Table of Contents

அமுதம் 33
வீட்டிற்கு வந்ததும் யார் யார் எந்தெந்த பொறுப்புகளில் இருக்க வேண்டும் என்று கலந்து பேசினார்கள்.
ராஜேஸ்வரன் ஒரு விஷயத்தில் உறுதியோடு இருந்தார். அனைவரும் பகுதி நேரமாக மேல் படிப்பு படிக்க வேண்டும். எந்த காரணத்திற்க்காகவும் இதை தளர்த்த மாட்டேன் என்றுவிட்டார்.
மதி படிக்கப்போவதாக ஏற்கனவே எடுத்த முடிவு தான். ஆனால் இவர்கள் பற்றி அவர் சொல்லவே இல்லை. இப்போது தான் சொல்கிறார். கோதை அமைதியாக,”மூன்று மாசம் போகட்டும் மாமா. யாருக்கு எந்த துறையில் மேலாண்மை படிச்சா சரியா இருக்கும் அப்டின்னு முடிவு பண்ணிட்டு அதுக்கப்பறம் நாங்க ஆறு பேரும் படிக்கிறோம். இப்ப மதி மட்டும் ஈவினிங் காலேஜ்ல படிகட்டும்.”
“சரிம்மா. நான் ஏன் சொன்னென்னா, இன்னிக்கு வேலை கிடைச்சதும் கெட்டியாக பிடிச்சுக்க சொல்ற மனசு, நாளைக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்போது, மேல படிச்சிருந்தா நல்லா இருந்திருக்குமேன்னு தோணும். அதுக்கு தான்.”
“சரிங்க மாமா. நீங்க எங்க நல்லத்துக்கு தான் சொல்லுவிங்க. மாமா நீங்க மேனேஜிங் டைரக்டர். நான் ரெஸ்ட்டாரெண்ட், சுபா ஃப்ரண்ட் ஆஃபீஸ் அப்பறம் கஸ்டமர் ரிலேஷன். கிருத்தி பேக் ஆஃபீஸ் அண்ட் மெய்ன்டெனான்ஸ், ராகுல் சர்வீஸ், பிரவீன் ரூம் இஞ்சர்ஜ், இன்பா செக்யூரிட்டி, மதி மேனேஜ்மென்ட். “
“என்ன நான் செக்யூரிட்டி வேல பக்கணுமா?”,இன்பா முறைக்க,
“அட லூசு! இது ஊட்டி டா. ரிசார்ட்க்கு பின்னாடி காடு இருக்கு. விலங்குகள் வரலாம், அதான் லோக்கல் ரவுடி எல்லாம் வரங்களாமே! நீ தானே பலசாலி. அதான். அப்பறம் வர்ற கெஸ்ட்க்கு தேவையான செக்யூரிட்டி அரேன்ஜ்மெண்ட்ஸ் நீ பாத்துக்கோ.”
“போய் தொலைங்க. ஏதோ என் பாதுகாப்புல இருக்கணும்ன்னு நீ இவ்வளவு ஆசைப்படறதால நான் ஒத்துக்கறேன்.” ரொம்பவும் ஸீன் போட்டு சொன்னான் இன்பா.
“அப்படி ஒன்னும் தேவையில்லை நீ என் வேலையை பாரு. நானே செக்யூரிட்டி பாத்துக்கறேன்” என்று கிருத்தி கையை முறுக்கிக்கொண்டு வர,
இன்பாவோ “ஐயோ அம்மா தாயே, தெரியாம பேசிட்ட இந்த சின்னஞ்சிறுவனை மன்னிக்க கூடாதா?”
“பொழச்சு போ.”
“சரி வேற ஏதாவது ரிசார்ட்ல மாத்தணுமா?”
“கண்டிப்பா. வாட்ச் ஏரியாவ நல்லா பண்ணனும். எனக்கு நிறைய ஐடியா இருக்கு மாமா .”
மதியோ “கொஞ்சம் கொஞ்சமா பண்ணலாம் கோதை. தினம் ஒரு மாற்றம் மாதிரி ” என்று சிரித்தாள்.
ராகுல் அவள் முகத்தயே பார்த்திருந்தான். ஆடி ஆடி பேசும் அந்த விழிகளையே பார்த்திருந்தான். அவனையே அறியாமல் மதி அவன் மதிக்குள் புகுந்துவிட்டாள்.
ஆதி ரிசார்ட் விஷயத்தில் உதவிக்கு தான் வரவா என்று கேட்க, கோதை ஒரே வார்த்தையில் “வேண்டாம்” என்று அனைவர் முன்னாலும் சொல்லிவிட்டாள்.
மற்றவர்கள் முகம் சுணங்க, ஆதி சத்தமாகச் சிரித்தான். அனைவரும் அவனை புரியாமல் பார்க்க, கோதையோ திரு திருவென்று முழித்துக்கொண்டிருந்தாள்.
