“Friends are the family we choose for ourselves.”

அமுதம் 4
காலையில் கண் விழித்த ஆதியை வரவேற்றது கோதையின் சிரிப்பொலியும், அகிலனின் கத்தலுமே..
வேகமாக எழுந்து காலைக்கடன்களை முடித்து முகம் கழுவி ஹாலை நோக்கி சென்றான்.
அங்கு சுந்தர், கதிர் இருவரும் காக்கி உடையில் பணிக்கு தயாராகி அமர்ந்து பேப்பர் பார்த்துக்கொண்டு இருந்தனர். மறுபடியும் அகில்,கோதையின் சத்தங்கள். அமைதியாய் சுந்தரின் எதிர் சோபாவில் அமர்ந்தான் ஆதி . அவனை கண்டு காபியுடன் வந்தார் லட்சுமி. அவர் வர, அவரை இடித்துவிட்டு கோதை ஓட, அவரை நிலைப்படுத்திவிட்டு அகிலன் அவளை துரத்தினான்.
“நில்லுடி வாலு”
“நிக்க மாட்டேனே நீ என்ன பண்ணுவ ” என்று விளம்பர பாணியில் சிரித்தபடி ஹாலை சுற்றி ஓடினாள் கோதை.
“ஏய் அப்பா காத்திருப்பாரு கோதைக்குட்டி.. குடுடா”
“இல்லவே இல்லை. நேத்து நான் பண்ணின அல்வாவை நீ எவ்வளவு கிண்டல் பண்ணின.. தர முடியாது..”
“பிளீஸ்.. பிளீஸ்.. குடும்மா.”
“நான் கேட்டதை நீ செஞ்சுக் கொடுத்தியா இல்லைல போ.. கிடையாது.”
அதற்குள் அங்கு வந்த அருணா,” தராதே கோதை. அவர் மாமா கிட்ட திட்டு வாங்கட்டும். நாம கேட்டதை செய்து தரல. அப்பறம் எதுக்கு நாம அவருக்கு பாவம் பாக்கணும். “
“அதானே.. முடியாது அகில்.”
அங்கு வந்த மீனாட்சி,”என்ன தான் டீ உனக்கு ஆகும் காலைலயே ஏதாவது இம்சை பண்ணிட்டு இருக்க. அப்பா மாமா எல்லாம் வேலைக்கு போக வேண்டாமா. அதான் அகில் சொல்றான்ல அண்ணன் வயலில் காத்திருக்கும்.அது என்னவோ அதை குடுத்து அகியை அனுப்பு. அரு உனக்கு ஸ்கூல் போக வேண்டாமா.”
“அம்மா உனக்கொண்ணும் தெரியாது. இந்த அகி கிட்ட நான் கேட்டது செஞ்சு தர மாட்டேன்றான். அதான் இன்னிக்கு அவன் கிட்ட பெரிய மாமா கொண்டுவர சொன்ன டாக்குமெண்ட எடுத்து வச்சு தர மாட்டேன் சொன்னேன்.”
“அப்படியென்ன டா அகி அவ கேட்டா. கோதை கேட்டதை செய்யறத விட உனக்கென்ன முக்கியமான வேலை.”, என்றார் பாட்டி.
“அவ என்னதை கேட்டாளோ.. எதுக்கு அவளுக்காக எங்க அண்ணனை திட்டுறீங்க. கொஞ்சம் கடுமையாகவே”,கேட்டான் முகில்.
அதுவரை அங்கு நடந்தவைகளை காபியை பருகியபடி ரசித்திருந்த ஆதிக்கு முகிலனின் செயல் எரிச்சலை ஏற்படுத்தியது.
இதுவரை ஓடவிட்டு தரமாட்டேன் என்ற பைலை டேபிளில் வைத்துவிட்டு மாடியேறினாள் கோதை..
“கோதை.. கோதை”, என்று அனைவரும் அழைத்தனர். அவள் திரும்பவும் இல்லை,நிற்கவும் இல்லை.
