திருப்புகழ் – வரிக் கலையின்

thirupugal

இன்று திருத்தணி முருகன் தேரோட்டம்

தனத்ததன தனதான தனத்ததன தனதான
     தனத்ததன தனதான …… தனதான

வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை
     மயக்கியிடு மடவார்கள் …… மயலாலே

மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி
     வயிற்றிலெரி மிகமூள …… அதனாலே

ஒருத்தருட னுறவாகி ஒருத்தரொடு பகையாகி
     ஒருத்தர்தமை மிகநாடி …… யவரோடே

உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட
     உயர்ச்சிபெறு குணசீல …… மருள்வாயே

விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை
     மிகுத்தபல முடனோத …… மகிழ்வோனே

வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள
     விளைத்ததொரு தமிழ்பாடு …… புலவோனே

செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது
     திருக்கையினில் வடிவேலை …… யுடையோனே

திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான
     திருத்தணிகை மலைமேவு …… பெருமாளே.


இந்த பாடலை திரு. சிதம்பரநாதன் அவர்களின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!