அதிகாரம் 11 தன்னிடம் பேச வந்துவிட்டு தன் மடிக்கணினியில் கவனமாக இருந்த நேத்ராவை முறைத்துக் கொண்டிருந்தான் வசீகரன். அவளோ அண்ணன் தன்னிடம் கொடுத்த வேலைக்காக கருமமே கண்ணாக ஆயத்தப் பணிகளில் மூழ்கி இருந்தாள். வாங்கி வைத்திருந்த மோஜிடோ தன் குளிர்ச்சியை இழந்திருந்தது போல வசீகரனும் பொறுமை இழந்து போயிருந்தான். “ஏய் ஐஸ்.. நான் கிளம்புறேன் நீ உன் லேப்டாப் கூடவே ஜாலியா இரு” என்று கூறிவிட்டு எழுந்து கொண்டான். “வசீ.. பிளீஸ் உட்காரு டா. டூ மினிட்ஸ்ல […]
அதிகாரம் 10 இரவில் தன் படுக்கையில் படுத்திருந்த நீரூபனின் மனதில் பல எண்ணங்களின் ஓட்டம். அவன் எண்ணமெல்லாம் புதிய பள்ளியின் திறப்புக்கு முன் செய்ய வேண்டிய ஆயத்தப் பணிகளைப் பற்றியே இருந்தது. நேத்ராவிடம் வலைதள வடிவமைப்பை கொடுத்துவிட்டான். இனி பள்ளிக்கு கட்டிட மறுசீரமைப்பு, ஆசிரியர் தேர்வு, தவிர வேறு என்னவென்று மனதில் கணக்கிட்டான். அப்படியே உறங்கிப்போனான். அவன் உறங்கிய பின் அவனறைக் கதவைத் தட்டிப் பார்த்துவிட்டு உள்ளே வந்த அஞ்சனா அவன் தூங்குவதைக் கண்டாள். அருகே சென்று […]
அதிகாரம் 9 ஜீப்பை ஓட்டிக் கொண்டிருந்த நீரூபன் மனதில் வந்து போனாள் பூமிகா. அவளை அவன் முதன் முதலில் பார்த்தது அவளது காது குத்தும் நிகழ்வில் தான். சிறு குழந்தையாக வெண்ணெய் கட்டி போல இருந்தவள் தலையில் முடி இல்லாது மொட்டை அடித்திருக்க, சந்தனம் பூசப்பட்ட அதனை அவ்வப்போது தடவிப் பார்த்து அழுது கொண்டிருந்தாள். தலைமுடிக்கே அழும் இவள் காதில் ஓட்டை போடும்போது என்ன செய்வாளோ என்று பார்த்திருந்த நீரூபனுக்கு வயது ஒன்பது. நேத்ராவுக்கும் பூமிகாவுக்கும் சில […]
அதிகாரம் 8 மதிய நேரத்தில் வீட்டில் உணவு உண்ணுவது என்பது ஒரு அலாதி சுகம். அதிலும் தாயின் கையால் பரிமாறப்படும் சூடான உணவு கண்டிப்பாக சுவையில் பஞ்சமே இருக்காது. வாரத்தில் இரண்டு நாட்களாவது நீரூபன் மதிய உணவுக்கு வீட்டிற்கு வந்து விடுவான். அதில் கூடுதல் வசதி என்னவென்றால் அவன் மனம் போல நாகரத்தினத்திடம் உரையாட முடியும். யாரும் குறுக்கே பேசி தடுப்பதோ, தொலைவில் நின்று முறைப்பதோ இன்றி இருவரும் மனம் விட்டுக் கேலியாக பேசி நேரம் செலவு […]
அதிகாரம் 7 கல்வி அலுவலர் முன் அமர்ந்திருந்த நீரூபனின் முகத்தில் மருந்துக்கும் இளக்கம் இல்லை. அவன் எதிர்க்கட்சித் தலைவர் மகன் என்று தெரிந்ததும் அந்த அலுவலர் செய்த செயலில் கடும் கோபத்தில் இருந்தவன் நேராக இப்பொழுது ஆட்சியில் இருக்கும் கல்வி அமைச்சர்களுக்கு போன் செய்து பேசிவிட அவர் அலுவலரிடம் என்ன பேசினாரோ இங்கே அவர் நீரூபன் முன் பணிவாக வந்து தன் அறைக்கு அழைத்துச் சென்றிருந்தார். “சார் சாரி. வேணும்ன்னு உங்களை காக்க வைக்கல” என்று கல்வி […]