அகிலும் கோதையும் இதுபோல அடிக்கடி சேட்டை செய்து விளையாடுவதுண்டு. வீட்டினர் ஒருநாளும் ஒன்றும் சொன்னதில்லை. இன்று முகிலனின் பேச்சு கோதையை காயப்படுத்தியது. கண்டிப்பாக அங்கேயே நின்றால் முகிலனை ஏதும் செய்து விடுவோம் என்றே அவள் அங்கிருந்து கிளம்பினாள்.
“ஏன் முகில் அப்படி பேசினிங்க. பாருங்க கோதை கோவிச்சுட்டு போறா.”-அருணா
“போகட்டுமே. அவ என்ன அவ்ளோ பெரிய மகாராணியா”,முகில்
“ஆமா அவள் மகாராணி தான். அவள் விளையாடியது என் கூட. உங்களை எல்லாம் யார் உள்ள வர சொன்னது. நான் அவ கேட்டதை செய்யல. அதான் கோவமா பைலை தராம இருந்தா..”அகில்
“நீ லேட் ஆச்சுன்னு சொல்லியும் அவள் தரல தான. அதான் நான் அப்படி சொன்னேன்.”,முகில் தன்னை நியாயப்படுத்தி கொள்ளவே விரும்பினான்.
“அவர் கிளம்ப இன்னும் நேரம் இருக்கு முகில். மாமா அவரை 11 மணிக்கு தான் வர சொல்லிருக்காரு. அதனால தான் அவங்க விளையாடிட்டு இருந்தாங்க.அதனால தான் நானும் கோதைக்கு சார்பா பேசினேன்.”-அருணா. நாங்கள் எல்லாம் தெரிந்து தான் செய்கிறோம், நீ ஏன் தலையிடுகிறாய் என்ற தொனி இருந்தது அவள் குரலில்.
“இவங்க என்ன சின்ன பிள்ளைகளா விளையாட?”, முகில்
“இல்லை தான். ஆன வீடு சந்தோசமா இருந்தது.. “,பாட்டி
“அய்யே.. இதுவா சந்தோசம். மீன் மார்க்கெட் போல இருந்தது.”,முகில்
அதிகநாள் இவனை தனியாக விட்டது தவறோ என்று நினைத்தபடி மாடியிலிருந்து வந்தார் தமயந்தி.
“கோதை உன்கிட்ட என்ன கேட்டா”, அகில்
“அம்மா, அவ தோட்டத்துல ஒரு பகுதியை சரி பண்ணி அவளுக்கு தேவையான வெளிநாட்டு கீரை, சில காய்கறிகள் விளையறதுக்கு தகுந்த மாதிரி மாத்தி தர சொன்னா.”
“ஏன் அங்க விளையாதா இல்லை உனக்கு விளைவிக்க தெரியாதா”
“தெரியும் அம்மா”,என்று தலைகுனிந்து சொன்னான் அகிலன்.
“அம்மா அண்ணனை பார்த்து அப்படி கேக்குறிங்க. அண்ணா படிச்சதே விவசாயம் தான.”, தன் அண்ணன் தலைகுனிவதை பொறுக்காமல் முகில் இடைப்புகுந்தான்.
“அப்போ அதை செய்து கொடுக்கமா என்ன பண்ணின.”
“அம்மா இருக்கற வேலைய விட்டுட்டு அவளுக்கு அண்ணன் வேலை செய்யணுமா?”
“இல்லம்மா, கோதை என்கிட்ட விளைவிச்சு தரச் சொல்லல. இடத்தை தேர்ந்தெடுத்து அந்த செடி வகைகளுக்கு ஏற்ப நிலத்தை மட்டும் பதப்படுத்தி தரச் சொன்னாள். அவளே விதை,நாற்று எல்லாம் வச்சிருக்கா. அவளே அதை நட்டு பாத்து விளைய வச்சுக்கறேன் என்றும் சொல்லிட்டா.”