அவள் காதை பிடித்தவன், “உன்னை எனக்கு நல்லா தெரியும். என்கிட்டயேவா?”
“என்ன ஆதி, மருமக என்ன சொன்னா?”
“அப்பா, நான் ஏற்கனவே ரெண்டு எஸ்டேட் டீ பாக்ட்ரி எல்லாம் பாக்கறதாலே, என்ன ரிசார்ட் விஷயமா எதுலயும் நுழைய விடக்கூடாதுன்னு மேடம் ஆர்டர் போட்ருக்காங்க.”
“அப்படியா மா?”
அவள் ‘ஆமாம்’ என்று தலையை ஆட்ட, மொத்த கும்பலும் சிரித்தது.
“உங்களுக்கு எப்படி அத்தான் தெரியும்?”
“நீ நவிலனை காலைல போன்ல மிரட்டிட்டு இருந்தியே அப்பவே தெரியும்.”
“போங்க அத்தான்”, என்று அவள் ஓடிவிட்டாள்.
ராஜேஸ்வரன் மனது நிறைந்து போனது. மகனின், உடல்நிலையில், மனநிலையில், வேலையில் என்று மருமகள் அக்கறையுடன் செயல்படுவது அவருக்கு இதமாக இருந்தது.
அகிலனின் முகவாட்டத்தை கண்ட அருணா ஆதிக்கு அழைத்து அவனை வந்து பார்க்க சொன்னாள்.
அவன் வரும்போது நவிலனும் வர, அகிலனின் வாடிய முகம் ஆதியைச் சங்கடப் படுத்தியது.
“என்ன அண்ணா?எங்க எல்லாருக்கும் தைரியம் சொல்லி, சிரிச்ச முகமா இருக்கற நீங்களே இப்படி இருந்தா நாங்க எல்லாரும் என்ன செய்ய?”
“இல்ல ஆதி அது…” என்று இழுத்தவன்,அருணா அங்கிருப்பதை பார்த்துவிட்டு, “வயல்ல வேல பார்த்த எனக்கு, இந்த அடுக்கு விவசாயம் புதுசு. பயம் இல்லனாலும் நான் எதிர்பாக்கிற மாதிரி உபகரணங்கள் கிடைக்கல.”
நவிலன், “கோயம்புத்தூர் போய் பாக்கலாம் ப்ரோ…”
“பாத்துட்டு வந்துட்டேன். சிலது இருக்கு. ஆனா எனக்கு விருப்பப்பட்டது போல இல்லை. “
“இப்போதைக்கு வாங்குங்க ப்ரோ… ஆன்லைன்ல பார்த்து கூட மத்ததை வாங்கிக்கலாம்.”
“இல்ல நவிலா, தேவையில்லாத செலவு, நான் எதிர்பாக்கற மாதிரி அமைஞ்சு போச்சுன்னா, ஒன் டயம் இன்வெஸ்ட்மெண்ட் மாதிரி.”
“அப்போ கவலையை விடுங்க. நான் ஐடியா சொல்றேன்.”
“என்ன டா ஏதோ ஈசியா சொல்ற?” ஆதி
“பின்ன, தேடவும் வேண்டாம், கஷ்டப்படவும் வேண்டாம்.’
“விளையாடாத நவி.”,ஆதி
“இல்ல ஆதி, நிஜம் தான். இந்த மாதிரி விவசாய உபகரணங்கள் தயாரிக்க நெறய பேர் இருக்காங்க. அவங்க அவங்க செஞ்சு வச்ச புது உபகரணங்களை சந்தை படுத்த முடியாம, வெறும் பேட்டேன்ட் மட்டும் வாங்கி வச்சிருப்பாங்க.”
“அப்படியா டா?”
“ஆமா. நாம அதை பதியற ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல அப்படி எத்தனை பேர் இருங்கங்கன்னு விசாரிக்கலாம். நமக்கு தேவையானது இருந்தா வாங்கிகலாம். இல்லனா இப்படி உருவாக்கி தாங்கன்னு அவங்களை கேட்கலாம். கண்டிப்பா ஆர்வமா செய்வாங்க. நமக்கு தேவையானது போலவே கிடைச்சிடா.. நாமளே அதை சந்தைப்படுத்த உதவி செய்யலாம்.”
“சூப்பர் நவிலா. இருந்த பிரச்சனையில இப்படி ஒரு வழி இருக்கிறதே மறந்துட்டேன். நான் கூட நம்ம தென்னந்தோப்புக்கு மரமேற ஒரு மிஷின் வாங்கினேன். அப்பறம் மட்டையெல்லாம் மரத்தூள் மாதிரி ஆக்க ஷ்ரேட்டடேர் கூட வாங்கினேன். அதுனால தான் நம்ம தோப்புல குப்பையே இருக்காது.”
