அமுதம் 50 அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அருணா தன் அருகிலே நின்ற கணவனின் கண்ணில் மகிழ்ச்சியையும் மீறி அவளின் வலியை உணர்ந்த புரிதலைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்தாள். அருணாவின் தாயும் வந்துவிட, அங்கே மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் போனது. குழந்தையைப் பார்க்க, கோதை ஆதியுடன் வந்திருந்தாள். தன் மேடிட ஆரம்பித்திருந்த வயிற்றின் மேல் குட்டி அகிலனை வைத்து கொஞ்சி,” பாப்பா சத்தம் கேக்குதா?” என்று கேட்க, குழந்தை பொக்கை வாய் தெரிய சிரித்தது. “அகி செல்லம்! குட்டி […]
அமுதம் 49 “சரி கோதை நீ கொஞ்ச நேரம் ஓய்வு எடு”, என்று அனைவரும் நகர, புவி மட்டும் கண்ணில் கண்ணீரை தேக்கியபடி அவளை பார்க்க, ஆதி அவனை அருகில் அழைத்தான். ஆதியின் மடியில் இருந்து இறங்கியவள், அவனை நெருங்கி அவன் கைகளைப் பிடிக்க, “அக்கா” என்ற அவன் விசும்பலே அவன் தன்னை காணாது துடித்த துடிப்பைச் சொல்ல, “டேய் பொடிப்பையா. என்ன டா அழுகற?” “அக்கா. உன்னை காணோம்னு நான் ரொம்ப ரொம்ப” எனும் போதே […]
அமுதம் 48 பிரவீன் அவன் கண்ணில் பட்ட சடலத்தைப் பார்த்து அலறிய அலறலில் அனைவருக்கும் குலைநடுங்கிப்போனது. அங்கே அவர்கள் கண்டது கோரமாய் ஏதோ ஒரு மிருகத்தால் அடித்து கொல்லப்பட்ட பெண்ணின் சடலத்தை தான். வனத்துறை ஆட்கள் அது பூங்கோதையா என்று பார்த்து கூறும்படி அழைக்க, அனைவரும் ஒரே குரலில் “இல்லை.. இது நீலா.” என்றனர். “அவங்க யாரு? யாரோ பூங்கோதை அவங்க தான் இந்த காட்டுக்குள்ள தொலைஞ்சு போனதா தகவல் வந்தது.” “ஆமா சார். ஆனா இவங்க […]
அமுதம் 47 ஆதியின் மனதில் இருக்கும் கொதிப்பு அவன் காரை கையாண்ட விதத்திலேயே தெரிந்தது. வளைவுகளில் கூட ஆசாத்ய வேகம். அவனுடன் வந்த ராகுல் அவ்வப்போது அவன் தோளினை அழுத்தி அவனை நிலையாக இருக்கக் கூறினான். ஆதியால் இன்னும் நம்ப முடியவில்லை. ‘அந்த சக்தி எப்படி சென்னையில் இருந்து தப்பினான்? நீலா அத்தை எங்கிருந்து திடீரென்று முளைத்தார்? அவருக்கு தன் மேலும் தன் மனைவி மேலும் ஏன் இந்த வெறி?’ கார் வசந்த இல்ல வாசலில் நின்றதும், […]
அமுதம் 46 ஆதிக்கு மனம் பரபரப்பாக இருந்தது. உடனே பூமாவைக் காண ஆவல் எழுந்தது. அது இயல்பாக கணவனுக்கு மனைவி மேல் வரும் காதலையும் தாண்டி, அவள் தனக்கு ஏதோ சர்ப்ரைஸ் என்று சஸ்பென்ஸ் வைத்தால் ஒரு உந்துதல் வர, மனைவியைக் காணும் ஆசையில் எஸ்டேட் பங்களா நோக்கி விரைந்தான். ஆனால் போகப் போக மனம் ஒரு வித சஞ்சலத்துக்கு ஆளானது. எஸ்டேட் வாயிலுக்கு கொஞ்ச தூரம் முன்னாலே ஏதோ ஒரு வண்டி கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக […]
