“The best thing to hold onto in life is each other.”

அமுதம் 24
நீலாவால் விழா பாதிக்கப்படாதவாறு பார்த்துக்கொண்டான் ஆதி. நீலா எங்கு அவனிடம் பேச நெருங்கினாலும் அவளை தவிர்த்து கோதையின் கை பிடித்து தெரிந்தவர்களுடன் வளவளத்துக்கொண்டிருந்தான். நேரம் இரவு பத்தைத் தொட ஊட்டியின் சீதோஷணம் பழகாத கோதை குளிரில் நடுங்கத் தொடங்கினாள். வந்த விருந்தினர் பெரும்பாலும் சென்றிருக்க, ஆதி நவிலனை அழைத்துக்கொண்டு அவன் அப்பாவிடம் சென்றான்.
“அப்பா நான் இன்னிக்கு டீ எஸ்ட்ஸ்ட் வீட்டுக்கு கோதையை கூட்டி போறேன். நீங்க நவி கூட இருந்து செட்டில் பண்ணிட்டு எல்லாரையும் அந்த எஸ்டேட் கூட்டிட்டு போய்டுங்க. நான் காலைல வந்த பின்னாடி எல்லாரும் ஊருக்கு போனா போதும். சரியா?”
“சரி டா. நவி இருக்கான்ல நான் பாத்துக்கறேன். நீ கிளம்பு.”
ஆதி கோதையை நெருங்கி அவளை அணைத்தபடி காருக்கு சென்று அவர்களின் டீ எஸ்டேட் வீட்டை அடைந்தான். காரோட்டியிடம் அவன் ஏற்கனவே கொடுத்து வைத்திருந்த பையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றான்.
“எதுக்கு அத்தான் இங்க வந்திருக்கோம். அங்கேயே போயிருந்தால் அகி, ஷியாம் அப்பறம் எல்லாரோடையும் பேசிட்டு இருந்திருக்கலாம். போங்க அத்தான்.”
“அவங்க எல்லாரும் இன்னும் ரெண்டு நாள் இங்க தான் இருப்பாங்க. நாளைக்கு காலையில் இருந்து ரெண்டு நாள் முழுக்க முழுக்க உனக்கு தான். நீ என்ன சொல்றியோ அப்படி தான். ஆனா இன்னிக்கு என்னோட நாள். கண்டிப்பா நீ எனக்கு மட்டும் தான்” என்று அவன் இருபொருள் பட பேச,
“அட அத்தான்! என்ன ஒரு ஆச்சரியம்! நீங்க இப்படி எல்லாம் பேசுவீங்களா?”
“பேசாம இருக்க நான் என்ன சாமியாரா? பூமா! நான் உன் மனநிலைக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். நீ செஞ்சா சரியா இருக்கும் என்று அமைதியா இருந்தேன். நீ நீலா அத்தையை பேசும்போது நான் பேசாம இருந்ததுக்கு காரணம், வீட்டு பிரச்சனையை வீட்டில் இருக்கிற பெண்ணே தப்பை தட்டிக் கேட்க விடலைன்னா நாளைக்கு நாட்டு பிரச்சனையை எப்படி தைரியமா கேப்பாங்க? நீ பேசுனதுல தப்பில்லை அதனால தான் நான் உன்னை முன்நிறுத்தி உனக்கு துணையா பக்கத்துல நின்னேன். இப்படி எல்லாம் யோசிக்கறதால நான் நல்ல புருஷனா ஆகிட மாட்டேன். எப்பயும் உன்னை என் மனசுலயும் மடிலயும் சுமந்து, உன் சுகதுக்கங்கள்ல உனக்காக கடைசி வரைக்கும் நின்னாத்தான் நான் நல்ல புருஷன். உன்னை மனசுல தாங்கிட்டு தான் இருக்கேன், நல்ல புருஷனா மடிலயும் தாங்கணுமே!” அவன் கண்களில் குறும்பு வழிந்தது.
“அத்தான் சும்மா பிண்றிங்க போங்க…”
“இந்தா இதுல வேற ட்ரெஸ் இருக்கு மாத்திக்கோ.”
அவள் உடை மாற்றி வருவதற்குள் அவன் உடைமாற்றி, ரூமில் சின்னதாக அலங்காரம் செய்து வைத்து காத்திருந்தான். அவள் வந்ததும், “அத்தான் ரூம் ஒரு மாதிரி வித்தியாசமா இல்ல… நல்ல ரசனையான ஆள் தான். அகி செல்லம் ரூம் டேகரெட் பண்ணனும் போது அது வேற மாதிரி இருந்தது.”
