For the love of books
Trending படம் எப்படி இருக்குன்னு பார்ப்போமா?
ஆக்டர்ஸ்: கலையரசன், பிரியாலயா, பிரேம்
டைரக்டர்: சிவராஜ்.என்

முதல்ல ஒரு விஷயத்தை சொல்லிட்றேன். படம் முடியும்போது கலையரசன் சாகல. எனக்கு அப்பாடான்னு இருந்தது. அவர் நடிக்கிற பல படங்கள்ல அவரை போட்டுத் தள்ளிடுவாங்க. அந்த வகையில் எனக்கு அப்பாடி பீலிங் வந்தது.
ரொம்ப கம்மியான காஸ்ட்(cast) வச்சு ஒரு படம் எடுத்திருக்காங்க. மனித மன வக்கிரங்களை அப்பட்டமா காட்டி இருக்காங்க.
பிரபலமான யூடியூபர் தம்பதி தான் கலையரசன் பிரியா. படத்தில் அர்ஜுன்மீரா.
கப்பிள் வீடியோ போட்டு டிரெண்ட் ஆகி அதுல பணக்கார வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு வழுக்கி விழும் இந்தக்கால இளைய தலைமுறை தம்பதி.
இதுல நிறைய நுணுக்கமான விஷயங்கள் இருந்தது. கொஞ்சம் பணம் பார்த்ததும், இன்னும் இன்னும்ன்னு ஓடும் சில மக்களின் சமீபத்திய மனப்பான்மையை படம் பிடிச்சு காட்டி இருக்காங்கன்னு சொல்லலாம்.
கார், பங்களா எல்லாம் வாங்கியாச்சு, ஆனாலும் டிரெண்ட்ல இருக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சு கேனைத்தனமா ஒரு காரியம் பண்ண அவங்க தயாராகும் சமயத்துல முதலுக்கே மோசம். அதாங்க அவங்க சேனலை யூடியூப் ஊத்தி மூடிடுச்சு. காணாம போச்சு.
அதுல வர்ற காசை நம்பி வாங்குன கடன் கழுத்தை நெறிக்க, நிஜமாவே நெறிக்கும் பெசன்ட் ரவி கேரக்டர் நல்லா தான் இருந்தது.
பணத்துக்கு என்ன பண்றதுன்னு யோசிக்கும் போது ப்ரைவேட் நம்பர்ல இருந்து பிக்பாஸ் மாதிரி ஒரு புரோகிராம்ல கலந்துக்க ஜோடியா கூப்பிடுறாங்க. அவங்க சொல்ற பணம் அவங்களை தலை சுத்த வைக்குது.
ஆழம் தெரியாம உள்ள இறங்கிய ரெண்டு பேரும் என்னென்ன பாடுபடாங்கன்னு அக்குவேரா ஆணிவேரா சொல்லி இருக்காங்க.
பிரியாவோட அம்மா வரும்போதும் சரி, அவங்க நண்பன் பிரேம் உதவி கேட்டு வரும்போதும் அந்த கேமர் சொல்றத செய்ய அவங்க போற எல்லையெல்லாம் பணத்துக்காக மனுஷன் என்னவேணாலும் செய்வான்னு சொல்ற வார்த்தைகளுக்கு சான்று.
கதையா படம் சூப்பர். ஆனா படமா யோசிச்சா நிறைய இடங்கள் நம்மை கொட்டாவி விட வைக்குது.
காஸ்ட்(cast) கம்மி என்பது ஒருவகையில் ப்ளஸ்ன்னா இன்னொரு வகையில் மைனஸ். பார்த்த ரெண்டு முகங்களை மட்டுமெ நிறைய நேரம் பார்க்க வைக்கிறது சில நேரத்தில் சலிக்க வைக்குது.
அடுத்து இப்படி தான் நடக்கும்னு நிறைய இடங்களில் நம்மளால ஈசியா சொல்ல முடியுது. பெஸ்ட் கபில் அவார்ட் வாங்கின ஜோடி அவர்களுக்குள் ரகசியமே இல்லன்னு சொல்லும்போதே நெருடுது அப்பவே பின்னாடி வரப்போற திருப்பங்களை நம்மால யூகிக்க முடியுது.
அதை விட கடைசில அவன் ட்விஸ்ட்ன்னு காட்டியதை சில காட்சிகளை நம்மால முன்னாடியே யூகிக்க முடிஞ்சது படத்துக்கு பெரிய மைனஸ்.
