டர் வேண்டாம் என்று நினைத்தவன் நாளை அவளின் முழு பட்டாளமே வருவதால், கோவை பயணத்தை முடிவு செய்துவிட்டான். காலையில் கோதை சோம்பலாய் எழ, ஃபுல் […]

Amudham 30

அமுதம் 30 கோதையின் வார்த்தைக்கிணங்க ஆதி உடனே ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு மொத்த குடும்பத்திற்குமே பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்தான். அவனால் கோதையின் பேச்சை லேசாக எடுக்க முடியவில்லை. அவள் போலீஸ்காரர் மகள், எப்பொழுதும் ஒரு கவனம் அவளிடம் இருக்கும். ஏதோ ஒன்று சரி இல்லாமல் இருக்க போய் தான் அவள் தன்னிடம் அவ்வாறு சொல்லிருக்க வேண்டும் என்று தன் மனையாள் மீது கொண்ட நம்பிக்கையால் அனைத்தையும் செய்தான். அது மட்டுமின்றி அலுவலகம், வீடு இரண்டிற்கும் […]

Amudham 29

அமுதம் 29 முதல் நாளின் நினைவுகளோடு கண்விழித்த கோதைக்கு அந்த அருவியைப் பகலில் காண ஆசை வர, ஆதியை உலுக்கி எழுப்பினாள். கம்பளிக்குள் நத்தையாய் சுருண்டிருந்தவன் கோதையின் உலுக்கலில், அரைக் கண் திறந்து “என்ன செல்லம்மா?” “அத்தான் அத்தான் ப்ளீஸ் வாங்களேன் இப்போ போய் அந்த அருவியை பார்த்துட்டு வரலாம்.” “பூமா! ஆதி பாவம் டா. மணி பாரு அஞ்சு தான் ஆகுது. இப்போ போனா குளிரும்.” “ஓ. அப்போ நேத்து நைட் பத்து மணிக்கு குளிரலையோ?” […]

Amudham 28

அமுதம் 28 ஆதி வீட்டுக்கு வந்ததும் கண்கள் மனைவியைத் தேட, வீடே நிசப்தமாக இருந்தது. அம்மா அப்பா அனைவரும் மாலையே ஊருக்கு போய்விட்டது அவன் அறிந்ததுதான். வீட்டில் பூமா இருக்க வேண்டுமே! ஆனால் வீட்டின் அமைதி அவனை உலுக்க, வேகமாக சமையலறை சென்றான். அவள் இல்லை. உணவு மேசைக்கு வர அங்கே ஒரு கடிதம் இருந்தது. எடுத்தான். படித்தான். முகத்தில் புன்னகை அரும்பியது. அதில் ‘புத்தக அறை வரவும்’ என்று எழுதியிருந்தது. புத்தக அறை மூன்றாவது மாடியில் […]

error: Content is protected !!