Jeyalakshmi Karthik Novels
“Respect is the foundation of a stable way of life and the basis of a code of conduct.”

அமுதம் 18
எங்கோ சலங்கையை உலுக்கியது போல சிரிப்பொலி கேட்க, மெதுவாய் கண் திறந்து பார்த்தான் ஆதி. விடிந்து விட்டது. ஆனால் அவனருகில் மணவாட்டியைக் காணவில்லை.. சிரிப்பொலி தொடர்ந்து கேட்கவே முதல்நாளின் தாக்கம் ஏதும் இல்லாமல் புன்னகைக்கும் தன் பூவானவளின் குரலில் ஆதி பூரித்துப்போனான்.
தன் காலைக்கடன்களை முடித்து அறையை கடந்து வந்தவன் கண்களில் பட்டது, குளித்து முடித்து ஆதியின் ஷார்ட்சும் டீ ஷர்ட்டும் அணிந்து ஹாலில் கமலாவிடம் ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருந்த கோதை தான்.
ஆதி கோதையின் அருகில் அமர்ந்து, “குட் மார்னிங் பூமா”,என்று தன் வெண்பற்களைக் காட்டிச் சிரிக்க,
பூமா”,”ஸ்வீட் மார்னிங் அத்தான்.” என்று சமையலறை நோக்கிச் சென்றாள்.
கமலா அவள் பின்னே செல்ல, கமலாவின் முகத்தில் இருந்த பதட்டத்தைப் பார்த்து ஆதி நகைத்துக்கொண்டான்.
“அம்மா அம்மா. நான் தம்பிக்கு காபி போட்டு தரேன் மா”, என்று கோதையை அவர் தடுக்க,
“என்னது என் அத்தானுக்கு நீங்க காபி குடுப்பிங்களா? அப்போ நான் எதுக்கு அவருக்கு பொண்டாட்டின்னு இங்க இருக்கேன்?” என்று பல்லிடுக்கில் சிரித்தபடி கமலாவைக் கேட்க,
அவரோ பயந்து போனார். இவ்வளவு நேரம் சிரித்துப் பேசியவள் திடீரென மாறுபட்ட குரலில் பேசவும் அவருக்குக் கிலி பிடித்தது. அவர் மலங்க மலங்க முழித்து கொண்டு இருக்க, கோதை ஆதிக்கு “அத்தான் காபி” என்று நீட்டினாள்.
கமலாவின் முகத்தை வைத்தே கோதை ஏதோ விளையாடி இருக்கிறாள் அது புரியாத கமலா பயந்திருக்கிறார் என்றுணர்ந்து அவன் வாய்விட்டு சிரிக்க அவனுடன் கோதையும் இணைந்து கொண்டாள்.
தன் சின்ன முதலாளி சிரிப்பதற்கு தானும் சிரிக்க வேண்டுமா வேண்டாமா? என்று அவர் விழிக்க
கோதை அவருக்கு அருகில் வந்து, “கமலாம்மா என் கணவருக்கு காபியில் இருந்து நைட் பால் வரைக்கும் அவரோட வயிற்று விஷயங்களை நான் தான் கவனிப்பேன். நான் தான் அவருக்கு சமைப்பேன். நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணுங்க போதும்”, என்று ட்ரெயில் இருந்த இன்னோரு காபி கோப்பையை அவருக்கு கொடுக்க அவர் “வேண்டாம் ம்மா ” என்று பின்வாங்கினார்.
ஆதி “வாங்கிக்கோங்க மா. என் பூமா நல்லா சமைப்பா. நீங்க அவளோட காபியை முதல்ல சாப்பிட்டு பாருங்க” என்று சொல்ல, தன் முதலாளியின் மகனை பற்றி தன் கணவர் தன்னிடம் சொன்னதில் சிறிதும் குறைவில்லை இவ்வளவு இயல்பாக பழகுகிறார் என்று அவர் உள்ளம் நெகிழ்ந்தது.
காபியை வாங்கி பருகியவர் “அம்மா இவ்வளவு ருசியா காபி இருக்குமா என்ன? தினமும் நானும் இதே பால், சக்கரை காபித்தூள் தானே போடுறேன்! எனக்கு இப்படி காபி போட வரலேயே!” என்று அவர் வியந்து சொன்னார்.

கோதை வாயிலில் அரவம் கேட்டு திரும்பிப்பார்க்க அங்கே காரோட்டி நின்றிருந்தார்.
அவள்” வாங்க அண்ணா” என்று அவரையும் உள்ளே அழைத்து காபி கொடுத்தாள்.