அமுதம் 45 அன்று காலையில் எழுந்தது முதலே கோதை சோர்வாக உணர்ந்தாள். ஆதி மீட்டிங் ஒன்றிற்கு கோவை சென்றிருந்தான். அவன் டீ பாக்டரிக்கு கோதை ஆள் அனுப்பினாள், ரிசார்ட்டில் உள்ள ரெஸ்ட்டாரெண்ட்டுக்கு அங்கிருந்து தினமும் டீத்தூள் அனுப்ப சொன்னதால், அவன் பிராண்ட் ரிசார்ட்டிற்கு வருவோருக்கு தெரிந்துபோனது, அதன் தரத்தால், அங்கேயே சின்ன விற்பனை நிலையம் ஆரம்பித்து வைத்தாள். ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து செய்தாள் கோதை. அனைவரும் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்க, ஆதியோ அவளை தலை மேல் […]
அமுதம் 44 ஆதி போனை எடுக்க மாட்டான் என்று நினைக்க, அவன் தன் மனையாள் எப்போது அழைத்தாலும் தான் பதில் சொல்லாது போனால் வருந்துவாள் என்று அவள் அழைப்பு வந்தால் ஆட்டோ ஆன்சரில் வைத்திருந்தான். இப்போதும் அது தானே அவள் காலை கனெக்ட் செய்திருக்க, அந்த பக்க அமைதியை புரிந்துகொண்ட கோதை, “அத்தான் அத்தான் “,என்று மெதுவாக அழைத்த வண்ணம் இருந்தாள்.. அவன் ஒரு கட்டத்தில் அவளின் அழைப்புக்குரல் கேட்டு போனை காதில் வைத்தவன், “பூமா”, என்றான். […]
அமுதம் 43 பூங்கோதையின் சொல்லுக்கிணங்க உடனே ரிசார்ட் திறப்பு விழா வேலைகள் நடந்தது. அவளால் அலைய முடியாத காரணத்தால் அவள் வீட்டிலிருந்தே அனைத்தையும் மேற்பார்வை பார்த்தாள். அன்று காலை ஆதியும் நவியும் கோத்தகிரி போய் முகிலனைப் பார்த்து போதை கடத்தல் கும்பலுடன் அவன் எப்படி சேர்ந்தான் எனக் கேட்க, அவனோ நீளமாக கதையளந்தான். “வேண்டாததை பேசாதே டா. கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு.” “சுஜி கடத்தலுக்கு அப்பறம் நான் டிரக்ஃஸ் கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்பறம் இங்க […]
அமுதம் 42 ஜோதிலிங்கம் தாத்தா ஊட்டியை நெருங்கி விட்டதாக சொன்னதும், ஆதி எஸ்டேட்டில் இருந்து கிளம்பி வந்தான். தாத்தா நேராக வீட்டிற்கு வராமல் ஆதியை வேறு இடத்திற்கு வரச் சொன்னார். ஆதிக்கு மனதில் நெருடல் இருந்தாலும் தாத்தாவின் சொல்லுக்கிணங்க அவன் ஒரு இடத்தைச் சொல்லி வரச் சொன்னான். அவன் காத்திருந்த ஒவ்வொரு நொடியும் யுகம் போல இருக்க, தாத்தா போர்ஸ் ட்ரவெலர்ரில் இருந்து இறங்கவும் ஆதி குழப்பமானான்.‘ஒருவருக்கு எதற்கு வேன்?’ என்று. ஆனால் தாத்தா அவனை உள்ளே […]
அமுதம் 41 ஆதி சக்தியின் வார்த்தைகளை கவனிக்கத் தவறினான். அவன் சற்று யோசித்திருந்தாலும் அவன் கண்டுகொண்டிருப்பான். சக்தியை கவனமாக இதே வீட்டில் வைத்திருக்கும் படி அந்த நிறுவன ஆட்களுக்கு உத்தரவிட்டு விட்டு, பார்வதி பாட்டி, தமயந்தி, லட்சுமியை அழைத்து கொண்டு ஊட்டிக்கு விரைந்தான். அவனால் பூமாவை பார்க்காமல் இருக்க முடியவில்லை. மூளை வேலை நிறுத்தம் செய்வது போல உணர்ந்தான். தாத்தாவின் பாதுகாப்பிற்கு நிறுவன ஆட்களையும், உதவிக்கு தனக்கு தெரிந்த சிலரையும் கவனித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ஊட்டியை நோக்கி ஆவலாய் […]
