
அமுதம் 31
இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஆதி ஒரு மீட்டிங்கிற்காக கோவை போக வேண்டியவன், கோதை சொன்ன பாதுகாப்பு நடவடிக்கைகளால் அதை தள்ளி வைத்திருந்தான். மீண்டும் அவளைத் தனியாக விட்டுச் செல்ல முடியாத சூழ்நிலையில் அதை நாளைக்கு ஒத்திவைத்திருந்தான்.
கண்டிப்பாக நாளை போயே ஆகி வேண்டும். அவளின் தனிமை கருதி அந்த ஆர்டர் வேண்டாம் என்று நினைத்தவன் நாளை அவளின் முழு பட்டாளமே வருவதால், கோவை பயணத்தை முடிவு செய்துவிட்டான்.
காலையில் கோதை சோம்பலாய் எழ, ஃபுல் சூட்டில் இருந்தவனைக் கண்டு “அத்தான்” என்று பின்னால் இருந்து அணைத்தாள்.
“முன்னால வா செல்லம்மா.”
“வேண்டாம் சூட் கசங்கிடும் அத்தான். ஐ லவ் யூ…”
“ஏய்… நீ அவ்ளோ ஈசியா சொல்லாமாட்டியே! என்னடா?”
“நீங்க கிளம்புறிங்க அதான்.” என்றாள் உதட்டைப் பிதுக்கியபடி.
“கேன்சல் பண்ணிட்டு உன்னோடவே இருக்கட்டா?”
“அச்சோ! அது பெரிய ஆர்டர்ன்னு நவி அண்ணா சொன்னாங்க…”
“உன்னைவிட எதுவும் பெருசில்ல பூமா.”
அவன் பதிலில் உருகிப்போனவள், அவன் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு குளியலறைக்குள் சென்றாள். அவள் தயாராகி கீழே வருவதற்குள், கமலாம்மா எல்லா வேலைகளையும் முடித்திருந்தார்.
அவரை கோதை முறைத்துப் பார்க்க, “இங்க பாரு கோதயம்மா… நீங்க சொன்னதுனால தான் ஒரு வாரமா ஒன்னும் பெருசா வேலை செய்யாம மேம்போக்க பார்த்தேன். அய்யே… வேலை செய்யாம எப்படி சம்பளம் வாங்கறது? அதான் ஐயா ஏதோ பெரிய ஓட்டல் அரம்பிக்கப்போறாராம்ல அதுல சமைச்சிக்கோ மா நீ! “
அவர் சொன்ன விதம் சிரிப்பு மூட்டிட சிரித்தவள், “சரி கமலாம்மா..”, என்று அன்றைய வேலையை பட்டியலிட்டாள்.
அவள் முடிக்கும் போது சாப்பிட அமர்ந்த ஆதியை, அவளே கவனித்து பரிமாற, சில உணவுகளை ஆதி ஒதுக்கி வைத்தான். அதை மனதில் குறித்துக் கொண்டவள், சாப்பிட்டும் அவன் கிளம்பாமல் இருப்பதை பார்த்து என்னவென்று வினவ,
“அகி அண்ணா, ஷியாம் எல்லாரும் வராங்க டா.”
கோதை ஆவலாய் அருணாவிற்காகக் காத்திருந்தாள்.
அவர்கள் பொருட்களோடு கூடிய லாரி வர பின்னால் காரில் அகி, அருணா, ஷியாம், மதி, சுஜி ஐவரும் இறங்கி வந்தனர்.
கோதை அருணாவை அணைத்து கொண்டு வீட்டிற்குள் சென்றவள், அவள் பயணக்களைப்பு தீர ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு கமலாம்மாவை பார்த்துக்கொள்ளும்படி பணித்தாள்.
அவர்களுடன் அவர்களுக்கு பார்த்த வீட்டிற்கு செல்ல, அதுவும் 3 மாடி கட்டிடமாகவே இருந்தது. அவள் கேள்வியாய் ஆதியை நோக்க அவனோ, இதுவும் நம்ம வீடு தான். அதான் கிரவுண்ட் ஃபிலோர் அண்ட் பிரஸ்ட் ஃபிலோர் அகி அண்ணா, ஷியாம், சுஜி, மதி எல்லாருக்கும். இரண்டாவது ஃபிலோர் சுபா, கிருத்திக்கு மூன்றாவது ஃபிலோர் பிரவீன், இன்பா, ராகுலுக்கு என்று சொல்ல மதி வாடிப்போனாள். அவள் எப்படியும் அருணாவுடன் தரை தளத்தில் தான் இருக்க வேண்டும். ராகுலோ மூன்றாம் தளம்.. மனதிற்குள் ‘விளங்கிடும்’ என்றே மானசீகமாக தலையில் அடித்தவள், பொருட்களை இறங்கியதும் அடுக்கலானாள்.
