Amudham 5

Habit is either the best of servants or the worst of masters!

Amudham

அமுதம் 5

போலீஸ் ஹெட் குவார்டர்ஸ்

கதிர்,மற்றும் அவர் சகாக்கள் கைகட்டி நிற்க, சுந்தர் அவரை கோபமாய் திட்டிக் கொண்டிருந்தார்.

“நான் அவ்ளோ தூரம் சொன்னேனே கதிர், அவசரப் படவேண்டாமுன்னு. இப்போ பாருங்க.”

“இல்ல சார். எவிட்டேன்ஸ் இருந்ததுனால தான் ஆக்ஷன் எடுத்தேன்.”

“நான் சொன்னேனே அவன் உங்ககிட்ட இருக்கற எவிட்டேன்ஸ் எல்லாத்தையும் பஞ்சு போல ஊதுவான்னு.. கேக்கலையே நீங்க. இப்போ அவன் ஊதல, அதுவே காத்துக்கு பறந்துபோச்சு, உங்க எவிட்டேன்ஸயே காணோம்.”

“இல்ல சார். நம்ம பக்கத்துலேயே இருந்து யாரோ விளையாடிடாங்க.”

“இருக்கலாம். ஆனா இப்போ அவன் அடிபட்ட பாம்பு. மறந்துடாதீங்க. நம்ம பக்கத்துல இருக்கற கருப்பு ஆடு .. தானே மாட்டும். ஆனா நாம யாரும் அவன் வலையில் மாட்ட கூடாது. கவனமா இருங்க. யு மே கோ நவ்.”

அவர்களின் சகாக்கள் சென்றதும், கதிர்,

“மச்சான்..”

“இல்ல கதிர். நான் சொன்னதை நீ கேட்டிருக்கனும். இப்போ எல்லாரும் மாமன் மச்சான் அதான் இப்பிடிலாம் பண்றானுங்க அப்டின்னு பேசுவாங்க.”

“இல்ல மச்சான். நான் வேற செய்ய தான் பிளான் போட்டேன். மாறிப்போனது.”

“விடு. இனிமே நாம ஜாக்கிரதையா இருக்கணும். இப்போ கிளம்பு.”


பூங்கோதை முகிலனை முற்றிலும் தவிர்த்தாள். அது அவளின் குணம். அன்பு வைப்பதில் வள்ளல் அவள், தன்னை தவறாக நினைப்பவரை திரும்பியும் பார்க்க மாட்டாள். முகிலன் என்ற ஒரு ஜென்மம் அந்த வீட்டில் இருப்பது அவள் கண்களுக்கு புலப்படாததைப் போலத்தான் நடந்தாள்.

ஆனால் ஆதியிடம் மிகுந்த அன்புடன் அத்தான் அத்தான் என்று அவன் பின்னே அலைந்து, அவனின் டீ தொழிற்சாலைக்கு தேவையான சில நுணுக்கங்களை அறிய தன் நண்பர்க் கூட்டம் மூலம் சில தொழிற்சாலைகளுக்கு உள்ளே சென்று கற்றுக்கொள்ளும் வகையில் பாஸ்கள் வாங்கித்தந்தாள்.

வீட்டில் உள்ளவர்கள் அவள் ஆதியுடன் பழகுவது பற்றி தவறாக நினைக்க வில்லை. முன்பே அனைவரிடமும் பேசி அனுமதி பெற்றுவிட்டாள் அந்த வாலு.
அவள் செயல்கள் ஆதியின் எதிர்கால லட்சியத்திற்கு உதவும் என்பதால் யாரும் அவளை ஒன்றும் சொல்லவில்லை.

அடுத்து வந்த நாட்கள் ஆதிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. வந்ததும் கிளம்பிவிடும் எண்ணத்துடன் வந்த ஆதியை பூங்கோதையின் அன்பு கட்டிப் போட்டது. வந்த நாள் தொட்டு அவள் வீட்டிலுள்ள அனைவரிடமும் நடக்கும் விதம், அவள் நகைச்சுவை, சேட்டை என்று ஒவ்வொன்றையும் ஆதி ரசித்து வந்தான். அவள் மனிதர்களை எடை போடும் விதம் ஆதியை வியக்க வைத்தது.

