“Children make you want to start life over.”

அமுதம் 12
மாற்றங்கள் பெரிதும் இல்லாமல் கோதையின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. அன்று காலை தோட்டத்தில் அருணா பதற்றமாக இருக்க அவளை இடித்துக்கொண்டு அமர்ந்த கோதையை அவள் புன்னகையுடன் வரவேற்றாள்.
“கோதை எனக்கொரு ஹெல்ப் பண்ணுவியா?”
“என்ன அரு செல்லம் இப்படி கேட்டுட்டீங்க? உங்களுக்கு இல்லாததா… “
“உன்னோட வண்டி வேணும் கொஞ்சம் தருவாயா? பிளீஸ்”
தினமும் மாமியாருடன் சென்று அவருடனே திரும்புவதால், இத்தனை நாட்களில் தனக்கென்று ஒரு வாகனம் வேண்டும் என்று அருணா நினைத்தது இல்லை.
“அரு இதென்ன… என் வண்டி சாவி, சாவி மாட்டுற இடத்துல இருக்கு. உனக்கு வேணும்ன்னா எடுத்துக்க வேண்டியது தானே? இனிமே இப்படி செய்யாதிங்க அரு. பிளீஸ்.”
“சரிடா”, என்றவள் சிட்டாய் பறந்தாள். அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் வீட்டிற்குள் சென்றவள், முகம் மலர அகிலனை தேடினாள்.
மீனாட்சியும் லட்சுமியும் பேசியபடி பூ தொடுத்துக்கொண்டிருந்தனர்.
“அத்தை, சித்தி அவர் எங்க?”
“அவன் இப்போதான் தென்னந்தோப்புக்கு போனான் ஏன் டா?”
“ஒன்னும் இல்ல அத்தை. நான் போய் அவரை பார்த்துட்டு வரேன். ” என்று கிளம்பியவளை லட்சுமி தலையை வருடி அனுப்பி வைத்தார்.
அவள் கிளம்பியதும், “அவளை பார்த்தீங்களா அண்ணி? சந்தோஷமான விஷயம் போல. மொதல்ல அவனுக்கு சொல்ல நினைத்திருக்கா. அவளோட முகச் சிவப்பே சொல்லுது. சரி நாம தெரிஞ்சா மாதிரி காட்டிக்க வேண்டாம். அவ சந்தோசமா அவ விருப்பப்படி அவனுக்கே முதல்ல சொல்லட்டும்னு தான் அனுப்பி வச்சிட்டேன். இனிமே இப்படி தோப்பு பக்கமெல்லாம் அனுப்ப மாட்டேன்”, என்று மீனாட்சியிடம் சொல்ல, அவரும் சிரித்தபடி “சரி தான் லட்சுமி. ” என்று இருவரும் இனிப்பு செய்ய சமையலறை சென்றனர்.
தோப்பிற்குள் நுழைந்த அருணா தன் விழியைச் சுழல விட அதன் வட்டத்திற்குள் அகிலன் சிக்கவில்லை. தோட்டவேலை செய்யும் தாத்தா கண்ணில் பட, “அவரை பார்த்தீங்களா ஐயா?”
“தம்பி இப்போதான் கிளம்பிச்சு மா”, என்றதும் அருணா அயர்ந்து போனாள். அவள் சோர்வை உணர்ந்த பெரியவர், குடிக்க இளநீர் வெட்டிக்கொடுத்தார். அதை பருகியவளுக்கு சற்று தெம்பு வர, “எங்க போயிருப்பாங்க ஐயா? “
“மேற்குபக்கம் பாரும்மா”, என்றார்..
அவள் விழித்தபடி வண்டிக்கு செல்ல, அகிலன் அதனை ஒட்டினாற்போல தன் புல்லெட்டை நிறுத்தினான். அவனை நெருங்கி விட்ட அருணா, அவன் கைகளை கோர்த்துக்கொண்டாள். வெளியில் அருணா அதுபோல் நடப்பவள் அல்ல என்பதால் புருவம் தூக்கி என்ன என்றான் கேள்வியாய்.
