அதிகாரம் 21 கட்சி அலுவலகம் உள்ளாட்சி தேர்தலின் அறிவிப்பால் பரபரப்பாகக் காட்சி அளித்தது. காலை ஒன்பது மணிக்கு தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் தேதிகளை அறிவித்ததோடு தேர்தல் விதிமுறைகளையும் அறிவித்திருந்தது. வார்டு கவுன்சிலராக வேண்டும் என்று எண்ணிய அந்தந்த வார்டின் தொண்டர்கள் எல்லாம் கட்சியின் தலைமை அலுவலகத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்தனர். இதற்கு இடையில் நீரூபன் அனுப்பி வைத்த புதிய பி.எம் டபிள்யு. ஐ செவன் கார் அந்த கூட்டத்தின் இடையில் நீந்தி வந்து நிற்க, அதிலிருந்து […]
அதிகாரம் 20 தன் முன்னே காட்டப்படும் புள்ளி விபரங்களைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தான் வசீகரன். எதிரே இருந்த டிஜிட்டல் போர்டில் கட்சிப் பணிகள், அதில் இருக்கும் இடர்பாடுகள், ஏற்கனவே வந்த கருத்துக்கணிப்பு முடிவுகள், எடுக்க வேண்டிய அதிரடி முடிவுகள் என்று தொகுதி வாரியாகப் பிரித்து அதிநுணுக்கமான விபரங்களைக் கூட அளித்திருந்தது அவர்களின் நிறுவன புள்ளியியல் துறை. அதனை மெச்சிக் கொண்டு வசீகரனுக்கு விளக்கிக் கொண்டிருந்தாள் நேத்ரா. “ஏன் ஐஸ், இப்ப நீ சொல்ற மாதிரி ஒரே போஸ்டர் […]
அதிகாரம் 19 மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் உள்ள திடலில் கூட்டம் அலை மோதியது. மறுமலர்ச்சி மக்கள் கழகம் என்று பெண்கள் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருக்க, அதில் உரையாற்ற கட்சியின் மகளிர் அணித் தலைவியான அஞ்சனா வருவதாக இருக்க போலீஸ் படை அங்கே குவிக்கப்பட்டிருந்தது. கட்சியில் ஆண்களுக்கு எந்த அளவுக்கு அஞ்சனாவை பிடிக்காதோ அதே அளவுக்கு பெண்களுக்கு அவளை பிடித்தது. பெண் ஒருவர் வீட்டைத் தாண்டி அரசியலில் தடம் பதித்து ஆண்களுக்கு இணையாக போராடுவது […]
சிறுகதை “டேய் எனக்கு பயமா இருக்கு டா. பிரச்சனை ஒண்ணும் வந்துடாதே?” என்று பயந்து கேட்ட இந்துவை முடிந்தவரை முறைத்துவிட்டு, “பிரச்சனைன்னு ஒண்ணு வந்தா அது உன்னை வீட்டில இருந்து கூட்டிட்டு போற… ஐ மீன் கடத்திட்டு போயிட்டேன்னு எனக்கு தான் வரணும். நானே கூல் அஸ் குக்கும்பர் மாதிரி இருக்கும்போது நீ ஏன் டி எலி மாதிரி உருட்டிக்கிட்டே வர்ற?” என்று இந்துவின் தோளில் கை போட்டு தன்னுடன் இழுத்துக் கொண்டபடி கூறினான் குகனேஷ். “குகா… […]
அதிகாரம் 18 நீரூபனைக் கண்டதும் வசீகரன் முகத்தில் மகிழ்ச்சியானதொரு புன்னகை மலர்ந்தது. “மாமா” என்று ஆவலாக வந்தவனை அணைத்து விடுவித்த நீரூபன், “இப்படி ஹேன்ட்சம்மா இருந்தா ஏன் என் தங்கச்சி உன்னை லவ் பண்ணாம இருக்கப் போறா?” என்று கேலி செய்தான். “யாரு நான் ஹேன்ட்சம்மா? வெள்ளை வேட்டி சட்டையில் பார்த்தப்ப கம்பீரமா இருந்தீங்க, இப்ப பார்மல் ட்ரெஸ்ல பளிச்சுன்னு இருக்கீங்க. என்ன ட்ரெஸ் பண்ணினாலும் சூட் ஆகவும் ஒரு கொடுப்பினை வேணும் மாமா. எனக்கெல்லாம் அது […]
