அந்த மண்டபம் பூக்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. உணவின் நறுமணம், பூக்களின் நறுமணம், ஓடி ஆடும் குழந்தைகள், கூடிப் பேசிக்கொண்டிருந்த பெண்களின் சிரிப்பொலி என்று மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் அந்த அரங்கே நிறைந்து காணப்பட்டது. அழகிய ஆழ்ந்த நீல வண்ண கோட் சூட் அணிந்து சவரம் செய்யப்பட்டு அழகான முகவெட்டு அனைவரையும் மீண்டும் ஒருமுறை திருப்பிப் பார்க்க வைக்க, கம்பீரமாக நடந்து அம்மாண்டபத்தினுள் நுழைந்தான் அஜய் கிருஷ்ணா. அவனுக்கு அருகிலேயே கண்காணிப்பு பார்வையுடன் சீரான ஃபார்மல் உடையில் ரஞ்சித். […]
அத்தியாயம் 7 அவனது கூற்றை முழுமையாகக் கேட்ட வழக்கறிஞர்கள் அவனிடம் மீண்டும் அதே கேள்வியையே முன் வைத்தனர். “சரி சார். நீங்க சொல்றபடி பார்த்தாலும், அவர் காட்டிய எல்லா டாகுமென்ட்டுமே நிஜமானது தான் சார். எப்படி ஆவணம் போலின்னு சொல்ல முடியும் சொல்லுங்க?” “சார் அது என் அப்பா கையெழுத்து தான். நான் இல்லன்னு சொல்லல. ஆனா அதுல எழுதப்பட்ட எதுவுமே உண்மையா இருக்க வாய்பில்ல சார்.” என்றான் அழுத்தமாக. “சார் அப்ப உங்களுக்கு வயசு ரொம்ப […]
Life is what happens while you are busy making other plans. அஜய் கிருஷ்ணாவின் திட்டப்படி வைபவ் நியமித்திருந்த வக்கீல் குழுமம் முழுமையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்திருந்தான் ரஞ்சித். வைபவ் அவர்களை அழைக்கும்போது ரஞ்சித்தின் மிரட்டலால் எல்லாம் இயல்பாக இருப்பது போல அவர்களும் பேசி தங்களைக் காத்துக் கொண்டனர். அவர்களை சந்திக்க வந்த அஜய், “உங்களை கஷ்டப்படுத்தனும்னு எனக்கு எந்த நோக்கமும் இல்ல. எனக்கு இன்னும் ஒரு வாய்தா கண்டிப்பா வேணும். […]
அபிதா வீட்டிலிருந்து வெளியே வந்த அஜய்யின் முகம் பாறையைப் போல கடினமாக இருந்தது. ரஞ்சித் அவனிடம் எதையும் கேட்கவில்லை. அவன் முகம் தான் நிலைமையை பறைசாற்றிவிட்டதே. அஜய் நேராக தன் அலுவலகம் சென்று இருக்கையில் அமர்ந்தான். எதிரில் இருந்த பொருட்களை அடித்து உடைக்கும் அளவுக்கு அவனிடம் கோபம் கொட்டிக் கிடந்தது. ஆனால் இதையே எண்ணிக் கொண்டிருந்தால் இந்த மூன்று வருடமாக அவன் உழைத்த எதற்கும் மதிப்பில்லாமல் போய் விடும். அதனால் ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை எடுத்துக் கொண்டு […]
அஜய் கிருஷ்ணாவை நெருங்க முடியாமல் அனைவரும் தவித்தபடி இருந்தனர். இந்தியா திரும்பியது முதலே அவனது கவலையும் கோபமும் படிந்த முகம் அனைவரையும் அவ்வாறு நினைக்க வைத்தது. அஜய் தனது மனைவி தன்னை அழைப்பாள் என்று காத்துக்கிடக்க, அவளோ அவனை தொடர்பு கொள்வதை தவிர்த்துக் கொண்டே இருந்தாள். அவன் கைபேசியை பார்ப்பதும் பெரியவர் கூறிய விஷயங்களை கவனிப்பதுமாக இருந்தான். ரஞ்சித் அவனுடன் சென்றாலும் அவனை தொந்தரவு செய்யாமல் இருந்தான். அஜயின் பெற்றோர் இறந்தபோது அவர்கள் வீட்டில் பணிபுரிந்த விசுவாசமான […]
Amazing Ajay! வீட்டுக்குள் நுழைந்த நிமிடம் முதல் அங்கு குடிகொண்டிருக்கும் அந்த அசவுகர்யமான அமைதி அவனை படுத்தி எடுத்தது. அவனே விலகிச் சென்றாலும் அவனை சுற்றிச் சுற்றி வரும் அவன் மனைவி இல்லாமல் அந்த அமைதி அவனைக் கொன்றது. அவனாக அவளைத் தேடிச் சென்று காதல் கொள்ளவில்லை. அவளே அவனை நாடி வந்தாள். அவனைப் பற்றி அனைத்தும் தெரிந்து தான் காதல் புரிந்தாள். ஆனால் இன்று அவள் காட்டும் விலகலின் காரணம் தான் அவனுக்குப் புரியவில்லை. […]
கல்லூரி வளாகம் முழுவதும் பட்டாம்பூச்சிகள் வட்டமிட்டது போல அழகிய இளம்பெண்கள் சுற்றித் திரிய, அவர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்து பிறந்த பயனை அடைந்து கொண்டிருந்தனர் நம் இளைஞர் பட்டாளம். அதிலும் பி.காம் பிரிவில் இருக்கும் பெண்கள் எப்போது வருவார்கள் என்று காத்திருக்கும் கூட்டம் சற்று அதிகமே! அதற்கான முக்கிய காரணம் அவ்வகுப்பில் பயிலும் அந்த தேன்சிட்டு தான். அவளது பாந்தமான அழகைக் காணவே அவ்வகுப்பு மாணவிகள் வரும்போது வழியில் நிற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். “அதோ வரா […]
Love Tale of Abhi! நிசப்தமான அறையில் அந்த குரல் திடீரென ஒலித்ததில் ஏதோ சிந்தனை வலையினில் சிக்கிக் கொண்டிருந்த அபிதா நிமிர்ந்து குரல் வந்த திசையில் நோக்கினாள். “என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்க அபி நீ? மாப்பிள்ளை நாலு தடவை போன் பண்ணிட்டார். ஏன் உன் போனை ஆஃப் பண்ணி வச்சிருக்க?” தாயின் பேச்சை கேட்டதும் சூன்யமாக இருந்த அவளது முகம் மெல்ல ஒளிர்ந்து பின் வருத்தத்தை பூசிக் கொண்டது. “ம்ச்” என்று உதட்டை சுழித்து […]
