“The measure of intelligence is the ability to change.” — Albert Einstein

அமுதம் 8
அன்று மாலை ஒவ்வொருவராக வீடு நோக்கி திரும்பினர். மணி 8 அடிக்க லட்சுமி பதைப்பதைப்பாக வாசலுக்கும் உள்ளுக்கும் அலைந்தார். இன்னும் கோதையும்,சுஜியும் வரவில்லை. ஆதி ஆண்மகன் அவன் திரும்பாதது ஒன்றுமில்லை. அவர்களின் கவலையே பெண் பிள்ளைகள் பற்றித்தான்.
ஷியாம் அன்றும் கேம்ப் முடிந்து ரெஃப்ரெஸ் செய்து சாப்பிட வந்தவன், அம்மாவிடன் கலக்கம் தெரிய அவரிடம் விசாரித்து தெரிந்துகொண்டான். “எனக்கு ஒரு போன் பண்ணி சொல்லிருந்தா நான் வரும்போதே பார்த்துருப்பேன் அம்மா.”
அதற்குள் வீட்டு லேண்ட்லைன் போன் அலற, வேகமாக சென்று எடுத்த லட்சுமி மயங்கி சரிந்தாள்.
“அம்மா”, என்ற ஷியாமின் அலறல் கேட்டு மொத்த குடும்பமும் கூடத்தை அடைந்தது. மீனாட்சி லட்சுமியை மயக்கம் தெளிய வைக்க, அவர் சொன்னது அங்கிருந்த அனைவரையும் மிரளச் செய்தது..
ஆம் இணை கமிஷனர் மகள் சுஜி அவர் விரோதிகளால் வெற்றிகரமாக கடத்தப் பட்டிருந்தாள்.
விஷயம் தெரிந்த கதிரும், சுந்தரும் லட்சுமியிடன் என்ன சொல்வது, பிள்ளையை எப்படி மீட்பது என்று கலங்கி நின்ற நொடி,
“அப்பா”, என்று ஷ்யாமின் குரல் கர்ஜனை செய்ய,” உங்களுக்கு த்ரெட் இருக்குன்னு முன்னமே தெரியுமா?”
அவர்கள் இருவரும் ஆம் என்பதுபோல் தலை அசைக்க, அப்போது கதிரின் கைபேசிக்கு அழைத்தான் அந்த விரோதி,
“என்ன ஜாய்ண்ட் கமிஷனர் சார். பொண்ணை காணோம்ன்னு வீட்டு அம்மா அழுகுதா.. நல்ல கேட்டுக்கோ, நீயோ உன் வீட்டுல இருக்கற மனுஷங்களோ வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. வெளில என் ஆளுங்க இருக்காங்க. அவங்க உங்களை கண்காணிச்சிட்டே இருப்பாங்க. உங்க போனயும் நம்ம கம்ப்யூட்டர் பசங்க பாக்குறானுங்க. அதுனால நீ வாய மூடிட்டு வீட்ல உக்காரு உன் போலீஸ் புத்தியை பயன்படுத்தி பார்த்த.. உன் பொண்ணு நாளைக்கு நீ அள்ளி எடுத்துட்டு போற நிலைமையில் தான் உனக்கு கிடைப்பா. பார்த்துக்க. ஒழுங்கா வீட்டோட இருக்கணும்.என் வேலை முடியற வரைக்கும் நீயும் உங்க கமிஷனரும் வெளிய வரக்கூடாது. வெளில விஷயம் கசிஞ்சுச்சு..”
வைத்துவிட்டான்.
ஷியாம் கோபமாக தந்தை முன் வந்தவன், “உங்களுக்கு கேஸ்ல பிரச்சனைன்னா வீட்ல இருக்கறவங்களை பத்திரமா இருக்கசொல்லி சொல்லணும்ன்னு தோணலையா. இந்த காலத்துல எவன் நேரில் எதிர்த்து நிக்கிறான். பேடிபயலுங்க வீட்ல இருக்கற பொண்ணுங்களைத் தானே பகடையா யூஸ் பண்றாங்க. சொல்லிருந்தா சுஜி, கோதை, மதி எல்லாரையும் நான் பத்திரமா பார்த்திருப்பேனே..”