அவள் அவன் கரத்தை நகர்த்தி அவள் வயிற்றில் பதிக்க அகிலனின் கண்கள் கண்ணீர் குளமானது.
“அரு.. நிஜமா?”
“ம்ம். இப்போ தான் வீட்ல கிட் வச்சி செக் பண்ணினேன். “
“தேங்க்ஸ் மா. லவ் யூ அரு.”
“வீட்ல சொல்லிட்டியா?”
“இல்ல அகி. முதல்ல உங்களுக்கு சொல்லணும்னு ஓடி வந்துட்டேன்.”
“சரி இரு” என்று தன் புல்லெட்டை தோப்பு வாசலில் நிறுத்தியவன், அவள் வந்த கோதையின் ஸ்கூட்டியில் அவளை அழைத்துக்கொண்டு வீடு வந்தான்.
உள்ளே நுழையும்போதே வீட்டில் அனைவரும் இருக்க அகியும், அருணாவும் ஒருவரை ஒருவர் ‘என்ன?’ என்பதுபோல் பார்த்துக்கொண்டே வந்தனர்.
ஓடி வந்த கோதை அருணாவை அணைத்துக்கொண்டு, “ஆமாம் தானே?”, என்றாள்.
அருணா அமோதிப்பாய் தலையசைத்தும், “ஏஏஏ… ” என்று அவள் கத்த, ஆங்காங்கே பலூன்கள் உடையும் சத்தம் கேட்க, அகி, அருவுக்கு மேலே பூமழை பொழிந்து. இருவருக்கும் ஒன்றும் புரியவே இல்லை.
“என்ன திருட்டுமுழி முழிக்கிறீங்க? என்ன டா நாம இவங்க யாருக்கும் சொல்லவே இல்லையே இவங்க என்னன்னு நெனச்சு கொண்டாடுறாங்கன்னு குழப்பமா இருக்கா?”
இருவரும் ‘ஆம்’ என்று தலையசைக்க “அதை அப்பறம் சொல்றேன். போய் எல்லார்கிட்டயும் ஆசிர்வாதம் வாங்குங்க.”
அகியும் அருவும் தாத்தா பாட்டி, அப்பா அம்மா, சித்தப்பா சித்தி, அத்தை மாமா கடைசியாக காமாட்சி வரை ஆசி பெற்று அவர்கள் வழங்கிய இனிப்பை உண்டு நாங்கள் பெற்றோர்கள் ஆக போகிறோம் என்ற சிறு கர்வம் கூட வந்தது.
பெரியவர்கள் தத்தமது வேலையை பார்க்கச் செல்ல, ஷியாம், மதி இருவரும் அருணாவை கிண்டல் செய்து கொண்டு இருந்தனர். அகி அருணாவின் முகசிவப்பை ரசித்தவண்ணம் கைகட்டி சற்று தள்ளி நின்றிருந்தான். அவன் ஒரு தோளில் கோதையும் மறுதோளில் சுஜியும் சாய்ந்து
தாய்மை வாழ்கென தூய செந்தமிழ் ஆரிராரோ ஆராரோ
தங்க கை வளை வைர கை வளை ஆரிராரோ ஆராரோ
இந்த நாளிலே வந்த ஞாபகம் எந்த நாளும் மாறாதோ
கண்கள் பேசிடும் மௌன பாசையில் என்னவென்று கூறாதோ
தாய்மை வாழ்கென தூய செந்தமிழ் பாடல் பாட மாட்டாயோ
திருநாள் இந்த ஒரு நாள் இதில் பலநாள் கண்ட சுகமே
தினமும் ஒரு கனமும் இதை மறவாதென்தன் மனமே
விழி பேசிடும் மொழி தான் இந்த உலகின் பொது மொழியே
பல ஆயிரம் கதை பேசிட உதவும் விழி வழியே
என்று பாடிட, கண் கலங்கிய அகி ஒரே தாவில் அருணாவை அணைத்தான். அவளுக்கு அவன் ஏன் அணைத்தான் என்று தெரியாவிட்டாலும், அவன் அணைப்பின் இறுக்கம், அவர்களுக்கான பந்தத்தை அவன் எவ்வளவு மதிக்கிறேன் என்றும், வரப்போகும் சிறு ஜீவன் அவர்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என அவளுக்கு உரைத்தது.