“பூமா அது வேற ஒருத்தருக்கு பண்ணும்போது அது வேற பீல்… நமக்குன்னா அது வேற பீல் இல்லையா?”, என்று கால் நீட்டி அமர்ந்தான். அவளும் அவனுக்கு அருகில் அமர்ந்து அவன் தோள் சாய்ந்தாள். அன்றைய கதைகளை இருவரும் வளவளத்துக்கொண்டிருக்க, குளிர் வேகமாக அதிகரித்துக்கொண்டே போனது.
“அத்தான் ரொம்ப குளிருது”, என்று அவனை இன்னும் நெருங்கி அமர்ந்தாள். அவன் முகத்தில் ஒரு விஷமப்புன்னகை மலர, அதை கோதை கவனித்துவிட்டாள்.
“ஃபிராடு அத்தான் நீங்க… வேணும்ன்னே ரூம் ஹீட்டரை ஆஃப் பண்ணி வச்சிருக்கிங்க” என்று செல்லமாக அவனை அடிக்க, அவளின் கைகளை பிடித்தவன் அவளை தன் கைவளைவில் கொண்டுவந்து அவள் இதழ்களை மென்மையாக சிறை செய்தான்.
முதலில் விளையாட்டாக திமிறிய கோதை சில நொடிகளில் அவன் மென்மையில் கரைந்து போனாள்.
மெல்ல மெல்ல மொட்டவிழ்தல் போல, அவர்கள் உறவும் மெல்ல மெல்ல தாம்பத்திய வாழ்வில் மென்மையாய் மலரத்தொடங்கியது.
கோதை அவன் கைச்சிறையில் இருந்தபடி நடு இரவில் உறங்கிவிட்ட ஆதியை அன்பு பொங்க பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களுக்கு அவன் சிறு குழந்தை போல அன்புக்கு அடிமையானவனாக தெரிந்தாலும், சிறிது நேரத்திற்கு முன் அவனின் ஆண்மையைக் கூட அவளிடம் மென்மையாய் நிரூபித்த அவனின் அன்பு அவளுக்கு இந்த உலகையே வென்ற களிப்பைக் கொடுத்தது.
அவளுக்கு எப்போதும் ஒரு எண்ணம் உண்டு. பெண் மட்டுமே தன் கணவனுக்காக தன் கற்பை காத்து அவனுக்கு மட்டுமே தன்னை விருந்தளிக்கிறாள். எந்த சூழ்நிலையிலும் அவள் தன் கற்பை யாருக்காகவும் விட்டுத் தருவதில்லை. ஆசைகளை அடக்கி ஆளத் தெரிந்தவர்களாகவே பெண்களை கடவுள் படைத்திருப்பார் போல(விதிவிலக்குகள் எல்லா விஷயங்களிலும் உண்டு).
ஆனால் பல ஆண்கள் திருமணத்திற்கு முன்பும் சரி பிறகும் சரி தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள அவர்கள் தயங்குவதே இல்லை(இங்கும் விதிவிலக்குகள் பொருந்தும்). அது ஏன் ஒரு ஆண் அவனை கற்புள்ளவனாக கொண்டு தன் மனைவிக்கு அவனை தருவதில்லை? என்று அவள் எண்ணமிடுவாள்.
திருமணம் ஆகாத ஆண்களை சிலர் ‘பிரம்மச்சாரி’ என்று சொல்வதுண்டு அவன் தன் பிரம்மச்சரியத்தை காத்து தன் மனையாள் வந்ததும் சம்சார வாழ்வு ஏற்பான். இங்கு ஆண்களுக்கு கற்பு என்பது உள்ளது என்றே நம் முன்னோர் சொல்லி இருப்பதாக அவள் நினைப்பாள்.
இன்று மலரிலும் மெல்லிய அவனின் ஆளுமையில் அவனின் கற்பு தனக்கே அவன் தந்திருக்கிறான் என்று அவளுக்கு உணர்த்தியது. அது அவளுக்கு பெரும் நிம்மதியையும், அவன் மீது பேரன்பயும் கொடுத்தது.
எட்டி அவன் முன்னுச்சியில் முத்தமிட்டாள். அவன் முகத்தில் சிறு புன்னகை அரும்பியது, அவன் தூக்கத்தில் தான் இருந்தான். ஆனால் அவன் வாய் அவளுக்கு அவனின் காதலை சொன்னது.
“லவ் யு பூமா..”
அவள் அவனை கன்னம் கிள்ளி கொஞ்சிவிட்டுக் கண்ணயர்ந்தாள்.
அதிகாலை முதலில் எழுந்த ஆதிக்கு அவன் கழுத்தைச் சுற்றி கை போட்டு முகத்தில் புன்னகை உறைந்து நித்திரையில் இருந்த கோதை அவனின் கண்களுக்குப் புதிதாகத் தெரிந்தாள்.