“அவ உனக்காக அவ்ளோ யோசிச்சிருக்கா.இதக்கூட அவளுக்கு செஞ்சு தர முடியாதா அகில் உன்னால..”,என்ற தமயந்தியின் குரலில் இருந்த கோவம் ஆதியையும் முகிலையும் ஒரு நிமிடம் அரள வைத்தது.
“இல்லம்மா.. கொஞ்சம் வேலை..”
“நம்ம பிள்ளைக்கு செய்யறத்தை விட நீ ஒன்னும் வேலை பார்த்து இங்க சம்பாதிக்க வேண்டாம் அகில்”,பாட்டி.
கல்லூரிக்கு தயாராகி வந்த கோதை இன்னும் அதே விஷயம் அங்கே உழன்று கொண்டிருப்பதையும், அகில் திட்டு வாங்குவதையும் கண்டவள்.
“நான் நேற்று தான் அத்தை கேட்டேன். நாளைக்கு அகி ரெடி பண்ணி தந்துடறேன் சொன்னாங்க. நான் தான் காலைல ஜாகிங் போகலயேன்னு அகில் கூட வம்பு பண்ணி ஓடிட்டு இருந்தேன்.”
மீனாட்சி கோபமாக,” அறிவு இல்லையா கோதை உனக்கு. இனி இப்படி செய்யாதே.”
“நல்லா சொல்லுங்க அத்தை உங்க பொண்ணுக்கு”,முகில் கிடைத்த சந்தர்ப்பத்தில் கோதையை மாட்டிவிட நினைத்தான்.
“முகில் நீ அமைதியா இரு. அகில் உண்மையை சொல்லு.”,தமயந்தி
“அம்மா அவ போன மாசமே சொல்லிட்டா மா. அவளுக்கு நாளைல இருந்து பிராக்டிகல் ஆரம்பம். தினமும் எதையாவது கொண்டு வர சொல்லுவாங்க. நான் அலைய கூடாதுனு தான் அவ எல்லாத்தையும் பயிர் பண்ணிட்டா எல்லாருக்கும் சுலபம் அப்டின்னு செய்ய சொன்னா. நான் தான் மறந்துட்டேன்.”
“விடு அகி செல்லம்.. நானும் முன்னாடியே உன்கிட்ட நினைவு படுத்திருக்கும். சிலது என் பால்கனிலேயே வாங்கிட்டு வந்த குரோவ் பைக்ல இருக்கு,மீதியை நான் என் பிரென்ட் கிட்ட சொல்லி வங்கிக்கறேன். நீ பிரீயா விடு. அத்தை அகி செல்லத்தை திட்டாதிங்க.”, அவளுக்கு அகி என்றும் பிரியமானவன். ஷியாம் நட்பாக பேசுவான் ஆனால் அகி தான் உரிமையாய் விளையாடுவான். சிறுவயதில் ஒற்றை பிள்ளையை தனித்திருந்த பூங்கோதைக்கு,இங்கு வந்த பின் அகியின் உரிமை சீண்டல்கள் சண்டைகள் மிகவும் பிடிக்கும். அதனால் இருவருமே இப்படி விளையாடுவது புதிது இல்லை.
“என்ன டீ செய்யறதெல்லாம் செஞ்சுட்டு இப்போ நல்லவ மாதிரி பேசுற. “,முகில்
“வாய மூடு முகில்.” கர்ஜனையாய் கேட்ட குரலில் குடும்பம் திடுக்கிட்டு பார்த்தது.
அங்கே ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தார் தாத்தா ஜோதிலிங்கம் எளிதில் கோவம் வராத அவருக்கு கோவம் வந்தால் தணிப்பது கடினம் .