சின்னவர்கள் நழுவ, அருணாவை அணைத்தபடி தனதறை நோக்கி சென்றான் அகிலன்.
முல்லைப்பந்தல் கல்மேடையில் அமர்ந்த கோதை ஆதியை அழைத்தாள். போனை எடுத்ததும்,”என்ன பூமா இன்னிக்கு அதிசயமா காலைலயே அத்தான் ஞாபகம். வீட்டில் என்ன விசேஷம்?”
“எப்படி அத்தான் இப்படி இருக்கீங்க? சான்சே இல்ல. ம்ம்ம்… அகி அப்பா ஆக போறான்.” வெட்கத்தோடு கோதை சொல்ல,
“வாவ், சூப்பர். நான் அகி அண்ணா கிட்ட பேசுறேன்” என்று போனை வைத்துவிட்டான்.
கோதைக்கு சப்பென்று இருந்தது.
‘நாம பேச வந்த விஷயம் என்ன? இவரு பண்ண வேலை என்ன? கடவுளே இவரை கட்டிக்கிட்டு நான் என்ன பாடு பட போறேனோ?’ மனதில் அவனைத் திட்டியபடி அமர்ந்திருந்தாள். இரண்டு நிமிடத்தில் மறுபடியும் அவளை அழைத்தவன்,
“இப்போ சொல்லு பூமா, அகி அண்ணா விஷயம் கேள்விப்பட்டதும் மேடம் உடனே என்னை தேடினியா??”
“இப்போ எதுக்கு எனக்கு கால் பண்ணுனீங்க அத்தான்? அகி கிட்டயே பேசவேண்டியது தான? அவன் விஷயத்தை அவனே சொல்ல மாட்டானா? நான் ஏன் சொன்னேன்? உன்கிட்ட…”
“பூமா நான் அவ்வளவு முட்டாள் இல்ல டா. பேச ஆரம்பிக்கும் போதே நீ ரொம்ப தடுமாறியது தெரிஞ்சது. உடனே என்கிட்ட பேச நீ நினைச்சாலும் உன் வெட்கம் அதுக்கு இடம் கொடுக்கல, அதனால தான் உனக்கு சின்ன இடைவேளை குடுத்தேன். இப்போ பாரு என்கிட்ட எவ்வளவு வாய் பேசுற…”
மறுபடியும் அவளை வெட்கம் ஆட்கொண்டது.
“இல்ல அத்தான், அகி அருணாவை அணைச்சு கூட்டிட்டு போனான். அப்போ நாம இந்த மாதிரி விஷயம் சொன்னா நீங்க என்ன சொல்லுவிங்க, உங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு நினைத்தேன். அதான் உங்ககிட்டயே கேட்கலாம் அப்படின்னு…”, என்று இழுத்தாள்.
“பூமா இதெல்லாம் வாய்வார்த்தையா சொல்லி புரிய வைக்க முடியாது டா. அந்த தருணம் நம்ம வாழ்க்கையில் சீக்கிரமா வரப் போகுது. நீ அதை உணரணுமே தவிர தெரிஞ்சுக்க கூடாது.”
“அப்படியா அத்தான்? “,கேட்ட கோதையின் குரல் குழைந்திருந்தது.
“ஆமா பூமா. கண்டிப்பா நம்ம கல்யாணத்துக்கு பின் ஒவ்வொரு நொடியும் நான் உனக்கு என் அன்பையும் அரவணைப்பையும் உணர வைப்பேன். “
கோதையின் உள்ளம் அந்த நாளுக்காய் தவமிருக்க ஆரம்பித்தது.

Nice update 👍👍👍
Thanks akka
ஆகா… இவங்களுக்கு இன்னும் கல்யாணமே ஆகலை, அதுக்குள்ள பேபி வரைக்கும் போயிட்டாங்களா..? இந்த கனவு கை கூடுமா, இல்லை கலைந்து போகுமா…
தெரியலையே..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
சீக்கிரமே பார்ப்போம்…
👌👌👌👌👌💕💕💕💕💕💕