தனக்காக அவள் செய்யும் செயல்கள் அவனுக்கு ஒரு வித கூச்சம் கூட வந்துவிட்டது. இவளுக்கு இன்று வரை தான் ஒன்றும் செய்ததில்லை என்பது கடைசியாய் தான் அவனுக்கு உரைத்தது.

அடுத்தநாள் காலை வழமை போல எழுந்து லட்சுமியிடம் காபியை பெற்று சுந்தர்,கதிருடன் பேசிவிட்டு தோட்டத்துக்கு வந்தவன் கண்கள் யோசனைக்கு சென்றது. அங்கு கோதை ஒளிந்து நின்று முல்லைப்பந்தலைப் பார்த்திருந்தாள். அவள் என்ன பார்க்கிறாள் என்று கண்டவனுக்கு வெட்கமாய் போய் விட்டது..

முல்லைப்பந்தலுக்கு கீழ் கல் மேடை உண்டு. அதில் அருணா அமர்ந்திருக்க, அவள் தோள் மேல் தலை சாய்த்து அகிலன் ஏதோ பேசிக்கொண்டிருந்தன்.

ஆதிக்கோ இவள் ஏன் அவர்களின் தனிமையை கவனிக்கிறாள் என்ற ஐயம் வர, கோதையின் கை பற்றி சற்று தள்ளி இழுத்து வந்தவன்

“பூமா, நீ ஏன் மனேர்ஸ் இல்லாம கணவன் மனைவி பேசுறதை போய் கேக்குற..”

“அட கிராக்கு அத்தான், வா வந்து நீயும் கேளு..”

“இல்லஇல்ல நான் கேட்கமாட்டேன். நீயும் கேக்க கூடாது”, அழுத்தமாய் சொன்னான்.

“அட கடவுளே. கொஞ்சம் பேசாம வா.”

பழைய இடத்திற்கே அழைத்து சென்று “கேளு “,என்றாள்.

அங்கு அருணாவிடம் அகில் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

“ப்ளீஸ் அரு.. புரிஞ்சுக்கோ டா.”

“எத்தனை தரம் இதையே சொல்லுவிங்க அகி.”

“ப்ளீஸ் டீ.. நான் பாவம் இல்லையா.. ஒன்னே ஒன்னு தான கேட்டேன்..”

“அடேய் அறிவுகெட்ட புருஷா, முடியாது.”

ஆதிக்கு நெஞ்சம் எகிறி விட்டது.ஐயோ அனியோனியமாய் பேசிக்கொண்டிருக்கும் தம்பதிகளை போய் கவனிக்க வைக்கிறாளே..
மெதுவாய் அவளை..” பூமா பூமா “,என்று சுரண்டினான்.

ஆனால் கோதை அதெல்லாம் சட்டை செய்யாமல் கவனமாய் இருந்தாள் அகிலிடம்..

“ஏண்டி நான் என்ன வேணும்ன்னா அப்படி செஞ்சேன். அதுக்காக இப்படி பண்றியே.”

“இங்க பாரு அகி. உனக்கு வேணும்னா இதெல்லாம் பரவால்லன்னு தோணும் எனக்கு அப்படி இல்லை. நான் கண்டிப்பா இன்னிக்கு உனக்கு தர மாட்டேன்.”

இவர்கள் பேசிக்கொண்டிருக்க, மெதுவாய் அவர்கள் பக்கம் வந்த கோதை..

“நான் கூட நீ தந்துடுவியோன்னு நெனச்சேன் அரு குட்டி. நீ தான் குட் கேர்ள்.”, என்று அகில் மேல் சாய்ந்தபடி சொல்ல ..

