அமுதம் 46 ஆதிக்கு மனம் பரபரப்பாக இருந்தது. உடனே பூமாவைக் காண ஆவல் எழுந்தது. அது இயல்பாக கணவனுக்கு மனைவி மேல் வரும் காதலையும் தாண்டி, அவள் தனக்கு ஏதோ சர்ப்ரைஸ் என்று சஸ்பென்ஸ் வைத்தால் ஒரு உந்துதல் வர, மனைவியைக் காணும் ஆசையில் எஸ்டேட் பங்களா நோக்கி விரைந்தான். ஆனால் போகப் போக மனம் ஒரு வித சஞ்சலத்துக்கு ஆளானது. எஸ்டேட் வாயிலுக்கு கொஞ்ச தூரம் முன்னாலே ஏதோ ஒரு வண்டி கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக […]
அமுதம் 45 அன்று காலையில் எழுந்தது முதலே கோதை சோர்வாக உணர்ந்தாள். ஆதி மீட்டிங் ஒன்றிற்கு கோவை சென்றிருந்தான். அவன் டீ பாக்டரிக்கு கோதை ஆள் அனுப்பினாள், ரிசார்ட்டில் உள்ள ரெஸ்ட்டாரெண்ட்டுக்கு அங்கிருந்து தினமும் டீத்தூள் அனுப்ப சொன்னதால், அவன் பிராண்ட் ரிசார்ட்டிற்கு வருவோருக்கு தெரிந்துபோனது, அதன் தரத்தால், அங்கேயே சின்ன விற்பனை நிலையம் ஆரம்பித்து வைத்தாள். ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து செய்தாள் கோதை. அனைவரும் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்க, ஆதியோ அவளை தலை மேல் […]
அமுதம் 44 ஆதி போனை எடுக்க மாட்டான் என்று நினைக்க, அவன் தன் மனையாள் எப்போது அழைத்தாலும் தான் பதில் சொல்லாது போனால் வருந்துவாள் என்று அவள் அழைப்பு வந்தால் ஆட்டோ ஆன்சரில் வைத்திருந்தான். இப்போதும் அது தானே அவள் காலை கனெக்ட் செய்திருக்க, அந்த பக்க அமைதியை புரிந்துகொண்ட கோதை, “அத்தான் அத்தான் “,என்று மெதுவாக அழைத்த வண்ணம் இருந்தாள்.. அவன் ஒரு கட்டத்தில் அவளின் அழைப்புக்குரல் கேட்டு போனை காதில் வைத்தவன், “பூமா”, என்றான். […]
அமுதம் 43 பூங்கோதையின் சொல்லுக்கிணங்க உடனே ரிசார்ட் திறப்பு விழா வேலைகள் நடந்தது. அவளால் அலைய முடியாத காரணத்தால் அவள் வீட்டிலிருந்தே அனைத்தையும் மேற்பார்வை பார்த்தாள். அன்று காலை ஆதியும் நவியும் கோத்தகிரி போய் முகிலனைப் பார்த்து போதை கடத்தல் கும்பலுடன் அவன் எப்படி சேர்ந்தான் எனக் கேட்க, அவனோ நீளமாக கதையளந்தான். “வேண்டாததை பேசாதே டா. கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு.” “சுஜி கடத்தலுக்கு அப்பறம் நான் டிரக்ஃஸ் கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்பறம் இங்க […]
அமுதம் 42 ஜோதிலிங்கம் தாத்தா ஊட்டியை நெருங்கி விட்டதாக சொன்னதும், ஆதி எஸ்டேட்டில் இருந்து கிளம்பி வந்தான். தாத்தா நேராக வீட்டிற்கு வராமல் ஆதியை வேறு இடத்திற்கு வரச் சொன்னார். ஆதிக்கு மனதில் நெருடல் இருந்தாலும் தாத்தாவின் சொல்லுக்கிணங்க அவன் ஒரு இடத்தைச் சொல்லி வரச் சொன்னான். அவன் காத்திருந்த ஒவ்வொரு நொடியும் யுகம் போல இருக்க, தாத்தா போர்ஸ் ட்ரவெலர்ரில் இருந்து இறங்கவும் ஆதி குழப்பமானான்.‘ஒருவருக்கு எதற்கு வேன்?’ என்று. ஆனால் தாத்தா அவனை உள்ளே […]
