
அமுதம் 34
ரிசார்ட்டின் ரவுடிகள் பிரச்சனையை ஆதி தீர்த்து வைத்ததால், உடனடியாக விலை பேசி அதை வாங்கினார்கள்.
இரண்டே நாட்களில் எதிர்பாராத அளவுக்கு சில மாற்றங்களை, அவரவர் செய்ய, திறப்பு விழா வேலையாய் ராஜேஸ்வரன் சுற்றித் திரிந்தார்.
அன்றும் காலை சீக்கிரமே கிளம்பி கீழே வந்த கோதை கண்டது கையில் கேமராவுடன் நின்ற புவனேஷைத்தான்.
“டேய் பொடியா… இதென்ன கழுத்துல டி.எஸ்.எல்.ஆர். தலைல தொப்பி, தோளில் கேமரா பேக். புது அவதாரமா?”
“இல்ல நெட்டைகொக்கு. எனக்கு போட்டோக்ராபில இன்டெர்ஸ்ட். இந்த வதுவும் சுஜியும் ஒண்ணா காலேஜ் போகப்போறோம்ன்னு இப்போவே ஒண்ணா எதோ கோர்ஸ் போகுதுங்க. நார்முவும் வீட்ல இருக்க மாட்டேங்கறா. எனக்கு போர் அடிக்கிது தெரியுமா? அதான் போய் காடு, மேடு, மாடு எல்லாத்தையும் போட்டோ எடுக்க போறேன்.”
“சரி சரி அழாத. எங்க என்னை அழகா போட்டோ எடு நான் ஒத்துக்கறேன்.”
“சரி”, என்று அவளை சில போஸ்களில் நிற்க வைத்து கிளிக்கினான்.
அதை அவளிடம் காட்ட.
“டேய் தம்பி சூப்பர் டா. அழகா இருக்கு. உனக்கு இதுல பிரைட் பியூச்சர் இருக்கு டா.”
“தேங்க்ஸ் அக்கா..”
அவனை வழியனுப்பி வைத்தவள், தங்கள் நாட்குறிப்பு புத்தகத்தில் அன்றைய மற்றும் மறுநாள் நிகழ்ச்சிகள், தங்கள் வேலைகளை பட்டியலைப் பார்த்துவிட்டு, அடுத்தநாள் மலைகிராம விழாவுக்குச் செல்லவேண்டும் என்பதை குறித்துக்கொண்டு. இன்றைய ரிசார்ட் வேலையை கவனிக்கச் சென்றாள் கோதை.
ஆதி எஸ்டேட் ஆபிசில் அமர்ந்திருந்தான்.
அவனைக் காண அவர்கள் கம்பனி வக்கீலான லாயர் சிவகொழுந்து வந்தார்.
“வாங்க அங்கிள்.”
“என்ன புது மாப்பிள்ளை எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன் அங்கிள். இப்போ உங்க உடம்பு பரவாயில்லையா?”
“அப்போ எனக்கு உடம்பு சரியில்லன்னு தான் அந்த கேஸை யாருக்கோ குடுத்தியா?”
“எந்த கேஸ் அங்கிள்?”
“அந்த மரக்கடத்தல் கேஸ்.”
“ஐயோ அங்கிள். நான் ஏற்பாடு பண்ணின வக்கீல் இல்ல அவரு. செல்ப் இன்டெர்ஸ்ட்ல அப்பியர் ஆனார். சரி மாத்த வேண்டாம்ன்னு விட்டுட்டேன்.”
“நீ கொஞ்சம் யோசிச்சிருக்கணும் ஆதி. யாரும் சும்மா அப்படி வந்து செய்ய மாட்டாங்க. அதுவும் இல்லாம நான் அந்த சக்தி பத்தி விசாரிச்சேன். ஒரு வருஷமா இங்க இருக்கான் ஆனா ஒரு கேஸ் கூட அவன் பாக்கல. இது ஒன்னு தான். அங்க தான் எனக்கு இடிக்கிது. “
“அப்படியா அங்கிள்? பார்க்க டிசென்டா தெரிஞ்சாரு. பேச்சும் ஓக்கே தான். அதான் நான் பெருசா தலையிட்டுக்கல.”
“கேஸ் எடுத்த மகராசன், கோர்ட் பக்கம் போகவே இல்லையே ஆதி! இதுக்கு பின்னாடி என்னவோ, இல்ல யாரோ இருக்கணும்.”
“பாக்கறேன் அங்கிள். ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்.”