“இதுல என்ன ப்ரோ இருக்கு? எனக்கு போய் தேங்க்ஸ் எல்லாம் சொல்றிங்க. சரி வாங்க கிளம்பலாம்.”
ஆதிக்கு அகிலன் பிரச்சனைகள் முடிந்துவிட்டதாகத் தோன்றவில்லை. இன்னும் முகம் தெளியாத அகிலனை வெளியில் அழைத்துச்சென்று, “இப்போ சொல்லுங்க.. உண்மைலேயே என்ன பிரச்சனை?”
“சித்தப்பாவும் மாமாவும் வந்திருக்காங்க.”
“எங்க?”
“ஊட்டிக்கு. அதுவும் யூனிஃபோர்ம்ல. “
“அண்ணா! வேலை விஷயமா வந்திருப்பாங்க. நீங்க ஏன் ஒரு மாதிரி ஆகுறிங்க?”
“இல்ல ஆதி… எனக்கு ரொம்ப கலக்கமா இருக்கு. ரெண்டு நாள் முன்னாடி கோதை கூட எங்கேயோ வெளிய போய்ட்டு வந்தா, எங்கன்னு கேட்டதுக்கு பதில் சரியா சொல்லல. அழுத்தி கேட்டத்துக்கு ஆதி அத்தான் வரட்டும் என்று சொல்லிட்டா.”
“அவளும் அவங்களை பார்த்திருக்கலாம்ன்னு நினைக்கிறீங்களா?”
“ஏன் இருக்க கூடாது?”
“சரி அண்ணா. நீங்க அமைதியா இருங்க. நான் பூமா கிட்ட பேசறேன்.”
“சரி ஆதி.”, என்று அகிலன் நவிலனை அழைத்துக்கொண்டு அவர்கள் உபகாரண வேலையாகச் சென்றனர்.
ஆதி ஆழ்ந்த யோசனையில் இருந்தான். முடிவாகத் தனக்குத் தெரிந்த இன்ஸ்பெக்டர் ஒருவரை அழைத்தான்.
“சொல்லுங்க ஆதி. ரொம்ப நாள் ஆச்சு. உங்க ரிசெப்ஷன்ல பார்த்தது.”
“ஆமா சார். இனிமே அடிக்கடி பார்க்க வேண்டி இருக்கலாம்.”
“என்ன சொல்றிங்க?”
அவன் ராஜேஸ்வரன் ரிசார்ட் வாங்க போகும் விஷயத்தை சொல்லி, அங்கே ரௌடிகளின் அட்டகாசத்தையும் சொன்னான்.
“அது என் ஜூரிஸ்டிக்ஷனல தான் வருது. நான் பார்த்துக்கறேன்.”
“அதுமட்டும் இல்ல சார்.”
“கமான் ஆதி சொல்லுங்க. ஏன் தயங்குறீங்க?”
“இல்ல சென்னை கமிஷனர், ஜாய்ண்ட் கமிஷனர் எல்லாம் ஊட்டில என்ன பண்றங்க?”
“ஓ மை காட்! உங்களுக்கு எப்படி தெரியும்? நாங்க அவங்க வந்த விசயத்தை கசிய விடவே இல்லயே!”
“யூனிஃபோர்ம்ல தான சார் இருக்காங்க?”
“ஆனாலும்… சரி விடுங்க… ஒரு பெரிய கேஸ்… அவங்க தேடுற குற்றவாளி இங்க இருக்கலாம்ன்னு நினைச்சு வந்திருக்காங்க.”
“ஓ! அப்படியா? சரி சார். நான் சொன்ன ரிசார்ட் விஷயம் மறந்துடாதீங்க.”
“இல்ல கண்டிப்பா.”
“சரி சார்” வைத்தவன் யோசனையில் ஆழ்ந்தான்.
“டேய். இதென்ன புது பிரச்சனை?”
“இப்போதான் அந்த மலைவாசி பசங்களை திசை திருப்பிட்டு ஒவ்வொரு வேலையா நடக்குது. அதுக்குள்ள இவனுங்க வந்து நிக்கிறானுங்க.”
“தலைவரே! இந்தவாரம் சரக்கு அனுபலன்னா, நீங்களே வச்சிக்கோங்கன்னு நேத்து மும்பை வாலா போன் பண்ணாப்ள…”
“சரி அனுப்பி தொலைய வேண்டியது தானே?
“தலைவா! சரக்கை வெளியவே கொண்டு வர முடியல, நடுக்காட்டு காளிக்கு திருவிழாவாம். சரக்கு மலை மேலேயே இருக்கு. கீழ கொண்டு வர வழி இல்லை.”