“இங்க பாரு முகிலா, நீ ரொம்ப நாளா நம்ம வீட்ல இல்ல. சொல்லப்போன உங்க அத்தை மீனாட்சி வந்ததுக்கு அப்பறம் நீ இங்க இல்லவே இல்லை. அதான் உனக்கு பூங்கோதையை பத்தி தெரியல. விளையாட்டு போல தெரிஞ்சாலும் பிள்ளை ஒரு சொல்லு தாங்காது. நீ வாய்க்கு வந்த படி பேசுற. இதுவே கடைசியா இருக்கட்டும். எங்களுக்கு எப்பயும் இந்த குடும்பம் சந்தோசமா சிரிச்சிட்டு இருக்கணும். இன்னிக்கு வரைக்கும் ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் பண்ணிக்கிட்டாலும் மனம் புண்படும்படி யாரும் பேசுனது இல்லை. பாத்து நடந்துக்கோ. நேற்று நடந்தது.. கோதைக்கு உன்னை தெரியல. அவ ஏதோ விளையாட்டா பேசிட்டா.அதை பெருசு பண்ணாம விடு.”
வேகமாய் பேசிவிட்டு தன்னறைக்கு சென்றுவிட்டார். அவர் கோவத்தை அடக்கி பேசியிருக்கிறார் என்று பாட்டிக்கு நன்றாக புரிந்தது.
கோதை யாரிடமும் பேசாமல் அமைதியாய் கல்லூரிக்கு சென்று விட்டாள். ஆதி போகும் பூங்கோதையை பார்த்தபடி நின்றான்.
முகிலன் கோதையை தவறாக நினைத்திருக்கிறான். நாள் சென்றால் புரிந்து கொள்வான் என்று குடும்பமும் கலைந்து சென்றது.
கல்லூரி வாயிலை அடைந்த கோதையை அவள் நட்பு வட்டம் வட்டமிட்டது.
கிருத்திகா,சுபா,இன்பா, ராகுல்,பிரவீன் இவர்கள் ஐவரும் பூவின் நண்பர்கள். ஒருவர் நினைப்பது அடுத்தவருக்கு புரியும், அப்படி ஒரு நட்பு, உயர்நிலை பள்ளியில் நண்பர்களாகி 4 ஆண்டுகளாய் தொடரும் நட்பு. ஆண் பெண் வித்தியாசம் தொடுதலில் மட்டுமே. பெண்கள் தொட்டு பேசுவர். ஆண்களுடன் ஒரு எட்டு தள்ளி நின்று பேசுவர். அடித்து விளையாடும் பழக்கம் கூட இல்லை. கல்லூரியே இவர்கள் நட்பை பார்த்து வியக்கும்.
சீனியர் ஒருவன் சுபாவிடம் காதல் சொல்ல, அவள் மறுத்துவிட்டாள், அவன் தொடர்ந்து தொந்தரவு தர அவள் தன் நட்புகளிடம் சொல்லிவிட்டாள். ராகுல் பொறுமையானவன், இன்பாவும், பிரவீனும் கோவக்கார பசங்க. விட்டு வெழுத்துடாங்க, சீனியர் என்றும் பாராமல். கடைசியில் ராகுல் வந்து சமாதனம் பேசி அவனை காப்பாற்றி சுபா பின்னால் வர வேண்டாம் என்று அனுப்பி வைத்தான்.
அடுத்த நாளே அந்த சீனியர் மாணவன் கல்லூரி முழுவதும் இவர்கள் அனைவரும் காதல் ஜோடிகள் என்று பரப்பி விட்டான்.
இவர்கள் அறுவரும் கண்டுகொள்ளவே இல்லை.
நிர்வாகம் வரை விஷயம் செல்ல, அவர்கள் கேட்டதற்கு ராகுல் மிக தெளிவாய்,
“நாங்கள் எங்கள் நட்பில் தெளிவாகவும்,கண்ணியமாகவும் இருக்கிறோம். இவர்களின் தரமற்ற பேச்சிற்காக எங்கள் நட்பை நாங்கள் இழக்க முடியாது. இதற்கு மேலும் உங்களுக்கு எங்கள் உறவில் சந்தேகம் இருந்தால் எங்கள் குடும்பங்களிடம் பேசிக்கொள்ளுங்கள். நாங்கள் யாருக்கும் தெரியாமல் ரகசிய நட்பு பாராட்ட வில்லை. அனைவரையும் அனைவர் இல்லத்தவர்க்கும் தெரியும்.”