ஆதிக்கு இதயம் நின்று துடித்தது. இவள் என்னதான் செய்கிறாள்..

ஆனால் அகியோ இயல்பான குரலில் ,”போ கோதை எல்லாம் உன்னால வந்தது. அப்போ இருந்து கெஞ்சுறேன். இவ மனசு இறங்க மாட்டேங்கறா.”

ஆதிக்கு தலை சுற்ற, அகியின் முன் வந்தவன், “ப்ரோ என்ன நடக்குது இங்க..”

“ஐயோ நீ எங்கே இங்க.. என் க்ரைம் ரேட் கூடுதே..”

“சொல்லுங்க ப்ரோ.”

“இல்ல ஆதி வெயில், காடு ,மேடு, வண்டி என்று நாள் முழுசும் அலையறேன். அதுனால கல்யாணத்துக்கு முன்னாடி நைட் ஒரு பெக் சரக்கடிப்பேன். கல்யாணத்துக்கு அப்பறம் அரு நோ சொல்லிட்டா. ஆனா கெஞ்சி கேட்டு சனிக்கிழமை மட்டும் பெர்மிஷன் வாங்கிருந்தேன். லாஸ்ட் வீக் என் பிரென்ட் பார்ட்டி போய்ட்டு அன்னைக்கு ஒரு பெக் எடுத்துட்டேன். இவளுக்கு தெரியாம வீட்டுக்கு வந்து படுத்துட்டேன். எப்பிடியோ இதை இந்த பிசாசு தெரிஞ்சுகிட்டு அரு கிட்ட போட்டு குடுத்துடா.. நானும் ஒன் ஹவரா கெஞ்சுறேன். இன்னிக்கு சனிக்கிழமை.. அரு இப்போ நோ சொல்லிட்டா ஆதி…”, அவன் குரலில் அவ்வளவு சோகம்.

இப்போது ஆதி சிரிக்க ஆரம்பித்தான். “ப்ரோ அதுல அப்படி என்ன ப்ரோ இருக்கு.. அண்ணி இன்னிக்கு ப்ரோவை என்கிட்ட விட்ருங்க. கண்டிப்பா அந்த ஒரு பெக் சரக்கடிக்காம நான் பாத்துக்கறேன்..”

“யூ டூ புரூட்டஸ்.. “,கத்தினான் அகில்.

“இவரோட இந்த பழக்கம் எனக்கு பிடிக்கல ஆதி. ஆனா இவர் பாவமா மூஞ்சியை வச்சிட்டு கேக்கும்போது எனக்கு ஒன்னும் சொல்ல முடில. “

“அண்ணி நீங்க ஒரு டீச்சர். நீங்களே இப்படி பேசலாமா..”

“ஆதி நான் ஒன்னும் மொடா குடியன் இல்ல பா.”

“இருக்கட்டும் ப்ரோ அந்த ஒரு பெக் எதுக்கு.. அதுக்கு பதிலா நான் இன்னிக்கு உங்களுக்கு வேற ஐடியா தரவா?”

அரு ஆர்வமாய், “சொல்லு ஆதி”, என்க

“சஸ்பென்ஸ்.. நீங்க இன்னிக்கு ஸ்கூல் போகணும் தான.. கிளம்புங்க.. அண்ணா நீங்களும் தான். சரியா 8 மணிக்கு மொட்டை மாடிக்கு வந்திடுங்க.”

“சரி “,என்று இருவரும் விடைபெற்றனர்.

பூங்கோதையிடம் வந்த ஆதி ,”நீ தான் பூமா எனக்கு ஹெல்ப் பண்ணனும்.”

“என்ன பண்ணனும்னு சொல்லுங்க அத்தான். எனக்கு அகி செல்லம் இப்படி பண்றது பிடிக்கல. அதன் அரு கிட்ட மாட்டி விட்டேன்.அகிக்கு இந்த ஹாபிட் போகணும். அரு ரொம்ப பீல் பண்றாங்க..”