வது போனில் பேசியபோது புலம்பித் தீர்த்தாள், “நீங்க எல்லாரும் அங்க இருக்கீங்க, அதுவும் ஜாலியா இருக்கீங்க. நான் மட்டும் பாவம் இல்லையா? நாளைக்கே சுபா அக்கா, கிருத்தி அக்கா எல்லாம் வந்துடுவாங்க. இன்னும் ஜாலியா இருப்பீங்க.. மீ பாவம்…”, என்று ராகமிட,
பின்னாலிருந்து அவளை தோளில் தட்டினாள் நர்மதா. வது திரும்பியதும் கைகளைக் கட்டிக்கொண்டு “என்னை பார்த்தால் உனக்கு எப்படி மா தெரியுது? ஊட்டில டான்ஸ் ஆடறது போல இருக்கா? நானும் உன்னோட தான இங்க இருக்கேன்? நீ மட்டும் பீல் பண்றதுபோல பேசுற? எனக்கும் சேர்த்து பேசு.”, என்றாள்.
அவள் இதுபோல உரிமையாக பேசி பார்த்திராத வது கண்களில் நீர் துளிர்க்க “அண்ணி நாங்க பாவம் இல்லையா?”, என்றாள்.
“உங்க அண்ணன் இன்னிக்கு கோவை தான் வந்திருக்கார், சாமர்த்தியம் இருந்தால் அவரோட வீடு வந்து சேரு நாத்தனாரே!”
“அப்படியா அப்ப நீ கட் பண்ணு. அண்ணனுக்கு போனப்போடு.” என்று கத்திகொண்டே அணைத்தாள்.
ஒரே கலாட்டாவாக அன்றைய பொழுது கழிந்தது. இரவுக்குள் ஆதியால் ஊட்டி திரும்ப முடியாமல் போக, அருணாவையும் அழைத்து வந்து அகி வீட்டிலேயே அவளும் தங்கி கொண்டாள்.
இரவில் தினமும் ஆதியுடன் தூங்கிப் பழகிய கோதைக்கு இன்று தனியாக தூக்கம் வருவேனா என்றது. பால்கனியில் நின்று அந்த புதிய இடத்தை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த கோதைக்கு தெருவின் கடைசியில் நின்ற இருசக்கர வாகனமும், அதில் இந்த வீட்டையே வெறித்தபடி இருந்த ஹெல்மெட் அணிந்தவனும் கண்ணில் பட, பாதுகாப்பு நிறுவன மேலாளரை தொடர்பு கொண்டு, அது யார் என்று அவனுக்கே தெரியாமல் பார்க்கச் சொன்னாள், அடுத்த அரை மணி நேரத்தில் கிடைத்த தகவலில் கோதை கோவத்தின் உச்சியில் இருந்தாள். அந்த பாதுகாப்பு நிறுவனத்துடன் கூடிய துப்பறியும் பிரிவில் சில தகவல்கள் தேவை என்று கேட்க அதுவும் நள்ளிரவிற்குள் அவள் கைகளில் கிடைத்தது.
விடியும் வரை காத்திருந்த கோதை பாதுகாப்பு ஆட்களை வெளிப்படையாக தன்னை சுற்றி வரும்படி கட்டளையிட்டவள் நேராக அந்த ஹோட்டல் அறை வாசலில் தான் நின்றாள்.
ஒரு பாதுகாவலரை கதவை தட்ட பணித்தவள், இறுகிய முகத்தோடு நின்றாள். அரைத்ததூக்கத்தில் கதவைக் திறந்த முகிலன் ஸ்தம்பித்தான்.
அவன், கோதை அவன் இருக்கும் இடம் தேடி அதிரடியாய் வருவாள் என்று எண்ணவில்லை.
அலட்சியத்தை முகத்தில் பூசியவன், “என்ன வேணும்?”, என்றான்.
அவனை தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்த அவள் அறையை ஒரு முறை பார்வையிட்டாள். பின் ஒரு நாற்காலியை நடுவில் போட்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.
