
அமுதம் 26
ராஜேஸ்வரனின் யோசனை நன்றாகத்தான் இருந்தது. அகிலனும் யோசிக்க ஆரம்பித்தான். அங்கே அகிலன் தாத்தாவின் தோட்டங்களில் மட்டுமே விவசாயம் பார்க்க வேண்டும். ஷ்யாமின் படிப்பிற்கே இன்னும் 2 ஆண்டுகள் அவன் செலவு செய்ய வேண்டும். அவனுக்கு அதை பற்றிய கவலை இல்லை. ஆனால் பொறுப்பு இருக்கிறது. அதனால் அவன் தீர யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.
கோதை, சுஜி, ஷ்யாம், வெண்மதியையும், அழைத்து தன் முடிவைச் சொன்னான். அவர்களுக்கும் அதுவே சரி என்று தோன்றியது. ஆனால் ஷ்யாம் எளிதில் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றான். அதெப்படி அவ்வளவு எளிதாக ஒத்துக்கொள்வான். அவனை மட்டும் தாத்தா பாட்டிக்கு துணையாக இருக்கச் சொல்லிவிட்டு, அகிலன் அருணா, வெண்மதி ,சுஜி நால்வரும் ஊட்டிக்கே வந்துவிடுவதாகச் சொன்னால் அவன் தான் அவ்வளவு எளிதில் சரி என்பானா என்ன?
ராஜேஸ்வரனிடம் சென்ற அகிலன் தனக்கு இங்கே சொந்தமாக தோட்டம், காடுகள் வாங்க முடியுமா என்று கேட்க, மகேஸ்வரன் தன்னுடையதே பல நிலங்கள் இங்கு விவசாயம் செய்யாமல் இருப்பதாகவும், சரிவுகளை சமன் செய்து விவசாயம் செய்ய ஆள் இல்லை என்று கூற, அதனைக் குத்தகைக்குத் தரச் சொல்லி அகிலன் கேட்டான்.
“ஏன் பா? நீ எனக்கு மாப்பிள்ளை முறை உனக்கு போய் குத்தகைக்கு கேக்குறியே? நீயே வச்சுக்கோ அகிலா…”
“அது சரிப்படாது மாமா. ‘தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேற’ன்னு ஏற்கனவே என் குடும்பத்துக்கிட்ட பாடம் கத்துகிட்டோம். நீங்க குத்தகைக்கு தந்தா தாங்க, இல்லன்னா நான் ராஜேஷ் அப்பா கிட்ட கேட்டு விலைக்கோ குத்தகைக்கோ வேற இடம் பாத்துக்கறேன்.”
“சரி பா. நான் உனக்கு குத்தகைக்கே எழுதித்தர்றேன். “
ஆக அகிலன் இறுதி முடிவுக்கு வந்துவிட்டான். அகிலன் விவசாயம் பார்ப்பது, அருணா பிரசவம் வரை வீட்டில் இருப்பது, மதி கரஸ்பாண்டன்சில் MBA செய்துகொண்டே ராஜேஸ்வரன் ரிசார்ட்டில் வேலை செய்வது, சுஜி தன் பி.காம் படிப்பை ஊட்டியில் உள்ள கல்லூரியில் தொடர்வது, ஷியாம் தாத்தா பாட்டியைப் பார்த்துக்கொண்டு மருத்துவப்படிப்பை அங்கிருந்தே தொடர்வது என்று.
அனைவரும் சமாதானம் ஆனாலும் ஷியாம் மட்டும் முரண்டிக் கொண்டே இருந்தான். போனில் பேசிய ஜோதிலிங்கம் கண்டிப்பாக படிப்பு முடிந்ததும் அகிலனிடம் சென்று விடலாம் என்று உறுதியளித்த பின்பு தான் அவன் அனத்தலை நிறுத்தினான்.
அவர்கள் தங்க ஒரு வீட்டையும் ராஜேஸ்வரன் ஏற்பாடு செய்ய அனைவருக்கும் பரம திருப்தி. நண்பர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று கலந்து பேசிவிட்டு சொல்வதாகக் கூற… அதன்படி அன்றே அனைவரும் கிளம்பினர். அகிலனுக்கு அங்கே சென்று அனைத்தையும் மாற்றும் பொருட்டு அனைவரையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான். ராஜேஸ்வரனும் ரிசார்ட் விஷயமாக கோவை செல்ல வேண்டும் என்று சொல்ல அவரை கொஞ்சம் காத்திருக்கும் படி கூறிய ஆதி அனைவரையும் ஹாலுக்கு அழைத்தான்.
“அப்பா! இதுவரைக்கும் நீங்களும் அம்மாவும் சொன்ன பேச்சை நான் தட்டினதே இல்ல. பூமாவை பிடிக்கும் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் என்று கூட உங்க கிட்ட சொல்லி உங்க சம்மதம் வாங்கி இருந்தேன். அதனால தான் அன்னைக்கு தைரியமா அவளுக்குத் தாலி கட்டி கூட்டிட்டு வந்தேன்.
இப்போ நான் சொல்ல போற விஷயத்துல நான் சொல்றது தான் முடிவு. அதுக்கு மேல பேச மாட்டீங்க அப்பிடின்னு நான் நம்புறேன். அப்பா ரிசார்ட் வாங்கி மெய்ண்டைன் பண்றது சுலபம் இல்ல. எக்ஸ்பிரியன்ஸ் ஆன ஆள் வேணும். அதனால கண்டிப்பா நீங்க ஊட்டில மட்டும் தான் இருக்கணும். ரிசார்டை பார்த்துக்கணும். அப்பறம் பூமா உங்களோட இருப்பா. எனக்கு தெரிஞ்சு பசங்க மூணு பேருமே வந்துடுவாங்க. பொண்ணுங்க அவங்க முடிவு இப்போ தெரியாது.