அதிகாரம் 6 அஞ்சனாவின் தலையீட்டால் மிகவும் கோபத்தில் இருந்தார் கோதண்டம். திருமூர்த்திக்கு அடுத்த நிலையில் கட்சியில் முக்கியமான ஆட்கள் நான்கு பேர். கோதண்டம், சேலம் சேகர் ராஜா, மலைச்சாமி, ஆலந்தூர் ஆறுமுகம். திருமூர்த்தி இவர்கள் நால்வரையும் நல்ல மரியாதையுடன் நடத்துவார். திருமூர்த்தி ஆட்சியில் இருந்த காலத்தில் பொதுப்பணித்துறை, தகவல்தொடர்பு, நிதி அமைச்சகம், வேளாண்துறை, கல்வித்துறை, மின்சாரம் என்று முக்கியப் பொறுப்புகள் அனைத்தும் இவர்களிடம் தான் இருக்கும். சுற்றுப்பயணம் செல்லும் போது அவசர முடிவுகளை இவர்களே கூடி எடுக்கும் […]
அதிகாரம் 4 தன்னுடைய அறையில் சஞ்சலம் நிறைந்தவளாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள் அஞ்சனா. நீரூபனின் செயல்கள் அவளுக்கு எரிச்சலையும் கோபத்தையும் கொடுத்திருந்தது. அதிலும் அவன் தைரியமாக நில அபகரிப்பு, தொழில் பெருக்கம் என்று தன் வழியில் செல்லச் செல்ல, அது அரசியல் நோக்கி அவன் வைக்கும் அடிகளோ என்ற எண்ணம் அழுத்தமாக அஞ்சனாவை ஆட்கொண்டது. அன்னையின் மறைவுக்குப் பின் நாகரத்தினத்தின் வரவால் கோபம் அதிகமான அஞ்சனா தந்தையை மாற்றாந்தாயிடம் நெருங்க விடாமல் இருக்க எப்பொழுதும் அவரை […]
அதிகாரம் 3 “ஷா லா லா ஷா லா லாரெட்டை வால் வெண்ணிலாஎன்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா செ செ செ செவ்வந்திஎன் தோழி சாமந்திவெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்திகொட்டும் அருவி வி விஎன்னை தழுவி வி விஅள்ளிக்கொள்ள ஆசை கள்வன் எங்கே வருவானோ ஷா லா லா ஷா லா லாரெட்டை வால் வெண்ணிலாஎன்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா” ஹோம் தியேட்டர் 5.1 இல் பாடல் வீட்டையே அதிர வைத்துக் கொண்டிருந்தது. […]
அதிகாரம் 2 நீரூபன் அலுவலகக் கட்டிடத்திற்குள் நுழைய, மரியாதை நிமித்தமாக எழுந்து நின்ற பழனியைக் கண்டு, “தாத்தா சும்மா சும்மா எழுந்து நிற்காதீங்க. உட்காருங்க.” என்றவன் பின் யோசனையாக, “எல்லாரையும் சாப்பிட போக சொல்லிட்டேன். ஆனா இன்னும் எதையாவது பறிச்சுக்கிட்டு நின்னுட்டு இருப்பாங்க. நீங்க போய் அதட்டி சாப்பாட்டு ஹாலுக்கு கூட்டிட்டு போங்க. நீங்களும் சாப்பிட்டு நிதானமா வாங்க என்ன?” என்று அவரது டேபிளின் இருபுறமும் கையூன்றி கூறினான் நீரூபன். அவனது குரலில் அத்தனை மென்மை. பழனியின் […]
அதிகாரம் 1 சென்னையின் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் தனது விலை உயர்ந்த காரில் வெயிலின் கசகசப்பு இல்லாமல் ஏசியில் அமர்ந்து வந்து கொண்டிருந்தார் எம்.எல்.ஏ கோதண்டம். அவர் அருகில் அமர்ந்திருந்த அவரது மகன் சந்திரன் தன் தந்தையிடம் புலம்பியபடி வந்தான். “ஏன் பா இப்படி பண்றீங்க? என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க பா. உங்க பார்ட்டி ஆபிஸ் வந்து நான் என்ன பண்ண போறேன்? எனக்கு அங்க பார்ட்டி ரெடி பண்ணி வச்சு […]