“அது இன்னிக்கு சரியா போய்டும். நான் சொல்றதை நீ கேளு”, என்று அவன் அவள் காதுகளில் உரைத்த திட்டத்தில் மனம் மகிழ்ந்த கோதை, “இந்த பிளான் மட்டும் ஒர்க் அவுட் ஆய்டுச்சுன்னா.. அப்பறம் செம்ம… சூப்பர்.. “,என்று சிலிர்த்தபடி சென்றாள்.
அன்று நாள் முழுவதும் அலைந்து திரிந்து தேவையானவை வாங்கி.. நிறைய ஏற்பாடுகள் செய்தனர் இருவரும். மாலை 6 மணி அளவில் லட்சுமியிடமும் மீனாட்சியிடமும், இரவு யாரும் மொட்டைமாடிக்கு வராமல் பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு வந்தாள் கோதை.

8 மணிக்கு அகி மாடியேற மீனாட்சி அவனை விடவில்லை.
சொன்ன நேரத்திற்கு வராமல் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வந்த ஆதி மீனாட்சியிடன் மாட்டிக்கொண்டு முழித்தபடி இருந்த அகிலை கண்டு சிரித்து விட்டான். அருணாவை முதலில் அழைத்து வந்து மீனாட்சியிடம், “இவர்களுக்காக தான் வேறு யாரையும் அனுப்ப வேண்டாம் என்றோம் அத்தை. நீங்கள் இவர்களையே அனுப்பாவிட்டால் எப்படி”,என்று கேலி பேச..

“அந்த கோதைப்பொண்ணு ஒழுங்கா சொல்லல ஆதி அதான். நீ அழைச்சிட்டு போ”, என்று அனுப்பிவிட்டு தன் வேலையை தொடர்ந்தார். அதான் யாரையும் வரவிடாம பாக்கறது…

மாடியில் கண் கட்டப்பட்ட அகிலும் அருணாவும் ஒரு இருக்கையில் அமரவைக்க பட்டனர்.

ஆதி அவர்களிடம், “நாங்க சொல்லும்போது கண்கட்டை அவிழ்க்கனும் “,என்று சொல்லிவிட்டு படிகட்டிற்கு வந்து விட்டான். கோதையும் அனைத்தையும் சரி பார்த்தபின் ஆதியிடம் வந்தாள். இருவரும் ஒரே குரலில் “கண்ணை திறங்க” என்று சொல்லி விட்டு மாடியிலிருந்து இறங்கினர்.

கண் கட்டை அவிழ்த்த அகிலனுக்கும் அருணாவிற்கும் ஆச்சர்யம்.. மாடி அழகாக அலங்கரிக்கப்பட்டு, காண்டில் லைட் டின்னர் செட்டப்பில் இருந்தது.

மகிழ்ந்த இருவரும், பேசியபடி நிலவுடன், காற்றுடன், உறவாடி ஏகாந்த நிலையில் உணவுஉட்கொண்டனர். 10 மணிக்கு ஆதி அகிலனுக்கு கால் செய்து,” போதும் ப்ரோ தூங்க போங்க”, என்று வைத்துவிட்டேன்.
பேசியபடி கீழே இறங்கி தங்கள் அறையை திறந்த இருவரும் மலைத்து போனார்கள்.. அறை அலங்காரமாய் அவர்களை வரவேற்றது.

ஏற்கனவே இருந்த அற்புத மனநிலையும், இப்போது அறையின் அலங்காரமும் இனைய.. ரூம் பிரேஷ்னர் நறுமணத்தில் ஆகியும், அருவும் தங்கள் கைகளை இணைத்துக்கொண்டு மோன நிலையில் உள்ளே நுழைந்தனர். அகில், அருவின் தோள் தொட்டு திருப்பிட புது மணப்பெண் போல அவள் முகம் செவ்வானம் கொண்டது.. முதல் முறையாக இருவரும் “ஐ லவ் யு” சொல்லிக்கொண்டனர்.
அங்கு காதல் அரங்கேற்றம் நடக்க.. அகி தன் ஒரு பெக் சனிக்கிழமை இன்று என்பதை மறந்து தன் மனைவியுடன் உறவாடிக்களித்தான்..

