Amudham 1

அமுதங்களால் நிறைந்தேன்

மயக்கும் மாலை வேளையில் அந்த பெரிய வீட்டின் உள்ளே மட்டும் அவ்வளவு பரபரப்பு.

“மணி அண்ணா, அத்தான் ரூம் சுத்தம் பண்ணியாச்சா?”

“ஆச்சு சின்னம்மா..”

“ராசாத்தி அக்கா, அத்தான் ரூம்ல பூச்செண்டு மாத்தியாச்சா?”

“ஆச்சு பாப்பா”

“டிரைவர் அண்ணா ஏர்போர்ட் போயாச்சா??”

“கடவுளே..ஏன் இப்படி எல்லாரையும் படுத்தி எடுக்கற? அவன் என்ன விருந்தாளியா? விடுமா”, என்றார் நம் நாயகி பூங்கோதையின் தாய் மீனாட்சி.

“அத்தான் எவ்வளவு வருஷம் கழிச்சு வராரு நம்ம தானம்மா நல்ல பாக்கணும். இல்லனா மறுபடியும் அமெரிக்காக்கே ஓடிட்டாருன்னா.. “என்று தன் மீன் விழிகளை அங்கும் இங்கும் நீந்த விட்டு தன் லட்டு கன்னத்தில் கை வைத்து கேட்டாள் பூங்கோதை.

இதையெல்லாம் முறுவலுடன் கேட்டபடி அமர்ந்திருந்தார் அந்த வீட்டின் தலைவரும் முதல் தலைமுறையுமான தாத்தா ஜோதிலிங்கம்.

தாத்தா ஜோதிலிங்கம் முறுக்கு மீசையும், இன்னும் திணவுடைய தோள்களைக் கொண்ட வீரப்பரம்பரையின் மூத்த உறுப்பினர். பாட்டி வனபார்வதி அந்த காலத்து பியூசி. இவர் இப்படித்தான் என்று எளிதில் கணிக்க முடியாத பார்வையும் பேச்சும் கொண்டவர்.

இவர்களுக்கு இரண்டு மகன் இரண்டு மகள் முறையே பெரியவர் இந்திரன் நிலபுலங்களை காத்து விவசாயம் செய்பவர் ,கறார் பேர்வழி,அவர் மனைவி தமயந்தி மெத்தப் படித்தவர், பள்ளி ஒன்றை நிறுவி நல்வழியில் நடத்துபவர். கண்டிப்பும் அன்பும் கலந்தவர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் அகிலன் விவசாயக்  முடித்து அப்பாவுக்கு துணையாய் இயற்கை விவசாயம் செய்யும் ஹைடெக் விவசாயி அவன் மனைவி அருணா மாமியாரின் பள்ளியில் தலைமை ஆசிரியை. இந்த குடும்பத்தை கலைக்க விரும்பாத அன்பு மருமகள்.

இரண்டாவது முகிலன் என்ஜினீயரிங் படித்து அமெரிக்காவில் பணியில் இருக்கிறான். படித்ததும் அங்கே தான். அவன் வரத்தான் இங்கே இவ்வளவு ஏற்பாடுகள். அவன் வந்ததும் அவனைப் பற்றி நீங்களே தெரிந்துகொள்வீர்கள். மூன்றாவது வெண்மதி  கல்லூரி 2 ஆண்டில் இருக்கிறாள். அமைதியின் அடையாளம் அவள் தான். பண்பானவள்,பணிவானவள் இப்படி சொல்லிட்டே போலாம். நல்ல அழகியும் கூட.

இந்திரனுக்கு பின் அவர் தங்கை மீனாட்சி அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். பின்ன நம்ம பூங்கோதையை சமாளிக்க வேண்டாமா.. வேலைக்கும் போய் இவளையும் மேய்க்க முடியலனு விட்டுட்டாங்க. அவர் கணவர் சுந்தர் போலீஸ்காரர். கண்டிப்பானவர் ஊருக்கு. வீட்டுக்கு எஸ் மேடம் போடும் அன்புள்ளம் கொண்டவர். இவர்களின் தவப்புதல்வி தான் நம் நாயகி பூங்கோதை. கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் 2 ஆம் ஆண்டு படிக்கிறாள். வீட்டில் உள்ளவர்களுக்கு “கோதை” நண்பர் வட்டத்திற்கு “பூ”. வாலு, வாலு என்றால் அப்படி ஒரு அறுந்த வாலு. எப்போ என்ன செய்வான்னு யோசிக்கவே முடியாத அதிசய பிறவி. ஆனால் தெரியாமல் கூட தவறு செய்ய மாட்டாள். சேட்டைதான். அதுவும் இனிமையாய் இருக்கும்.

இந்திரனுக்கு மூன்றாவது கதிர்வேலன் இவரும் போலீஸ் தான். சுந்தர் இவரோட ட்ரைனிங் நேரத்தில் இருந்து நெருங்கிய நண்பர். தன் நட்பு விட்டு போகக்கூடாதுன்னு தன் அக்காவுக்கு கல்யாணம் பண்ணி மச்சானாகிட்டாரு. இவர் மனைவி லட்சுமி. இந்த வீட்டிற்கும் அவர்தான் லட்சுமி. இந்த குடும்பத்தை அழகாய் அன்பாய் பார்த்துக்கொள்பவர். இந்த வீடு தான் அவர் உலகம். இவர்களுக்கு 2 பிள்ளைகள்.மகன் ஷியாம் மருத்துவம் 3 ஆம் ஆண்டு படிக்கிறான். அமைதி அதேநேரம் அளுத்தமானவன். சரி தவறு என்று பார்த்து முகத்திற்கு நேரே சொல்லும் தைரியம் உடையவன். மகள் சுஜிதா பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள். பயந்த சுபாவம். கோதையின் சோதனை எலி.

