For the love of books
திருவாசகம் - எட்டாம் திருமுறை - மாணிக்கவாசகர் அருளிய வாழாப்பத்து
-------------------------------------------------------------------------------------------
பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்
பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ அருளிலை யானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்றருள் புரியாயே. 1
வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே
மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
உம்பரும் அறியா ஒருவனே இருவர்க்
குணர்விறந்துலக மூடுருவுஞ்
செம்பெருமானே சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
எம்பெருமானே என்னையாள்வானே
என்னைநீ கூவிக் கொண்டருளே. 2
பாடிமால் புகழும் பாதமே அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
ஊடுவ துனனோ டுவப்பதும்
உன்னை உணர்த்துவ துனக்கெனக்குறுதி
வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்றருள் புரியாயே. 3
வல்லைவாளரக்கர் புரமெரித்தானே
மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
தில்லைவாழ் கூத்தா சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
எல்லைமூவுலகும் உருவியன் றிருவர்
காணும்நாள் ஆதியீ றின்மை
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. 4
பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
எண்ணமே உடல்வாய் மூக்கொடு
செவிகண் என்றிவை நின்கணே வைத்து
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்றருள் புரியாயே. 5
பஞ்சின்மெல்லடியாள் பங்கநீ யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த
அருளினை மருளினால் மறந்த
வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. 6
பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திருவுயர்கோலச் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக்
கலந்துநான் வாழுமா றறியா
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. 7
பந்தணை விரலாள் பங்கநீ யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
அந்தமில் அமுதே அரும்பெரும் பொருளே
ஆரமுதே அடியேனை
வந்துய ஆண்டாய் வாழ்கிலேன்
கண்டாய் வருக என்றருள் புரியாயே. 8
பாவநாசாவுன் பாதமே யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேவர் தந்தேவே சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
மூவுல குருவ இருவர்கீழ் மேலாய்
முழங்கழலாய் நிமிர்ந்தானே
மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. 9
பழுதில்தொல் புகழாள் பங்கநீயல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
தொழுவனோ பிறரைத் துதிப்பனோ
எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய்
மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. 10
திரு. சிதம்பரநாதன் அவர்கள் குரலில் இப்பாடலை கேட்க,
கமெண்ட் பண்ணிட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்!
தளத்தில் எளிமையாக Google உதவியுடன் லாகின் செய்து கொள்ளலாம். லாகின் செய்து வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
❤️ என்றும் அன்புடன் ❤️
உங்கள்
ஜெயலட்சுமி கார்த்திக் ❤️
-------------------------------------------------------------------
Facebook public group
https://www.facebook.com/share/g/1EfotVeLPU/
Facebook private group
https://www.facebook.com/share/g/17BRubeTcu/
-------------------------------------------------------------------
Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaF4tFhHrDZft1t0Fl1y
Whatsapp Community Group
https://chat.whatsapp.com/DFzGk7B2foDLdXdYjyK1xa
-------------------------------------------------------------------
Youtube Channels
https://www.youtube.com/@JeyalakshmikarthikNovels
https://www.youtube.com/@jeyalakshmi_karthik
-------------------------------------------------------------------
Blog:
https://jeyalakshmikarthiknovels.blogspot.com/
-------------------------------------------------------------------
தமிழ் நாவல்கள் என்பவை வெறும் கதைப்புத்தகங்கள் அல்ல; அவை நம் சமூகத்தின், கலாச்சாரத்தின், மனித உணர்வுகளின் ஆழமான பிரதிபலிப்புகள். ஒரு நாவலைப் படிக்கும்போது, நாம் ஒரு புதிய உலகத்திற்குள் அடியெடுத்து வைக்கிறோம். அங்கு நாம் பல்வேறு கதாபாத்திரங்களைச் சந்திக்கிறோம், அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கிறோம், சமூகப் பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்கிறோம், வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்க்கிறோம்.
கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று நாவல்கள் நம்மை சோழர் காலத்திற்குக் கொண்டு செல்கின்றன என்றால், புதுமைப்பித்தனின் சிறுகதைகள் சமூக அவலங்களை சாடுகின்றன. ஜெயகாந்தனின் படைப்புகள் மனித மனதின் சிக்கலான அடுக்குகளை அவிழ்க்கின்றன. சுஜாதாவின் எழுத்துக்கள் அறிவியல் புனைகதைக்கும், சமூக யதார்த்தத்திற்கும் பாலமாக அமைகின்றன. சமீப காலங்களில், இளம் எழுத்தாளர்கள் புதிய களங்களிலும், நவீன கதை சொல்லும் உத்திகளிலும் ஈடுபட்டு, தமிழ் நாவல் உலகிற்குப் புத்துயிர் ஊட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு தமிழ் நாவலும் ஒரு தனித்துவமான பயணத்தை நமக்கு அளிக்கிறது. அது ஒரு காதல் கதையாக இருக்கலாம், ஒரு துப்பறியும் மர்மமாக இருக்கலாம், ஒரு சமூக சீர்திருத்தக் குரலாக இருக்கலாம், அல்லது வெறும் பொழுதுபோக்கிற்காக எழுதப்பட்ட ஒன்றாக இருக்கலாம். ஆனால் அனைத்திலும், எழுத்தாளனின் சிந்தனையும், மொழியின் அழகும், தமிழ் மண்ணின் வாசனையும் கலந்திருக்கும். தமிழ் நாவல் இலக்கியம் காலம்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையும் தனக்கே உரிய பாணியில், தனக்கே உரிய பார்வையில் கதைகளைச் சொல்கிறது. வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கு, தமிழ் நாவல்கள் ஒரு பொக்கிஷம். அவை நம் சிந்தனையைத் தூண்டுகின்றன, கற்பனைத் திறனை வளர்க்கின்றன, மேலும் நம் வாழ்வை செழுமைப்படுத்துகின்றன.