அதிகாரம் 17 தன்னிடம் நீரூபன் பேசிய விஷயங்களை அசை போட்டபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள் அஞ்சனா. தம்பி மேல் அவளுக்குப் பாசம் இருக்கும் அளவுக்கு பொறாமையும் இருப்பது அவளுக்கே தெரிந்த ஒன்று தான். நாகரத்தினம் இந்த வீட்டில் நுழைந்தபோது அவரைத் தாயாக அல்ல ஒரு பணியாளர் அல்லது ஆயா என்ற நிலையில் கூட வைத்துப் பார்க்க மனம் வராமல் அவள் தவிக்க, அவனோ பிறந்த சில மாதங்களே ஆன குழந்தை என்பதால் இயல்பாக அவரோடு ஒன்றிக் கொண்டான். அரசியல்வாதியின் […]
அதிகாரம் 16 “அண்ணா நிஜமாவா சொல்ற? முருகப்பன் பெரியப்பா ஒத்துகிட்டாரா?” என்று விழி விரித்து ஆச்சரியமாக வினவினாள் நேத்ரா. “ஆமா டா நானும் முதல்ல யோசிச்சேன். ஆனா அவரை விட நல்ல சாய்ஸ் யாருமில்ல. அதான் கேட்டுப் பார்ப்போம்ன்னு போனேன். சரி செய்யறேன்னு சொல்லிட்டாரு.” என்று தங்கையிடம் ஆனந்தமாகக் கூறினான். “ஏன் அண்ணா அப்பா கிட்ட நான் ஹெல்ப் பண்ணுவேன்னு சொல்லிட்டு தானே வந்த? அப்பறம் ஏன் என் பேர் தெரிய வேண்டாம்னு இப்ப சொல்ற?” என்று […]
அதிகாரம் 15 என். என். குளோபல் தங்க எழுத்துக்களில் மின்னியது அந்த பெயர் பலகை. இரவில் விளக்கொளியில் மின்ன தேவையான விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பது பகலில் தெரியாத வண்ணம் அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்தது. நான்கு மாடிக் கட்டிடம் கண்ணாடியில் இழைத்தது போல வெயிலில் பட்டு பல வண்ணங்களை சிதற விட்டுக் கொண்டிருந்தது. தன்னுடைய லேண்ட்ரோவர் காரிலிருந்து பட்டுச் சேலை சரசக்க இறங்கி வந்தாள் அஞ்சனா. தம்பியின் அலுவலக கட்டிடம் கண்டு குளிர் கண்ணாடியைக் கழற்றி ஏறிட்டாள். காலையில் கட்சி அலுவலகம் […]
அதிகாரம் 14 தனக்காக புதிய அலுவலகம் ஒன்றை ஆரம்பித்திருந்தான் நீரூபன். எல்லாவற்றையும் பண்ணையில் அமர்ந்து செய்ய முடியாத காரணத்தினாலும், வரும் உள்ளாட்சி தேர்தலில் தந்தைக்கு ஆதரவாக ஏதாவது செய்ய கண்டிப்பாக நகரத்திற்குள் இருந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தவன் இதனைப் பற்றி நிறையவே யோசித்து இந்த முடிவை எடுத்திருந்தான். ஏற்கனவே இருந்த கட்டிடத்தை கம்பெனி பெயரில் வாங்கி புணரமைத்து தேவையான ஏற்பாடுகள் எல்லாமே மணீஷ் மூலம் செய்து விட்டான். ஆனால் இங்கே வராமல் பண்ணையில் இருந்தே அனைத்தையும் கவனித்துக் […]
அதிகாரம் 13 நகத்தைக் கடித்தபடி அமர்ந்திருந்த தோழியை முறைத்துக் கொண்டிருந்தான் ஆனந்த். அவனை வரவழைத்து அமர வைத்து அவள் வேடிக்கை காட்டுவது என்னவோ மாறி மாறி தெரியும் அவளது முகபாவங்களைத் தான். பொறுமையிழந்த ஆனந்த், “நான் கிளம்பவா?” என்று வண்டி சாவியை எடுத்தான். “மச்சி சும்மா இரு. நானே டென்ஷன்ல இருக்கேன்” என்று சிணுங்கிய தோழியை தயவுதாட்சண்யம் பார்க்காமல் பின் தலையில் பட்டென்று ஒரு அடி அடித்தான். “அவ்ளோ தான் உனக்கு சொல்லிட்டேன். நான் வேலை இல்லாதவன் […]