இந்த குடும்பத்தின் இரண்டாம் தலைமுறை கடைக்குட்டி  வாரிசு காமாட்சி. அமைதியானவள், இருந்தும் கணவருடன் இல்லாமல் தாய் வீட்டில் இருப்பவர். இவரின் கதையை பின்பு பார்ப்போம்.

அட நம்ம இதெல்லாம் பேசறத்துக்குள்ள முகிலன் வாசலுக்கு வந்துட்டான் போல.. வாங்க அங்க போகலாம்.

பூங்கோதையின் கட்டளைக்கு இணங்க டிரைவர் அதிக ஒலி எழுப்பியபடி அந்த பெரிய வீட்டின் வாயிலை அடைந்தார். உள்ளே முகிலனும் அவனிடம் நட்பு பாராட்டும் ஆதிலிங்கேஸ்வரனும் இருந்தனர்.

அட நம்ம நாயகன் யாரு….??


அன்பும் காதலும் நிறைந்த அமுதப்பெண்ணின் கதை.. பூங்கோதை எனும் அன்பும் குறும்பும் நிறைந்தவள், வாழ்வில் வரும் காதலும், அவளுக்கு கிடைக்கும் அன்பும், அவள் கொடுக்கும் அன்பும் அதற்கு மேல் அவள் சந்திக்கும் பிரச்சனைகள் என்று பல திருப்புமுனைகளைக் கொண்ட சுவாரஸ்யமான படைப்பே “அமுதங்களால் நிறைந்தேன்”.


ஆம், நிச்சயமாக! இதோ “அமுதங்களால் நிறைந்தேன்” என்ற தலைப்பில் ஒரு கவிதை:


அனைவரையும் அணைத்துச் செல்லும் அக்கோதையின் அன்பு,

கன்னியவள் மனதில் கவிதையாய் ஒரு காதல்!

ஆக்காதல் பற்றி அழகிய கவிதை ஒன்று பார்ப்போமா?

அமுதங்களால் நிறைந்தேன்

சிறு பறவை சிறகசைக்க, காலைக் கதிரும் முளைக்க,

புதியதோர் நாள் பிறக்க, மனதில் மகிழ்ச்சி மலர,

நினைத்துப் பார்க்கிறேன் நான், கிடைத்த வரங்களை எல்லாம்,

ஆம், அமுதங்களால் நிறைந்தேன் நான்!

அன்னை மடியில் கண்ட அன்பு, அகிலம் எங்கும் தேடினாலும்,

கிடைத்திடுமோ வேறெங்கும்? அந்த வாஞ்சை, அந்தப் பரிவு,

என்றும் என்னுள் நிறைந்திருக்க, இன்பம் கோடி கண்டேன் நான்,

ஆம், அமுதங்களால் நிறைந்தேன் நான்!

தந்தை கரங்கள் தந்த தைரியம், தடைகள் எல்லாம் தகர்த்தெறிய,

துணை நின்ற தோழமை, தோள்கள் தந்த ஆதரவு,

பயணங்கள் பல செய்திட, பாடம் கற்றுக் கொடுத்திட,

ஆம், அமுதங்களால் நிறைந்தேன் நான்!

இறைவன் அருளால் பெற்ற இன்னல்கள், இவை எல்லாம் பாடங்களே,

வலிகள் தந்த அனுபவம், வலு சேர்த்ததே வாழ்வினுக்கு,

ஒவ்வொரு அடியிலும் ஒளியாய் வந்து, உயர்வுக்கு வழி காட்ட,

ஆம், அமுதங்களால் நிறைந்தேன் நான்!

பசுமையான புல்வெளிகள், பாய்ந்தோடும் நதிகளின் ஓசை,

மரம் செடிகொடிகளின் மாண்பு, மண்ணின் மணம், மழையின் சங்கீதம்,

இயற்கையின் அழகில் கரைந்து, ஆனந்தம் பொங்கி வழிய,

ஆம், அமுதங்களால் நிறைந்தேன் நான்!

கனவுகள் பல காண, கரம் கோர்த்து துணை நிற்க,

நேசங்கள் பல சூழ, நிம்மதிப் பெருமூச்சு விட,

வாழ்வின் ஒவ்வொரு நொடியும், வசந்தமாய் மாறிடவே,

ஆம், அமுதங்களால் நிறைந்தேன் நான்!


7 thoughts on “Amudham 1

  1. ஓ மை காட், ஓ மை காட்,.! அமுதங்களால் நிறைஞ்சிருக்குதோ இல்லையோ, ஃபேமிலி நிறைஞ்சிருக்குன்னு தோணுது.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. எல்லாரும் திரும்ப வந்தாச்சு😍!!… பூவோட சேட்டையெல்லாம் திரும்ப பார்த்து ரசிக்கலாம்!!… எனக்கு நாயகன் யாருன்னு தெரியுமே😜

    1. சூப்பர்👌👌👌, குடும்ப நபர்களை ஞாபகம் வைச்சிக்கறதே பெரிய டாஸ்க் போல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!