“அட என்ன ஆதி நீ! ரிசார்ட் விஷயமா அப்பாவைப் பார்க்க வந்தேன். சரி அப்படியே இந்த விஷயத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு போய்டலாம்ன்னு பார்த்தேன். அவ்ளோ தான்.”
“சரிங்க அங்கிள்.”
அவர் கிளம்பியதும் ஆதியின் மனம் குழப்பத்தில் தவித்தது. தன்னை நம்பி வந்தவர்களை தான் சரியாக வழிநடத்தவில்லையோ? என்று வருந்தியது.
‘நாளை அவர்களை நேரில் சென்று பார்த்துவிட்டு அங்கிளிடம் சொல்லி புது வக்காலத்து போடச் சொல்லலாம்’ என்ற முடிவு எடுத்ததும் மனம் கொஞ்சம் சுமை இறங்கவே நிம்மதி கொண்டது.
மதி கொஞ்சம் கோவமாக இருந்தாள், அவள் அவ்வளவு சொல்லியும், திறப்பு விழாவுக்கு முன் நிறைய மாற்றங்களை செய்து கொண்டிருந்தாள் கோதை. அதில் முக்கியமானது காட்டிற்கும் ரிசார்ட்ற்கும் இடையில் வேலி அமைப்பது, அதை விட்டு 30 அடியில் வாட்ச் ஏரியா அமைப்பது. காட்டிலாகாவில் ஒப்புதல் வாங்கி, காட்டின் வாயிலில் சின்ன குளம்,ஒரு பொய்கை, இளைப்பாறும் மேடை, அதோடு உணவு வைக்க சிமெண்ட் தட்டுக்கள்.
மதி கோதையைப் பார்த்து கத்திக்கொண்டிருந்தாள்.
“சொன்னா புரியாதா கோதை உனக்கு? இதெல்லாம் ஒன்னொன்னா செஞ்சுக்கலாம். இதுல இருந்து லாபம் வரும்போது பண்ணனும். இப்படி முதலிலேயே போய் கொட்டக்கூடாது.”
“இங்க பாரு மதி, இதுல நிறைய விஷயம் இருக்கு. நான் யோசிக்காம செய்யல.”
சாதாரணமாக ஆரம்பித்த பேச்சு சண்டையாக வளர்ந்தது. இதை அங்கிருந்த யாருமே எதிர் பார்க்கவில்லை.
மதி அமைதியானவள், அவள் ஏன் கத்துகிறாள் என்றே யாருக்கும் விளங்கவில்லை.
கோவத்தின் உச்சம் தொட்ட கோதை, அனைவரையும் ‘மீட்டிங்’ என்று அழைத்தாள்.
நடுநாயகமாக நின்று,” மேனேஜ்மென்ட்ல நான் காசு வாங்காம அந்த வேலையெல்லாம் செஞ்சுக்கறேன். ஒன்னு நல்லா புரிஞ்சுக்கோங்க. ரிசார்ட்ட திறந்து வச்சிட்டு வாங்க ஊர் சுத்தி காட்றோம்ன்னு கூப்பிட்டா அது ரிசார்ட் இல்ல. ஹோட்டல். இது ரிசார்ட். அவங்க பொழுதை இதற்குள்ள இருந்தே கழிக்க சில வசதிகளையும் வாய்ப்புகளையும் நாம செய்யணும், அப்போ தான் கெஸ்ட் வருவாங்க. வந்தா தான் ரெவென்யூ வரும். சும்மா அப்பறம் செய்யலாம்ன்னு சொன்னா எப்படி? ஏன் அதை செஞ்சேன்னு யாராச்சும் என்னை கேட்டீங்களா?”
இன்பா ” உன்னை ஏன் நாங்க கேள்வி கேக்கணும் பூ.. நீ கண்டிப்பா யோசிச்சு தான் செஞ்சிருப்ப.”
“அதை கொஞ்சம் இந்தப்பக்கம் சொல்லு” என்று மதியை காட்ட, மதிக்கு ஒரு மாதிரி ஆனது.
“சரி அவ ஏன் வேண்டாம்ன்னு சொன்னான்னு நீ கேட்டியா?”, என்றான் ராகுல். மதிக்கு மனமெல்லாம் குளிர்ந்தது.