அவனின் அமைதியான, அழுத்தமான பேச்சில் நிர்வாகம் இந்த பிரச்சனையை அப்படியே விட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த அறுவரும் கல்லூரியின் நட்சத்திரங்கள்.
(சரி இன்னிக்கு என்ன நடக்குதுன்னு பார்ப்போம்)
“பூ… இன்னிக்கு செமினருக்கு தயாராகிட்டியா..”
“அதெல்லாம் சூப்பரா..”
“நாளையில் இருந்து பிரக்ட்டிக்கல் கிளாஸ் பூ. “
“இன்பா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் டா, உனக்கு திங்ஸ் வாங்கும் போது எனக்கும் வாங்கிட்டு வந்திடு.”
“ஏன் பூ நீ தான் அகி அண்ணா கிட்ட சொல்லி எல்லாத்தையும் தோட்டதுலயே பாதுக்கறேன்னு சொன்னியே.. என்னாச்சு..”, அவன் குரலில் நக்கல் இருக்க,
பிரவீன் வேகமாக, “உன்னால முடியதுனா விடு இன்பா, அவளுக்கு என்ன பிரச்சனையோ.. இல்லனா அவ ஏண்டா நம்மள வந்து கேக்கப் போறா. வரவர உனக்கு வாய் கூடிப்போச்சு இன்பா.. “
“சும்மா தான் டா. நம்ம பூ தானே..”
கிருத்திகா சரியான ரௌடிப் பொண்ணு சுபா மாதிரி அமைதி இல்லை. அவ ,” இன்பா நம்மல்லாம் எப்போ அடிச்சிப்போமுன்னு காலேஜ் மொத்தமும் எதிர்பாத்துட்டு இருக்கு. நீ இப்படிலாம் சேட்டை பண்ணிட்டு இருக்காத. அப்பறம் நான் வெழுத்துருவேன்.”
இன்பாவுக்கு புரிந்தது. இருந்தும் அவன் சேட்டையை விடாமல்,”நீயெல்லாம் என்னை வெளுத்து.. கடவுளே.. எப்படி டீ 2 எட்டு தள்ளி நின்னுதான் பேசுவீங்க. அடிக்கறதும் காத்துலயே அடிப்பிங்களோ..”
இவன் இன்னிக்கு கிருகிட்ட அடிவாங்காம போமாட்டான் என்று மீதி நால்வரும் வகுப்பறைக்கு கிளம்பினார்.
“என்ன டா எல்லாரும் என்னை தனியா விட்டுட்டு போறீங்க?”
“இல்லையே கிருவ உனக்கு துணைக்கு விட்டிருக்கோமே.. பின்னால பாரு.”
“அப்படியா?”,என்று இன்பா பின்னால் திரும்ப அங்கே பிரம்போடு நின்றிருந்த கிரு,” வாடா மவனே தூரத்துல இருந்து எப்படி அடிக்கறதுன்னு உனக்கு காட்றேன்”,என்று துரத்த.
“அட பாவிகளா இந்த ராட்சசி கிட்ட என்ன மாட்டிவிட்டுட்டீங்களே டா..”, என்று ஓடினான்.

Mughil romba thulluraaney… konjam adakki vaikkanumo 🧐🧐🧐
மூழ்காத ஷிப் 💞💞💞💞
அட.. வீட்லேயும் சொந்தங்கள், உறவுகள் அதிகம், கல்லூரிலேயும் நட்பு வட்டம் அதிகம் போலவே. ஆனா, இந்த முகிலனுக்கு ஏன் கோதையை கண்டாலே ஆகலைன்னு தெரியலையே?
அது சரி, இந்த ஆதி ஏன் தன்னோட ஊருக்கு போகாமா முகிலனோட இந்த வீட்டுக்கு வந்திருக்கிறான்..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
👌👌👌💕💕💕💕