ஷியாம் அமைதியானவன் தான். அதுவும் மருத்துவத்துறை தேர்ந்தெடுத்தபின் அவ்வளவு எளிதில் கோவம் கொள்ளாதவன். இன்று வெறிகொண்டு கத்திக்கொண்டிருந்தான்.
அப்போது அவன் போன் அடித்தது. அதில் கோதை பெயரை கண்டதும் துணுக்குற்றவன், “கோதை உனக்கொண்ணும் இல்லையே.. “,என்றிட, தெருமுனையிலேயே தடியர்கள் பலர் இருக்கும் வாகனம் கண்ணில் பட்டதால் பக்கத்தில் இருக்கும் கோவில் சுவரின் பின்னால் நின்று ஷ்யாமிற்கு போன் செய்தவள், அங்கு ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்தாள்.
அமைதியான குரலில், “ஷியாம் நான் சொல்றதை பொறுமையாய் கேளு, குறுக்கே பேசாதே. உனக்குத் தெரியுமா இன்னிக்கு எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு. நான் வர லேட்டா ஆகலாம். ஆனா கண்டிப்பா நீ கேட்டதை வாங்கிட்டு வந்துடறேன். அத்தையை கவலைப்பட வேண்டாம்ன்னு சொல்லு. மதி, சுஜி சாப்பிட்டாங்களா சொல்லு.”
ஷ்யாமிற்கு இது போன்ற தருணங்களை கையாள கதிரும் கற்றுத்தந்திருந்தார்.
அவள் சொல்ல வருவது மேலோட்டமாக புரியவில்லை இருந்தாலும் உள்நோக்கத்துடன் கேட்பதால்,” ம்ம் மதி சாப்பிட்டா. சுஜி தான் வரலை.”
சுஜிக்கு தான் பிரச்சனை என்பதை
சூசகமாக அவனும் உரைத்தான்.
“சரி கவலைப்படாத. கிளாஸ் முடிஞ்சதும் நான் கூட்டிட்டு வரேன். “,என்று வைத்துவிட்டாள்.
வந்த வேகத்தில் வண்டியுடன் நாலு தெரு தள்ளிச் சென்று யோசிக்கலானாள்.
அவள் அப்பா சொல்லி இருக்கிறார், தன் வேலை ரிஸ்க் என்பதால் அதில் குடும்பமும் பாதிக்கும், அதனால் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும் என்று போதித்து தான் வளர்த்தார். தங்கள் செல்போன்களும் டாப் செய்யப்படலாம், அதனால் எப்பொழுதும் சந்தேக சூழ்நிலையில் நேரடி விவரங்கள் பேச கூடாது என்றும் உரைத்திருந்தார்.
தெருமுனையில் என்றும் இல்லா திருநாளாய் குண்டர்கள் பலர் இருக்க, சுதாரித்த கோதை, ஷ்யாமிற்கு அழைத்து சூசகமாய் யார் வீட்டில் இல்லை, நான் அழைத்து வருகிறேன் என்று சொல்லி வைத்துவிட்டாள். ஆனால் எப்படி என்று யோசிக்க, சட்டென்று ஆதி இன்னும் வீடு திரும்பி இருக்க மாட்டான் என்று அவனுக்கு கால் செய்ய நினைத்தாள். தன் மொபைல் பேச்சுக்கள் ஓட்டுக்கேட்கப் படலாம் என்ற சந்தேகம் வந்ததும். தன் நண்பர்கள் இன்பா,பிரவீன், ராகுல் மூவருக்கும் அழைத்து,
“டேய் என் வீட்டுக்கு பக்கத்துல தன் இருக்கேன் டா. வண்டி பஞ்சர். கொஞ்சம் வாங்க டா.”