“அவளை கேக்கவே தேவையில்லை, அவ பணவிஷயமா யோசிக்கறா ராகுல். நிறைய பணம் செலவு பண்ணி லாஸ் ஆக கூடாதுனு நினைக்கறா. அவ மேனேஜ்மென்ட் சைடுல இருந்து பாக்கறா. கொஞ்சம் என் பக்கத்துல, இல்ல ஒரு கெஸ்ட்டா யோசிச்சு பாரு. ஹோட்டல் விலையை விட நாம கூட தானே வாங்குவோம். அதுக்கு தக்க வசதிகளை செய்து கொடுக்கணும். இது அதிக போட்டி இருக்கற துறை. அதுவும் இப்போ முனைக்கு மூணு கெஸ்ட் ஹௌஸ், திரும்பினா ஹோட்டல்ன்னு கம்மி விலையில் தங்க இடம் கிடைக்கும்.
நம்ம ரிசார்ட் தங்கறதுக்கானதா மட்டும் இல்லாம ரசிக்க, குடும்பத்தோட, குழந்தைகளோட நேரம் செலவு பண்ண, ஹனிமூன் வந்தா ரொமான்டிக்கா இருக்கன்னு, எல்லா அம்சங்களோட தனிச்சு இருக்கணும்.
அந்த வாட்ச் ஏரியா எல்லா ரிசார்ட்கும் அமையாது. அதிக காட்டு மிருகங்கள் இல்லாம, ம்ச்.. ஏன் புரியல உங்களுக்கு? தொழில் செய்யும் போது, லாபநஷ்டத்தை விட நம்ம கஸ்டமர் ஸாட்டிஸ்பாக்ஷன் தான் முக்கியம். மாச சம்பளக்காரங்க மாதிரி யோசிக்காம, தொழில் செய்யறவங்க மாதிரி யோசிங்க. நம்ம ரிசார்ட்க்கு வந்தவங்க அடுத்து எப்போ ஊட்டி வந்தாலும் நம்ம கிட்ட தான் வரணும், அவங்க வெளில போய் நம்மைப் பத்தி சொல்லி நிறைய பேர் வரணும், அவங்க ஆன்லைன்ல குடுக்கற ரெவியூ பார்த்து ஆயிரம் பேர் வரணும்.
அங்க நிக்கணும் நாம. அதை விட்டுட்டு கெஸ்ட் வந்தப்பறம் ஒவ்வொன்னும் செஞ்சா யார் நல்ல ரெவியூ கொடுப்பாங்க, யார் வருவாங்க? தொழில் ஆரம்பிக்கிறது சுலபம். ஆனா அந்த தொழில்ல நிலைச்சு நின்னு ஜெயிக்கறது அவ்வளவு சுலபம் இல்ல. புரிஞ்சு நடந்துக்கோங்க. பேசறத்துக்கு முன்னாடி யோசிச்சு பேசுங்க.” என்று சொல்லிவிட்டு மீட்டிங் அறையை விட்டு வெளியேறினாள்.
அங்கிருந்தவர்கள் அனைவரும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தவர்கள், அவள் சென்றதும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
இன்பா, “மதி! சொல்றேன்னு தப்பா நினைக்காத.. இதுக்கு முன்னாடி நீ சொன்ன எல்லா யோசனையும் ஒரு நிர்வாகத்தை நடத்த சரியானதா இருந்தது. ஆனா அந்த நிர்வாகத்தை எப்படி உருவாக்கணும் என்று தான் இப்போ பூ சொல்லிட்டு போறா. நீ ஒன்னும் நினைச்சுக்காத. நீ இங்க கெஸ்ட் வரவைக்க என்ன பண்றதுன்னு பாரு. அவங்களை திருப்தியா திருப்பி அனுப்ப என்ன பண்ணனுமோ அதை நாங்க பூ சொல்றபடி கேட்டு பண்றோம். அவள் சொன்னது அவ்வளவும் உண்மை. எனக்கு பிரம்மிப்பா இருக்கு. எவ்ளோ யோசிக்கறா பாருங்க டா!”, என்று தன் சகபாடிகளிடன் கேட்டான்.
அனைவரும் அதே பிரம்மிப்போடு தான் இருந்தனர்.
மதிக்கு அவள் செய்த தவறு புரிந்தது. கோதை போல ஆளுமையா இருக்கணும்ன்னு ஆசை பட்டு அவளையே தான் படுத்தி இருக்கிறோம் என்று புரிய, அவளுக்கு வெட்கமாய் இருந்தது. கோதையிடம் மன்னிப்பு கேட்கச் சென்றாள்.