அந்த டாஸ்க் நடத்தும் கேமரை கடைசி வரைக்கும் காட்டாதது எரிச்சலா இருக்கு. அவன் சொல்ற உலகம் நமக்கு பரிச்சயம் இல்லாதது. அதனால சட்டுன்னு ஒரு பார்வையாளரா நமக்கு அதுல ஒட்டுதல் வர மாட்டேங்குது. அது சமந்தமா வேற எந்த சீனும் கதையில் இல்லாதது, நம்மை அந்த பக்கம் யோசிக்க வாய்ப்பில்லாம பண்ணுது.
கலையரசன் நடிப்பு நல்லா இருக்கு. பிரியாலயா எங்கேயோ பார்த்த முகம்ன்னு யோசிச்சா நம்ம சந்தானம் படத்தில் ஹீரோயினா நடிச்சிருக்கு இந்த பொண்ணு.
பிரேம் நடிப்பு ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. 2000 ல. வந்த சீரியல், படங்கள் பார்த்த பலருக்கு பிரேம் ரொம்ப பிடிக்கும். நல்ல நடிகர். கலையுலகம் அவரை அதிகம் பயன்படுத்திக்கலையோன்னு தோணும்.
ஆக மொத்தம். படத்தை ஒரு தடவை பார்க்கலாம். சன் நெக்ஸ்ட் ஆப்ல படம் இருக்கு.
தளத்தில் எளிமையாக Google உதவியுடன் லாகின் செய்து கொள்ளலாம். லாகின் செய்து வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
❤️ என்றும் அன்புடன் ❤️
உங்கள்
ஜெயலட்சுமி கார்த்திக் ❤️
-------------------------------------------------------------------
Facebook public group
https://www.facebook.com/share/g/1EfotVeLPU/
Facebook private group
https://www.facebook.com/share/g/17BRubeTcu/
-------------------------------------------------------------------
Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaF4tFhHrDZft1t0Fl1y
Whatsapp Community Group
https://chat.whatsapp.com/DFzGk7B2foDLdXdYjyK1xa
-------------------------------------------------------------------
Youtube Channels
https://www.youtube.com/@JeyalakshmikarthikNovels
https://www.youtube.com/@jeyalakshmi_karthik
-------------------------------------------------------------------
Blog:
https://jeyalakshmikarthiknovels.blogspot.com/
-------------------------------------------------------------------
தமிழ் நாவல்கள் என்பவை வெறும் கதைப்புத்தகங்கள் அல்ல; அவை நம் சமூகத்தின், கலாச்சாரத்தின், மனித உணர்வுகளின் ஆழமான பிரதிபலிப்புகள். ஒரு நாவலைப் படிக்கும்போது, நாம் ஒரு புதிய உலகத்திற்குள் அடியெடுத்து வைக்கிறோம். அங்கு நாம் பல்வேறு கதாபாத்திரங்களைச் சந்திக்கிறோம், அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கிறோம், சமூகப் பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்கிறோம், வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்க்கிறோம்.
கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று நாவல்கள் நம்மை சோழர் காலத்திற்குக் கொண்டு செல்கின்றன என்றால், புதுமைப்பித்தனின் சிறுகதைகள் சமூக அவலங்களை சாடுகின்றன. ஜெயகாந்தனின் படைப்புகள் மனித மனதின் சிக்கலான அடுக்குகளை அவிழ்க்கின்றன. சுஜாதாவின் எழுத்துக்கள் அறிவியல் புனைகதைக்கும், சமூக யதார்த்தத்திற்கும் பாலமாக அமைகின்றன. சமீப காலங்களில், இளம் எழுத்தாளர்கள் புதிய களங்களிலும், நவீன கதை சொல்லும் உத்திகளிலும் ஈடுபட்டு, தமிழ் நாவல் உலகிற்குப் புத்துயிர் ஊட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு தமிழ் நாவலும் ஒரு தனித்துவமான பயணத்தை நமக்கு அளிக்கிறது. அது ஒரு காதல் கதையாக இருக்கலாம், ஒரு துப்பறியும் மர்மமாக இருக்கலாம், ஒரு சமூக சீர்திருத்தக் குரலாக இருக்கலாம், அல்லது வெறும் பொழுதுபோக்கிற்காக எழுதப்பட்ட ஒன்றாக இருக்கலாம். ஆனால் அனைத்திலும், எழுத்தாளனின் சிந்தனையும், மொழியின் அழகும், தமிழ் மண்ணின் வாசனையும் கலந்திருக்கும். தமிழ் நாவல் இலக்கியம் காலம்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையும் தனக்கே உரிய பாணியில், தனக்கே உரிய பார்வையில் கதைகளைச் சொல்கிறது. வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கு, தமிழ் நாவல்கள் ஒரு பொக்கிஷம். அவை நம் சிந்தனையைத் தூண்டுகின்றன, கற்பனைத் திறனை வளர்க்கின்றன, மேலும் நம் வாழ்வை செழுமைப்படுத்துகின்றன.