“என்ன? நீ பெரிய வில்லனா? ஒரு தரம் உன்னை அடிச்சதுக்காக என் அம்மா அப்பாவையே எனக்கு எதிரா திருப்பிட்ட! போகட்டும்ன்னு இன்னிக்கு வரைக்கும் உன்னை பத்தி யோசிக்காம இருந்தா.. உனக்கெல்லாம் எவ்வளவு ஏத்தம்? என்னை ஃபாலோவ் பண்றியா நீ? பண்ணி என்ன பண்ண முடியும் உன்னால?”
“என்ன சுத்தி ஆள் துணைக்கு இருக்குன்னு வாய் நீழுது! தைரியம் இருந்தா தனியா வந்திருக்கணும் டி நீ…”
“ஓ ஓ…. நீ அப்படி வர்ற… ஏன் டா என்னை பார்த்தா லூசு மாதிரி இருக்கா? உன்னை பார்க்க தனியா வந்தா… நீ என்னை வேசின்னு முத்திரை குத்திட மாட்ட? டேய்! உன்னை என் மாமா பையனா பார்த்து தொலைச்சதால தான் நீ எனக்கெதிரா செஞ்சது என் கண்ணுல படாம போச்சு. நான் என் குடும்பத்தை என்னைக்கும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க மாட்டேன். அதுல தான் டா நாயே நீ மிஸ் ஆகிட்ட. இல்ல அன்னைக்கே உன்னை சட்னி ஆக்கிருப்பேன். இங்க பாரு இப்பையும் சொல்றேன். உன் வேலையப் பார்த்துட்டு உன் வழில போய்ட்டா எல்லாருக்கும் நல்லது. இல்லனா நீ அனுபவிப்ப!”, எச்சரித்துவிட்டு வந்த வேலை முடிந்தது போல் கிளம்பிச் சென்று விட்டாள்.
அவள் சென்ற பாதையையே பார்த்திருந்த முகிலனின் உதடுகள் ஏளனமாக வளைந்தது. “தனியா உன்னை அழிக்கனும்ன்னு நெனச்சப்பயே நான் கெட்டி டி. இன்னிக்கு துணைக்கு ஆளும் இருக்கும் போது உன்னோட இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயந்திருவேனா? போடி போ…”
அவளைக் கசக்கி எறிய காத்திருக்கும் வேட்டை புலி போல அவன் கண்கள் வெறியில் பளபளத்தது..
வெளியில் இருந்து உள்ளே நுழைந்த கோதையை வீட்டில் உள்ளவர்கள் கேள்வியாகப் பார்க்க அவளோ, “சும்மா வாகிங் போனேன் பா”, என்று சமாளித்தாள்.
அவளுக்கு தெரியும் முகிலன் வந்தது அகிலனுக்கு தெரிந்தால் கண்டிப்பாக அவனை அடுத்து சிறையில் தான் பார்க்க முடியும். அவன் மேல் அவ்வளவு கோவத்தின் இருக்கிறான் அகிலன். அன்று கதிரும் சுந்தரும் அவனை அடித்ததால் தான் அவனை இவன் நெருங்காமல் வந்துவிட்டான். இன்று விஷயம் தெரிந்தால் தொலைத்துக் கட்டி விடுவான்.
ஆதியின் வரவுக்காக கோதை காத்திருந்தாள். அவள் மனம் முகிலன் அவளுடைய எச்சரிகைக்கெல்லாம் திரும்பிச் சென்றுவிடுவான் என்று நம்பவில்லை. நம்ப அவளும் முட்டாள் இல்லை. இவனை இவ்வளவு நாள் நினைக்காமல் போனது தவறோ என்று தோன்றியது.
அவன் வேறு திட்டங்கள் வைத்திருந்தால் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த அவளை அகிலனின் ” கோதைக்குட்டி” என்னும் அழைப்பு சிந்தனை வலைகளை அறுத்து நினைவுக்கு வர வைத்தது.
“சொல்லு அகி செல்லம்…”
“காலைல எங்க போன?”
“அதான் சொன்னேனே… “
“ஏன் இப்படி இருக்க? எதுவா இருந்தாலும் எல்லார்கிட்டையும் சொல்லு மா.”
“ஆதி அத்தான் வரட்டும்…” ஆழ்ந்த குரலில் அவள் சொல்ல,
“சரி ” என்று நகர்ந்தவன், ‘பிரச்சனை பெரிது’ என்று மட்டும் முடிவு எடுத்துக்கொண்டான்.