***
அங்கே…
நாளை வெள்ளிக்கிழமை திருவிழா நிறைவு பூசை. வியாழன், ஆடு மாடெல்லாம் பலியிட்டு பெரிய பலிபூசை இன்று…
அவர்களின் மலைகிராம மூத்தவர், மூப்பர் என்று அழைக்கப்படும் தொண்ணூறு வயதைத் தாண்டிய தொண்டுக்கிழம், அவர் பலி பூசை முடித்து முதலில் சாப்பிட்ட பின் தான் கிராமக் குடிகள் சாப்பிடும் வழக்கம் அவர்களுடயது.
அன்றும் அது போல் நடக்க, அவர் சாப்பிட்டு நகர, மற்றவர்கள் உணவை கையில் எடுக்கும் நேரம் மூப்பர் வேணாம் வேணாம் என்று அலறினார். அனைவரும் அவரை பார்க்க, வாயில் நுரையுடன் உணவுப்பாத்திரத்தை தள்ளிவிட்டபடி தரையில் விழுந்தார். உடனே அவரை கயிற்றுக்கட்டிலில் போட்டு விஷ முறிவு மருந்து கொடுத்து அவரை ஒரு வழியாக மீட்டனர்.
மலைக் காற்றை சுவாசித்து, இயற்கை உணவை உண்ட அவர் தேகம் அந்த விஷமுறிவைத் தாங்கியது. ஆனாலும் முழுமையாக தேற நாள் ஆகும். மறுநாள் பூசைக்கு முதலாளி வருவதால் இதைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு சமைத்த உணவையெல்லாம் குழி தோண்டி புதைத்துவிட்டு வெறும் வயிரோடு படுத்தனர் மலையின மக்கள்.
***
அடுத்தநாள் காலை ஆதியிடம் மலைகிராம விழாவுக்குப் போகத் தயாராகும்படி சொல்லிய கோதைக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்ற, வேகமாக புவியைக் காணச் சென்றாள்.
“டேய் பொடியா,இன்னிக்கு நீ பிரீயா டா.”
“ஓய்.. காலேஜ் ஆரம்பிக்கறவரை ஐயா பிரீ தான். சொல்லு நெட்டைகொக்கு உனக்கென்ன வேலை ஆகணும் என்கிட்ட.”
“இல்ல டா. இன்னிக்கு அந்த மலைகிராம பூஜைக்கு போறோம். அதான் நீயும் வந்தா போட்டோஸ் எடுத்து உனக்கும் டயம் போகும். நல்லா இருக்கும். உன்னைப் பத்தி நான் ஒன்னு யோசிச்சு வச்சிருக்கேன். இன்னிக்கு நீ அங்க வந்து நல்லா கவர் பண்ணினா. அந்த விஷயத்தை நான் பாத்துப்பேன்…”
“என்னென்னவோ சொல்ற… எனக்கு அதெல்லம் தெரியாது. நான் வரேன் போட்டோஸ் எடுக்கிறேன். அப்பறம் நீ எப்படி சொல்றியோ அப்படி செய்யறேன்.”
“சோ ஸ்வீட் டா தம்பி நீ!” என்று அவன் கன்னம் கிள்ளி முத்தமிட்டாள்.
மூவரும் மாலை கிளம்பி மலை கிராமம் நோக்கிச் சென்றார்.
****
“டேய் நேத்து சோத்துல விஷத்தை வச்சும் தப்பிச்சிட்டானுங்க… இதை போய் தலைவர் கிட்ட சொன்னோம் நம்மள அடிச்சே கொன்னுடுவாரு.”
“சரி இப்போ என்ன பண்றது.”
“இன்னிக்கு அவங்க பூஜை முடியும் போது ஏதோ வானத்துல தெரியுமாம். அதை பார்த்துட்டு தான் பூஜை முடிப்பாங்களாம். அது தான் நமக்கு சரியான சமயம். மிஞ்சி போனா அம்பது பேர் இருப்பனுங்க. உள்ள பூந்து வெட்டிப் போட்டுடலாம்.”
“சரியா வருமா டா?”
“தலைவர் கையால சாகறதை விட இது நல்ல யோசனை தான். “
“சரி அப்போ நாம ஒரு பத்து பேர் முன்னாடியே போய் அங்க பதுங்கிடலாம்.”
“சரி.”
இவர்களின் சதி தெரியாமல் மகிழ்ச்சியாக ஆதி, கோதை, புவி மூவரும் நடுக்காட்டை நோக்கிச் செல்ல, அங்கே இருப்பவர்களோ காளி தேவியை அலங்கரித்துக்கொண்டிருந்தனர்.

அச்சோ…! இன்னைக்கு என்ன பண்ணப் போறாங்களோ தெரியலையே..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
பெருசா செய்யப் போறாங்க.
Interesting