ஒரு வருடம் உரிமையாக பேசினாலும், இந்த இரண்டு நாட்களில் அவள் அவனிடம் உரிமை எடுத்துக்கொண்டாலும், அவளே அவனை நெருங்கி முத்தமிட்டாலும் ஏதோ இழை போன்ற இடைவெளி இருந்தது போல் அவன் உணர்ந்தான். ஆனால் இன்று அவள் முகத்தில் தெரியும் ஏதோ ஒரு உணர்வு என்ன என்று அவனுக்கு புரியவில்லை. அவளுடைய கன்னத்தில் முத்தமிட்டவன், அவளை சௌகரியமாக படுக்க வைத்துவிட்டு குளியலறை சென்று குளித்து காலைக்கடன்களை முடித்து வந்தபோதும் கோதை உறங்கிக்கொண்டிருந்தாள். புன்னகை பரவிய முகத்துடன் அவன் தலை வார கண்ணாடியைப் பார்த்தான். அதில் தெரிந்த அவன் முகத்திலும் கோதையை ஒத்த உணர்வு தெரிய, அது அவர்களின் அன்பை ஜெயித்து புது வாழ்வு வாழ தொடங்கியதால் வந்த உணர்வு என்று புரிந்துகொண்டவன், அவளுக்கு டீ தயாரித்து விட்டு வந்து அவளை மெதுவாக எழுப்பினான்.
அவள் அருகில் அமர்ந்து அவள் கன்னம் தடவி, முடியை கோதியபடி “பூமா எழுந்துக்கோ மா எல்லாரும் நமக்காக காத்திருப்பாங்க. போகணும் டா.”, என்று சிறுபிள்ளையை எழுப்புவது போல அவன் எழுப்ப, அவளோ வாகாக அவன் மடியில் தலை வைத்து அவன் இடுப்பை சுற்றி கட்டிக்கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தாள். அவளின் இந்த செய்கையால் ஆதி தவித்துப்போனான்.
“பூமா” என்று அவன் அவனுக்கே கேட்காத குரலில் கூப்பிட, அவளோ “அவசியம் போகணுமா அத்தான்?” என்று துக்கத்திலேயே முனகினாள்.
அவனுக்கும் ஆசை தான். ஆனால் வீட்டில் அனைவரும் காத்திருப்பார்களே! ஒரு பெருமூச்சோடு,
“ரெண்டு நாள் தான டா பூமா. எல்லாரும் கிளம்பியதும் நானும் நீயும் தானே! நான் நிறைய பிளான் வச்சிருக்கேன்.” என்றான் விஷமமாய்.
“சீ அத்தான் காலைலேயே எப்படி பேசறீங்க பாருங்க!” என்று எழுந்து அமர்ந்தாள்.
“பூமா! அது அப்படி இல்ல. சில சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் அதை சொன்னேன். இப்போ சொல்லு யார் எப்படி பேசினது?”, என்று அவன் புருவம் உயர்த்திக் கேட்டிட, அவள் வெட்கத்தால் சிவந்த முகத்தை மறைக்க குளியலறைக்குள் புகுந்தாள்.
குளித்து முடித்தபின் தான் அவள் துடைக்க துண்டு கூட எடுத்து வராதது நினைவுக்கு வர, தன்னை தானே திட்டிக்கொண்டிருந்தாள்
‘அடி அறிவுக்கொழுந்தே.. குளிக்க வர்ற வெங்காயம் துண்டைக்கூட எடுத்துட்டு வராம வந்துட்டு, இப்போ அத்தான் கிட்ட எப்படி கேக்குறது?’
மெதுவாக தலையை மட்டும் வெளியில் நீட்ட, அவள் செய்கையால் புன்னகைத்துக்கொண்டவன், அவள் கேளாமலே வேண்டியதைக் கொடுத்து விட்டு அறையை விட்டு வெளியேறினான்.
உடைமாற்றி வந்தவளுக்கு அவன் சூடான டீ கொடுக்க, “தேங்க்ஸ் அத்தான் ” என்று வாங்கி மிடறு மிடறாக ரசித்துக் குடித்தாள்.
இருவரும் கிளம்பி பெரிய எஸ்டேட் வீட்டை அடைந்தனர். காரோட்டியை தயாராக இருக்கச் சொல்லி விட்டு உள்ளே நுழைந்தான் ஆதி. அங்கே ஒரு கூட்டமே சிரித்துக்கொண்டிருந்தது. அந்த கூட்டத்தில் நடுநாயகமாக அமர்ந்திருந்த அவன் மனைவி ஏதோ சொல்ல, அந்த கூட்டத்தின் சிரிப்பொலி அவனுக்கு சங்கீதமாய்க் கேட்டது.
அருகில் வந்தவன், “ரெண்டு கார் ரெடி மா, எல்லாரும் ஜாலியா போய் சுத்திப் பாத்துட்டு வாங்க.”