அன்றே சில விவசாய ஆட்களை வரவழைத்து காரட், முள்ளங்கி, டர்னிப் போன்ற பயிர்களை இட அடுக்கு விவசாய முறையில் அந்த மலையிடத்தை அடுக்கடுக்காய் சமன் செய்ய தக்க நடவடிக்கைகளை எடுத்தவன், ஆதிக்கு போன் செய்து எப்போது வருவான் என்று கேட்டான்.
“அகி அண்ணா. நேத்து லேட் ஆயிடுச்சு இன்னிக்கு சீக்கிரம் கிளம்பலாம்ன்ருந்தேன். வது, நர்மதா, புவி மூன்று பேரும் இதோ வர்றோம்ன்னாங்க. இன்னும் காணோம். கடுப்பாகுது. ஆமா நீங்க ஏன் போன் பண்ணி கேக்கறீங்க? ஏதும் பிரச்சனையா?” கேட்கும்போதே அவன் பதட்டமாக, “பூமா பூமா எங்க அண்ணா?”, என்றான்.
“டேய் டேய்! ஒன்னும் இல்ல டா சாதரணமாதான் டா கேட்டேன். ஐயோயோ… இவனோட தொல்லை தாங்க முடியலையே!”
“பூமாக்கு ஒன்னும் இல்ல தானே! இந்த வானரங்கள் வந்தா வரட்டும் இல்லாட்டி போகட்டும். நான் இதோ கிளம்பிட்டேன் அண்ணா. வந்துடுவேன்.”
“டேய் அவங்களையும் கூட்டியே வா. அவசரமில்ல. “
“சரி”, என்று வைத்தாலும் ஆதியின் மனதில் உடனே ஊட்டிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.
புவிக்கு அழைப்பு விடுத்தவன், “இன்னும் அஞ்சு நிமிஷம் தான் வெய்ட் பண்ணுவேன். வரலன்னா போய்ட்டே இருப்பேன்”, என்றான் கறார் குரலில்.
பக்கத்தில் இருந்த ஜூஸ் கடையில் ஜூஸும் பிரெட் ஆம்லெட்டும் சாப்பிட்டு கொண்டிருந்த வதுவையும் நர்மதாவையும் இழுத்துக்கொண்டு ஆதியிடம் வருவதற்குள் புவி நொந்து போனான்.
“பாவி பயலே! பாதி ஜூஸ் அப்படியே வச்சிட்டு வந்துட்டேன் டா. அப்படி என்ன தல போற காரியம்ன்னு என்னை திங்க கூட விடாம இழுத்துட்டு வந்த… பிசாசே…”, நல்ல வசைமாரி பொழிந்தாள் வது.
“கொஞ்சமாவது மாமா பையன்னு மரியாதை இருக்கா பாரு?”
“அதுக்கெல்லாம் ஒரு முகலட்சணம் வேணும் டா”, என்ற நர்மதா வதுவுக்கு ஹைஃபை கொடுக்க,
“நீங்க எப்போ டி பார்ட்னர்ஷிப் போட்டிங்க? இதெல்லாம் சொல்றதில்லையா?” என்று புலம்பியபடி புவி வர, இந்த கலட்டாகள் எதுவும் காதில் கூட விழாத தினுசில் ஆதி வேகமாக மலை பாதியில் காரோட்டிக்கொண்டு இருந்தான்.
அவன் மனம் ஒருநிலை இல்லாமல் தவித்தது. ‘உடனே பூமாவை பார். அவளுக்கு ஏதோ சரி இல்லை’ என்ற மனதை, சமாதானம் செய்த படி கொண்டைஊசி வளைவுகளில் லாவகமாகக் காரைச் செலுத்திக்கொண்டிருந்தான் ஆதி.
அங்கே…” வேண்டாம் டா.. போய்டு.. உனக்கு நல்லதில்லை… சொல்லிட்டேன்.. போ..” என்று கத்தி அவர்கள் வீட்டின் மூலை முடுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருந்தாள் கோதை.

Entha mugilan ku seekkiram paayaasam pottu thallunga ma… irritate pannraan…kothai ponnu sikkalla maattaama erukkanum 🤔🤔🤔
தள்ளிடலாம் அக்கா.
இவன் எப்படி இங்க வந்தான், சீக்கிரம் அவன மாமியார் வீட்டுக்கு அனுப்புங்க
அனுப்பி விட்டுடலாம் மா.
Interesting waiting for nxt epi
thank you