அமுதம் 41 ஆதி சக்தியின் வார்த்தைகளை கவனிக்கத் தவறினான். அவன் சற்று யோசித்திருந்தாலும் அவன் கண்டுகொண்டிருப்பான். சக்தியை கவனமாக இதே வீட்டில் வைத்திருக்கும் படி அந்த நிறுவன ஆட்களுக்கு உத்தரவிட்டு விட்டு, பார்வதி பாட்டி, தமயந்தி, லட்சுமியை அழைத்து கொண்டு ஊட்டிக்கு விரைந்தான். அவனால் பூமாவை பார்க்காமல் இருக்க முடியவில்லை. மூளை வேலை நிறுத்தம் செய்வது போல உணர்ந்தான். தாத்தாவின் பாதுகாப்பிற்கு நிறுவன ஆட்களையும், உதவிக்கு தனக்கு தெரிந்த சிலரையும் கவனித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ஊட்டியை நோக்கி ஆவலாய் […]
அமுதம் 40 சென்னையை நோக்கிய ஆதியின் பயணம் அவ்வளவு எளிதானதாக இல்லை. அவன் யோசிக்க, செயல்படுத்த, அவ்வளவு விஷயங்கள் இருந்தது சென்னையில்! முகிலன் அமெரிக்காவில் இருந்து வந்ததும் சென்னையில் மட்டுமே இருந்தான். கோதைக்காக ஊட்டிக்கும் தலைமறைவாக கோவைக்கும் வந்திருக்கிறான். அதனால் கண்டிப்பாக மீண்டும் சென்னை தான் சென்றிருப்பான் என்பதில் ஆதிக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதனால் அங்கு அவனின் ஆட்கள் பலரை பல பகுதிகளுக்கு அனுப்பி தேடச் சொல்லிவிட்டு இவனும் சென்னை சென்று கொண்டிருந்தான். ஆதி சென்னை […]
அமுதம் 39 பல முறை அழைத்தும் ஆதியின் அன்னை அன்னத்தின் எண் சுவிட்ச் ஆஃப் என்று வர, ஆதிக்கு பயம் பிடித்தது. வீட்டு இலக்கத்திற்கு அடிக்க அதுவும் வேலை செய்யவில்லை. என்ன முயன்றும் அவனால் கோவை வீட்டை தொடர்பு கொள்ள முடியாமல் போகவும், தானே நேரில் சென்று பார்த்தால் என்ன என்று நினைத்தான்.. அகிலனை அழைத்து நிலைமையை விளக்கியவன் “நான் வேலை விஷயமா போயிருக்கேன்னு சொல்லுங்க அண்ணா. நான் பார்த்துட்டு வந்துடறேன்.” என்றான். அகிலனுக்கு ஆதியை தனியாக […]
அமுதம் 38 சுந்தருக்கு மனமெல்லாம் எரிந்தது. ‘அப்பா அப்பா’ என்று தன்னை சுற்றி சுற்றி வந்த பெண், இன்று தன்னை அந்நியன் போல ஒதுக்குவது அவருக்கு வலித்தது. குடும்பத்தில் ஒருவனே ஆனாலும் முகிலன் சொன்னதை நம்பியிருக்க கூடாது. என்ன செய்யலாம்? அன்று விதி அப்படி அமைந்துவிட்டது. இல்லையென்றால் தோழியாய் தாங்கும் மீனாட்சி கோதையை அப்படி நினைத்திருப்பாளா? இல்லை அவளே சொல்லியிருந்தாலும் நான் கேட்டிருப்பேனா? எல்லாம் தலையெழுத்து என்று நொந்து கொண்டவர், கோதை தன்னிடம் கேட்ட கேள்விகளை அசை […]
அமுதம் 37 தன் சிப்பி இமைகளை மெல்ல மெல்லத் திறந்து தன் கருவிழியால் அந்த இடம் முழுவதும் அவள் பார்வையை ஓட்ட, ஏதோ மருத்துவமனை என்பது வரை புரிந்தது. தான் மயங்கும் முன் கண்ட தன் கணவனின் கண்ணீர் முகம் அவள் மனதில் கலக்கம் தர, ஆதியை பார்க்க வேண்டும் என்று எழுந்த ஆவலால் அவள் தன்னிலை உணராது எழுந்துகொள்ள முனைய அவளால் அது முடியாமல் போனது. அதிர்ந்த மனதை அடக்கி, கண்ணை கீழ் நோக்கி தன் […]