“சார் நான் கிளம்படுங்களா?” என்று அவர் எழப் போக,
கோதை,”அண்ணா ரொம்ப தேங்க்ஸ். நேத்து நீங்க ரொம்ப நல்லா காரோட்டிட்டு வந்திங்க. கொஞ்சம் கூட இடைஞ்சல் இல்லாம நான் சென்னையில் இருந்து தூங்கிட்டே வந்திட்டேன். எப்படி அண்ணா அவ்வளவு லாவகமா ஓட்டுறிங்க? சாதாரணமா நான் வேகமா போகும்போது ரொம்ப பயப்படுவேன். ஆனா நீங்க மலைப்பாதையில் கூட ரொம்ப அருமையா ஓட்டுனிங்க. ரொம்ப நன்றி அண்ணா!”
“பதினைந்து வருட பழக்கம் மா. வேற ஒன்னும் இல்ல. நன்றி மா நான் கிளம்புறேன்”, என்று சொல்ல. ஆதி பணம் தருவான் என்று கோதை பார்த்து கொண்டிருந்தாள்.
அவனோ “அண்ணா ட்ரிப்ப ரெண்டு நாள் எஸ்ட்டென்ட் பண்ணிக்கலாம். இங்கேயே இருங்க. இன்னும் 2 மணி நேரத்துல வெளில போகணும்”, என்று அவரை அனுப்பி வைத்தான்.
கமலா கோதையிடம் “அம்மா நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டீங்களே?”
“மொதல்ல இந்த அம்மா அம்மாவை விடுங்க. கோதைன்னு கூப்பிடுங்க இல்லனா உங்களுக்கு பிடிச்ச மாதிரி கூப்பிடுங்க அம்மா மட்டும் நோ….”
“சரி பாப்பா. அந்த டிரைவர் தம்பிக்கு அதானே வேலை. ஏதோ அவரை அவ்வளவு பெருசா பேசிறீங்களே ஏன் பாப்பா?”
அவள் கமலாவைப் பார்த்து “கமலாம்மா இன்னிக்கு தேதில இருக்கறதுலேயே ரிஸ்க்கான வேலைல டிரைவர் வேலையும் ஒன்னு. இப்போதைய புள்ளிவிவரங்கள் படி அதிக மரணங்கள் ரோடு அக்சிட்டெண்ட்டில தான் நடக்குது. அதுவும் தானே மோதியோ, கட்டுப்பாடு இழந்து முட்டி ஏற்படற உயிரிழப்ப விட, ‘விக்டிம்’ன்னு சொல்லப்படற ஒருவரால் இடித்து இறக்கும் உயிர்கள் அதிகம்.
அதுலயும் நிறைய பேர் டிரைவர்கள் தான். இன்னிக்கு வண்டி எடுத்தா நல்லபடியா வீடு திரும்புவோமான்னு தெரியாத வேலையைத் தான் அவங்க செய்யறாங்க. அதுமட்டும் இல்ல. ரெண்டு மணி நேரமோ எட்டு மணி நேரமோ வண்டி ஓட்டி வந்தாலும் கஸ்டமர் கிட்ட தேவையில்லாம பேச கூடாது, அவர்களுக்குள் பேசிக்கிறதை கேக்க கூடாது, கஸ்டமர் விரும்பற பாட்டை தான் கேட்கணும், போன் பேச கூடாது, தனக்கு பிடிச்ச பாட்டை ஹெட் போன்ல கூட கேக்க முடியாது, ஏன்னா வெளில ஹாரன் சத்தம் கேட்காது. இப்படி தன்னை மொத்தமா ஒதுக்கி வச்சிட்டு தான் அவங்க வண்டியை ஓட்றாங்க.
ஆனா வர்றவங்க அவரை வித்தியாசமா நடத்துறதும், ஏன் யூனிஃபார்ம் போடல? ஏன் வண்டில லைட்டா மண்ணு இருக்கு? ஏன் கண்ணாடி வழியா பாக்கற?ன்னு அவர்களை படுத்தும் ரகமாவும் இருப்பாங்க. சிலர் அனுசரித்து போவாங்க. நமக்காக கண்ணு முழிச்சு நம்மள பத்திரமா கொண்டு வந்து சேர்த்த அந்த மனுஷனுக்கு ஒரு நன்றி சொன்னா நாம ஒன்னும் குறைந்து போக மாட்டோமே!
நம்மளோட இந்த வார்த்தைகள் அவருக்கு தன்னோட பணியின் மேல மதிப்பை கொடுக்கும். ஏதாவது ஒரு கஸ்டமரால அவர் சலிச்சி இருந்தாலும் நம்ம வார்த்தை அவருக்கு உற்சாகத்தை கொடுக்கும். நம்ம ஒரு ட்ரிப்க்கு கொடுக்கிற பணத்தை வச்சு அவங்க என்ன பங்களாவா கட்டப் போறாங்க? கார் டீயூ, குடும்பம், பிள்ளைங்க, டீசல்ன்னு பாதிக்கும் மேல இதுவே சரியா போய்டும். நம்ம குடுத்த பணம் அவங்களுக்கு அடுத்தநாள் மறந்துடும். ஆனா நம்மளோட அனுசரணையான வார்த்தை அவங்களை இன்முகத்தோட அடுத்த ட்ரிப்பை உற்சாகமா ஆரம்பிக்க உதவும்.” என்று பெரிய பேருரையே ஆற்றி முடித்தாள் கோதை.