“அன்னைக்கே சொன்னேன். அவனுங்களை முடிச்சி விடுன்னு. சரி கொளுத்துனா பிரச்சினைன்னா, எல்லாருக்கும் விஷத்தை வச்சாவது கொல்லு.”
“சரி தலைவரே. இது நல்ல யோசனை. நான் பாத்துக்கறேன்…”
“அம்மா நீங்க அவசியம் வரணும்.”
சொல்லிக்கொண்டிருந்த மலைகிராம மக்கள், ஆதியின் வரவைப் பார்த்து புன்னகையுடன்,
“ஐயா எங்க நடுக்காட்டுல காளி கோவில் இருக்குங்க, அதுல இந்த வாரம் திருவிழா ஐயா. வர வெள்ளிக்கிழமை பூசை இருக்கு. கண்டிப்பா நீங்களும் அம்மாவும் கலந்துக்கணும்.”
“சரி. கண்டிப்பா வர்றோம்.” என்று சொன்ன ஆதியின் கண்களில் ஜீவன் இல்லை.
அவர்களை அனுப்பிவிட்டு வந்த கோதை, ஆதியின் தலையை அழுத்திவிட்டு வருடிக் கொடுத்தாள்.
அவன் அவள் வயிற்றில் முகம் புதைத்து. “உனக்கொரு பிரச்னைன்னா என்கிட்ட சொல்ல கூடாதா?”
“எனக்கென்ன அத்தான் பிரசன்னை?”
“இல்ல நான் கோயம்புத்தூர் போயிருந்தப்போ என்னவோ நடந்திருக்கு”.
மின்னலென மனதில் நினைவு வர, “ஆமா அத்தான் நான் தான் இந்த ஹோலி பண்டிகை களேபரத்துல மறந்துட்டேன்.”
“பரவாயில்ல இப்போ சொல்லு.”
“அத்தான், முகிலன் ஊட்டில தங்கி இருக்கான்.”
“என்ன? அவனுமா?”
“அவனுமான்னா? அப்ப வேற யார் தங்கி இருக்கா?”
“நான் சொல்றேன் பூமா. முதல்ல நீ அவனை பற்றி சொல்லு.”
“அவன் ஊட்டி வந்ததோட, நம்மளை கண்காணிக்க வேறு செய்யறான்.”
“அவனை…” கோவம் கொண்டு எழுந்த ஆதியை சமாதானம் செய்து,
“நானே போய் நல்லா நாக்க புடுங்கறது போல கேட்டுட்டேன். அந்த ஜென்மம் திருந்தாது.”
“நான் அவனுக்கு ஒரு வழி பண்றேன் பூமா..”
“விடுங்க அத்தான் சிரமப்பட வேண்டாம்.”
“உங்க அப்பாவும் மாமாவும் ஊட்டி வந்திருக்காங்க பூமா ஒரு கேஸ் விஷயமா.”
“ஓ! அதான் அகி செல்லம் ஒரு மாதிரியே இருக்காருன்னு அரு போலம்பிட்டே இருந்தாங்களா?”
“சரி விடு பூமா. வேலை விஷயம் தான். அவங்களே முடிஞ்சதும் கிளம்பிடப் போறாங்க…”
“சரி ரிசார்ட்க்கு ரவுடித்தனம் பண்ற குரூப்பை கண்டு பிடிச்சாச்சு. இனிமே அவங்களை அடக்க வழி கண்டு பிடிக்கணும்.”
“நான் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் கிட்ட பேசிட்டேன். கண்டிப்பா இனிமே தொல்லை இருக்காது.”
“ரொம்ப தேங்க்ஸ் அத்தான்.” என்று எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்தவள், “மாமாவை பார்த்துட்டு வரேன் “என்று ஓடிவிட்டாள்.
அவளின் மகிழ்ச்சி, அவனுக்கும் ஒட்டிக்கொண்டது. இனிமையான மனநிலையோடு தன் அலுவலைப் பார்க்கச் சென்றான் ஆதி.
ஹாய் இந்த தளத்துல கதைகள் தவிர சில பகுதிகள் இருக்கு. விருப்பம் உள்ளவங்க அதையும் பார்வையிட்டு கருத்து சொன்னா எனக்கும் ஊக்கமா இருக்கும்.
அஞ்சுவண்ணப் பூவே கதை இன்று முதல் தொடர்ச்சியாக அத்தியாயங்கள் பதியப்படும்.
உங்கள் ஆதரவை என்றும் நாடும்
ஜெயலட்சுமி கார்த்திக்
- Adhigara
- Amazon Kindle
- Amudhangalal Nirainthen
- Anjuvannapoove
- Arivoli
- Bakthi
- Become a member
- JKNovels
- re-run story
- recipe
- Short story
- SundayFundaySeries
- Uncategorized
- Youtube
- மனதின் மை

Nice update 👍👍👍
thank u
👌👌👌👌💕💕💕💕💕💕
thank u