காலையில் வந்த அகியை ஆதியும், அருணாவை கோதையும் பிடித்து தோட்டத்திற்கு இழுத்து வந்தனர்.

இருவரும் வெட்கம் பூக்க ஆதிக்கும், கோதைக்கும் நன்றி சொன்னார்கள்.

அப்போது அருணா ஆதியிடம், “எங்களுடயது நிச்சயிக்கப்பட்ட திருமணம். நாங்கள் நட்புடன் பழகினோமே தவற காதல் என்றெல்லாம் பேசியதில்லை.. அன்பிருந்தாலும் அது கணவன் மனைவிக்குள் இருக்கும் பாசம் என்று மட்டுமே நினைத்திருந்தோம். ஆனால் நேற்று நான் முழுமையாய் அகிலனை காதலிப்பதை உணர்ந்தேன்.. அதை நான் வெளிப்படுத்தியும் விட்டேன். இதற்கு நான் உங்களுக்கு தான் நன்றி சொல்லணும்.”, என்றாள் உணர்ச்சிமிக்க..

அகிலனோ இன்னும் ஒரு படி மேலே சென்று.. ” நான் வேலை வேலை என்றே இருந்துவிட்டேன்.நேற்று நான் அருணாவின் கண்களில் நான் குடிக்க கூடாதே என்ற தவிப்பை பார்த்தேன். அறைக்கு சென்றதும் அவள் காதல் ததும்பும் கண்களை கண்ட பின் இனி ஒருநாளும் அந்த கருமத்தை தொடுவதில்லை என்ற முடிவுடன் தான் அருணாவிடம் என் காதலை சொன்னேன்.
உங்கள் இருவருக்கும் தான் நன்றி சொல்லனும் ஆதி..நான் அருணாவை இவ்வளவு காதலிப்பதை இந்த ஒருவருடமாக உணராமல் போனேன்…”

அப்போது கோதை அவர்கள் இருவரையும் அணைத்துக்கொண்டாள்.
ஆதி அகிலனிடம்,” நம் குடும்பத்தை விட, நம் துணையை விட பெரிய ரிலாக்ஸேஷன் என்ன இருக்க முடியும் அண்ணா. அதுதான் உங்கள் பார்வையை அண்ணி பக்கம் திருப்பி விட்டோம். இப்போ எல்லாம் நல்லது ஆச்சுல.. சண்டேவ என்ஜாய் பண்ணுங்க. “,என்று அவர்களை அனுப்பிவிட்டு கோதையிடம் வந்தவன், “நீ ஹாப்பியா பூமா..”

அவள் விழிநீருடன் ஆதிக்கு நன்றி சொன்னாள்.

“எனக்கு அகி தான் ரொம்ப பெட் இந்த வீட்ல. அருணா வந்ததும் அவங்களும் பெட்டாக நான் ஆனந்தமா இருந்தேன். அகியின் இந்த பழக்கம் தெரிந்த நாளில் இருந்து எனக்கு மனசங்கடம் தான். ஆனா இன்னிக்கு அத நீங்க சரி பண்ணிட்டிங்க ஆதி அத்தான்.. ரொம்ப நன்றி “,என்று அவன் கரம் பற்றி சொன்னாள்.

அவனால் பதில் கூற முடியவில்லை, என்ன சொல்லுவான் உனக்காக தான் இதெல்லாம் செய்தேன் என்று சொல்லவா முடியும்.. அவள் கரத்தில் சிக்கியிருந்த தன் கரத்தை கண்டு ஆதியின் உள்ளம் பெயரறியா மாற்றத்தை கண்டது.

3 thoughts on “Amudham 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!