அகிலன், “எனக்கு இங்க எஸ்டேட் தான் ஆதி பாக்கணும், நான் அவங்களோட போகல.”
“அப்போ சரி ஷ்யாம், இன்பா, ராகுல், பிரவீன் நாலு பேரும் தான் பொறுப்பு. பூமா, சுபா, கிருத்தி, வது நாலு பேரும் சேட்டை செய்யாம போகணும். வெண்மதி, சுஜி, நர்மதா எப்பயும் சமத்து. அவங்கள பத்தி கவலை இல்லை.”
“நர்மதா எங்கேயும் வரமாட்டா.” நீலா
“உங்ககிட்ட யார் இப்போ பெர்மிஷன் கேட்டது? இது வெறும் தகவல் தான் உங்களுக்கு.”
“நான் தான் பெர்மிஷன் கொடுக்கணும்.”
“அவ என் மாமா பொண்ணு, நான் அனுப்பி வைப்பேன். எனக்கு யார் பெர்மிஷனும் தேவை இல்லை. ஆமா அவ என் மாமா பொண்ணு தான?” என்று சந்தேகம் போல் வினவ நீலா வாயை இழுத்து மூடிக் கொண்டாள்.
“அது.” என்று சொல்லிவிட்டு அவன் அறைக்குள் சென்றுவிட்டான்.
கோதை அன்னத்தைப் பார்த்து, “அத்தம்மா நீங்களும் வாங்க.”
“டேய் நான் பார்க்காத ஊட்டியா? “
“நீங்க ஊட்டியைப் பார்த்திருப்பீங்க ஆனா என்னோட பார்த்திருக்க மாட்டீங்கள்ல? அதனால நீங்க வாங்க.”
“நீ உன் கூட்டத்தோடு ஜாலியா போய்ட்டு வா டா. நான் உங்க கூட செட்டாக மாட்டேன்ல.”
“அட அடா அடா இவ்ளோ அழகா எங்க வேவ்லெந்த் கூட ஒத்துபோறீங்க. அப்பறம் என்னவாம்? நீங்க வர்றீங்க. அவ்ளோ தான். டாட்.”
“சரி நான் போய் தயாராட்டு வரேன் டா.”
“ஐய் ஜாலி.”
இதையனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த மகேஷும் ராஜேஷும் சிரித்து கொண்டனர்.
“அதென்னம்மா, அத்தம்மா மட்டும் வந்தா போதுமா? மாமா, சித்தப்பா எல்லாரும் என்ன பண்ணினோம்? எங்களையும் கூட்டிட்டு போய் ஊர் சுத்திக் காட்றது.”
“அப்படி இல்ல மாமா. உங்களை கூட்டிட்டு போன நீங்க அழகை ரசிக்க மாட்டீங்க, எங்களையும் ரசிக்க விட மாட்டீங்க. மெதுவா போ, ஓடாத, குனியாத, நிமிராத, இங்க நிக்காதன்னு வெளில போன பீலே இல்லாம ஏதோ ட்ரிலுக்கு வந்த மாதிரி பண்ணிடுவிங்க. ஏன்னா ஆண்களோட டிசைன் அப்படி! சோ நாங்க ஜாலிக்கு போறோம். ட்ரில்லுக்கு இல்ல. போயிட்டு வரட்டா… ” என்று வசதியாக அமர்ந்து வாயடித்த தன் மருமகளை அவருக்கு மிகவும் பிடித்தது.
“சரி என் பையனாவது உண்டா? இல்ல அவனையும் டீல்ல விட்டாச்சா?”
“சேச்சே. அவரை போய் டீல்ல விடுவேனா. அவராவே நான் வரலன்னு சொல்ல வச்சிட்டோம்ல்ல…” என்று இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்.
“அடப்பாவமே! ஏன் மா அவன் என்ன பண்ணினான்?”
அவர் காதருகில் ரகசியம் போல “ஐயோ மாமா எல்லாரும் போகும்போது அவரை கூட்டிட்டு போய்ட்டு நான் தான் நெளிஞ்சுகிட்டே இருக்கணும். இதெல்லாம் நான் சொல்ல முடியுமா உங்க கிட்ட?” என்று சொல்லி விட்டு நாக்கை கடித்துக்கொண்டாள்.
அவர் சத்தம் போட்டு சிரிக்க கோதை தங்கள் அறைக்குச் சிட்டாகப் பறந்து விட்டாள்.

சோ ஸ்வீட் 👌👌👌👌
பூமா ரொம்ப கலகலன்னு இருக்கா.
நீலா மாதிரி ஆளுங்களை நல்லாவே சமாளிக்குறா.
😀😀😀
CRVS (or) CRVS 2797
👌👌👌👌👌👌