இவள் இப்படி தங்களை அழைப்பவள் அல்ல என்பதால் அவளிடம் ஏதும் பேசாது, அவள் வீட்டுக்கு செல்லும் பாதையில் கவனம் வைத்தபடி வந்தனர். அவர்கள் வந்ததும் இன்பாவின் போனை வாங்கி ஆதிக்கு அழைத்து விவரத்தை கூறியவள் உடனே வரச்சொன்னாள். அதற்குள் திட்டம் வகுத்தனர் நால்வரும், அவன் வந்ததும் தன் ஐடியாவை சொன்னாள், முதலில் பயந்து தயங்கிய ஆதி பின் சுஜியின் நலன் கருதி அந்த திட்டத்திற்கு சம்மதித்தான்.
அவர்கள் திட்டப்படி இன்பா கோதை வீட்டிற்கும், ராகுல் கமிஷனர் ஆபிசுகும், ஆதி,பிரவீன் தங்கள் வண்டிகளுடன் தடியர்கள் நின்ற தெருவுக்கு அடுத்த தெருவில் நிற்க, ஒய்யாரமாய் நடை போட்டு கோதை குண்டர்கள் இருக்கும் வண்டியை சமீபித்தாள்.
தன் ஸ்கூட்டியை தள்ளிய படி அவர்களின் வண்டிக்கு பக்கத்தில் வரும்போது,”இந்த சுஜிக்குட்டி எங்க போனா.. எனக்கு பயம்மா இருக்கு. அப்பா வேற ஆபிஸ்ல பிரோப்ளேம் அதுனால கவனமா இருங்க ன்னு சொன்னாரு.. உங்க யாரை பிடிச்சு வச்சாலும் அவன் நெனச்சத சாதிக்க முடியாதுன்னு கத்திட்டு இருந்தாரு. ஒருவேளை சுஜியை கடத்திடங்களோ… அவள கடத்தி பிரயோஜனமே இல்லையே.. அவ ஜாய்ண்ட் கமிஷனர் பொண்ணு. கதிர் மாமா அவனுக்கு பணிஞ்சாலும் எங்கப்பா பணிய மாட்டாரே… என்ன கடத்திருந்தா கூட ஓக்கே..”,என்று அவள் சொல்லி முடிப்பதற்குள், அவள் வாயை பொத்தி காருக்குள் போட்டனர்.
ஒருவனை மட்டும் அங்கு நிறுத்திவிட்டு கார் அவன் முதலாளியின் மறைவிடம் நோக்கி சீறிப் பாய்ந்தது.
அடுத்த 2 மணி நேரத்தில் ஆதி, கோதை இருவரும் நடுங்கும் சுஜியுடன் வீட்டிற்குள் நுழைந்தனர்.
பெரியவர்கள் விழிவிரிய சுஜியை பார்க்க அவளோ கோதையை விட்டு சற்றும் நகராமல் மிரண்ட விழிகளுடன் நின்றாள்.
ஷியாம் ஓடி வந்து சுஜியை அணைத்துக்கொண்டான். சுஜி அவன் தோளில் சாய்ந்து அழுதாள். இயல்பிலேயே பயந்த சுபாவமுடைய சுஜி இன்று நடுங்கிக் கொண்டு பயத்தின் உச்சியில் இருந்தாள்.

அமுதங்களால் நிறைந்தேன்..!
எழுத்தாளர்: ஜெயலட்சுமி கார்த்திக்
(அத்தியாயம் – 8)
அட… இந்த மேஜீக் எப்படி நடந்துச்சு, அத்தனை ஆம்பிளைங்களால முடியாததை சிங்கிள் பெண்ணா, இந்த சிங்கப் பெண் எப்படி சாதிச்சு காட்டினான்னு தெரியலையே.. இட்ஸ் எ மிராக்கிள்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
வாவ், கோதை சூப்பர்👌👌👌👌
thanks ma
👌👌👌👌👌👌 interesting
👌👌👌👌👌