அவள் சொன்னதை வாய் பிளந்து கேட்ட கமலாவின் கண்களுக்கு கோதை தான் இதுவரை பார்த்த மனுஷிகளில் மிகவும் வித்தியாசமானவளாகத் தெரிந்தாள்.
அவளின் இதுபோன்ற நல்ல குணங்கள் தெரிந்திருந்ததால் ஆதி சாதாரணமாக இருந்தான்.
“அவரு நல்லா ஓட்டினாரு. அதனால தான் அவரை ரெண்டு நாள் நீடிக்க சொன்னேன். இப்ப நான் உன்னோட பேசியபடி வரலாம். ட்ரைவ் பண்ணிட்டு வந்தா உன்னோட பேச முடியாது. மலை பாதை வேற. அதான்”, என்று தன் கூற்றிற்கான விளக்கத்தை அவன் கொடுத்தான்.
தன் வண்டி சாவியை மறந்துவிட்டு சென்ற காரோட்டி அதை எடுக்க வரும்போது இவர்களின் முழு சம்பாஷணைகளைக் கேட்டு நெகிழ்ந்து போனார்.
‘எத்தனை பேர் இப்படி நினைக்கிறார்கள்!’ என்று வியந்து அப்படியே வெளியில் நின்றுவிட்டார்.
“பூமா போ நேற்று கட்டியிருந்த புடவையைக் கட்டு. கொஞ்சம் எஸ்டேட் வரைக்கும் போய்ட்டு கோயம்புத்தூர் போகணும்.”
“ஐய்… அத்தம்மா பாக்க போறோமா?” என்று சிறுப்பிள்ளையை அவள் குதிக்க,
அவள் தலையை வருடி “இல்ல டா கொஞ்சம் ஷாப்பிங் போகலாம். இதே சேரி, என் ஷார்ட்ஸ் டீஷர்ட் போட்டே என்னோட இருந்திட உனக்கெதுவும் திட்டமா?” என்று அவன் கேலியாக கேட்கவே,
“ஆமா ட்ரெஸ் எடுக்கணும்ல! சரி போகலாம்”, என்று கிளம்ப எத்தனித்தாள்.
“பாப்பா உங்க வீட்ல யாரும் வரலையா? கோவமா இருக்காங்களா?”, என்று கமலா வினவ,
‘ஐயோ நன்றாக இருந்தவளை கிளப்பி விட்டுட்டாங்களே!’,என்று ஆதி நொந்தான்.
சிறு சுணக்கம் கூட இல்லாமல் கோதை ஆதியின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து, “எனக்கு யாரும் இல்ல கமலாம்மா. எனக்கு என் ஆதி அத்தான் மட்டும் தான்.”, என்றாள்.
ஆதி உருகிவிட்டான். கமலா இருப்பதை கூட மறந்து தன் பூமாவை இழுத்து இறுக அணைத்துக் கொண்டான்.
கமலா இங்கிதமாய் நகர்ந்து போய்விட்டார்.
“பூமா உனக்கொன்னும் வருத்தம் இல்லையே?”, என்று அவள் விழிகளை ஊடுருவிக் கேட்க, அவள் தன் மணவாளனின் மார்பில் சாய்ந்து கொண்டு அவன் கண்களை நோக்கியபடி ,”எனக்கு நீங்க போதுமே! என்னோட எல்லா உறவும் நீங்க தான். என் உணர்வுகளும் உங்களோடு மட்டும் தான். கண்டவர்களை நினைக்கவோ கலங்கவோ எனக்கு அவசியம் இல்லை.”, என்று தீர்க்கமான குரலில் சொல்லிவிட்டு அவன் இதழ்களை முதல்முறை தன் இதழ்களால் அணைத்தாள்.
காதலிக்கும் போதும் நாகரிகமாக பழகிய ஆதி நேற்று இரவும் அவளிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நடந்து கொண்ட விதம், தனக்கும் தன் எண்ணங்களுக்கும் அவன் தரும் முக்கியத்துவம் என்று அவன் பால் காதல் கரைபுரண்டு ஓட அதில் கரை சேர விரும்பாமல் மூழ்கி அவனில் முகிழ்ந்தாள் கோதை.
Jeyalakshmi Karthik Novels

டிரைவருக்கு அனுகூலமா கோதை பேசினது ரொம்ப அழகாவும், உண்மையாகவும் இருந்தது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
கோதைன்னு பேர் இருந்தாலே அருமை தானாம்😜😜😜😜😜
ama ma. kothai endrale arputham than. including u <3
💕💕💕💕💕💕💕💕💕💕💕