சோ பிளான் நீங்க, பூமா, பசங்க அவ்ளோ தான் இப்போதைக்குன்னு வச்சுக்கோங்க. மேனேஜ்மென்ட்க்கு மதி இருப்பா. ஆனா வீட்டை மேனேஜ் பண்ண கண்டிப்பா அம்மா இங்க தான் இருக்கணும். இனிமே நான் அம்மாவை கோயம்புத்தூர்ல இருக்க விட மாட்டேன். பாப்பாவை இங்க இருக்கற காலேஜ்ல சுஜி கூடவே சேத்துக்கலாம். புவியையும் இங்க இருக்கற காலேஜ்க்கு ட்ரான்ஸ்பர் பண்ணிடலாம். அதே போல நர்மதா பத்தாவது முடிச்சிடா அவளும் இங்கேயே ஸ்கூல்ல படிகட்டும்.”
“கண்ணப்பா தாத்தாவுக்காக…”
ராஜேஸ்வரனும் ஆதியும் அன்னத்தின் இந்த இழுவையில் டென்ஷன் ஆனார்கள்.
நிலைமை சமன் செய்ய கோதை,
“இல்ல அத்தம்மா… அவர் நிறைய வருஷம் உங்கள பிரிஞ்சு இருந்துட்டாரு. இன்னிக்கும் நீங்க உங்க அப்பா, உங்க தம்பி இவங்கள பாக்கறீங்களே ஒழிய என் கணவர், அதான் உங்க மகன்… அவரை பத்தி நீங்க நினைக்கவே இல்லயே அத்தம்மா!”
“என்னை விட்டுடியே மருமகளே…”, ராஜேஸ்வரன்.
“ஆமா, மாமாவுக்கும் உங்களோட சேர்ந்து இருக்கற ஆசை இருக்காதா?”
“அப்போ இவங்க அப்பாவை யார் பாத்துக்கறது?”,நீலா.
“ஏன் நீங்க இல்லையா? பாத்துக்கோங்க. என் சித்தப்பா தான் வேணும்ண்ணு சண்டை போட்டு கல்யாணம் பண்ணினிங்களாம். அப்போ அவரோட அப்பாவை நீங்க தானே பாத்துக்கணும்?”
“அதுசரி என் பொண்ணை நான் ஏன் இங்க விடணும்?”
ஆதி வாயில் வார்த்தைகள் தாறுமாறாக வந்தது. கோதையால் கூட அவனை அடக்க முடியவில்லை.
“சீ வாய மூடுங்க. அன்னைக்கு ஃபங்சன்ல அவ தன்னோட மாதாந்திர பிரச்சனையைக் கூட உங்க கிட்ட சொல்ல முடியாம தவிச்சாளே. நீங்க அவ அம்மாவா? பேசுனிங்கன்னா மரியாதை கெட்டுப் போகும். உங்களால தான் அந்த குழந்தையை நான் மனம் புண்படற படி பேசிட்டேன். போதும். நீங்க மாமாவையும் தாத்தாவையும் பாத்துக்கோங்க. நாங்க புவியையும், நர்மதாவையும் பாத்துக்கறோம்.”
அவன் கோபத்தைத் திசை திருப்ப எண்ணிய கோதை “அத்தான் கேக்கணும்ன்னு நினைச்சேன். புவி ஏன் நேத்து வரல?”
“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டே பொண்ணே!”, என்று கிண்டலடித்தார் மகேஸ்வரன்.
“அப்பபபா.. ” பல்லைக் கடித்தவள்
“காரணம் சொல்லாம என்னை ஓட்ட கூடாது.”
“அவன் பிரெண்டுக்கு அக்சிட்டென்ட். அதான் நேத்து காலை போனான். இன்னும் வரல.”
தன்னிடம் ஒன்றும் கேட்காமல் முடிவுகளை ஆதி எடுத்துக்கொண்டிருக்க, நீலா பழைய படி தன் கட்டுக்கு கீழ் குடும்பம் வர வேண்டும் என்று நினைத்தவள்,
“இங்க நான் சொல்றது தான் எல்லாம். யாரும் எங்கேயும் மாறல. எல்லாரும் கோயம்புத்தூர் வந்து சேருங்க. ஆதி நீயும் உன் பொண்டாட்டி யோட வந்து சேரு. தேவையில்லாம யாரும் பேச வேண்டாம்.” எப்போதும் பேசும் அதிகார தோரணையில் நீலா பேச அனைவரும் அமைதியாக இருக்க, கோதை கை தட்டிக்கொண்டே,
“அட அடா அடா… ‘கீழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டல.’ அப்படித்தானே சின்னம்மா? சர்தான்… எப்படி எப்படி? எல்லாரும் கோயம்புத்தூர் வந்து… என்ன கும்மி அடிக்கறதா…” அதுவரை பொறுமையாய் பேசிய கோதை இப்போது கத்தாமல் ஆழ்ந்த குரலில்,
“என் புருஷன் சொன்னது தான் கடைசி. தாத்தாவை இனிமே நீங்க தான் பார்த்துக்கணும். அவ்ளோ தான். இதுக்கு மேல பேச எதுவும் இல்லை. நீங்க பேசினாலும் கேக்க இந்த இடத்துல யாரும் இருக்கவும் மாட்டாங்க.” என்று அவள் உள்ளே செல்ல அனைவரும் அவர் அவர் அறைக்குச் செல்ல, நீலா தனித்து நின்றாள்.
அவள் குரலுக்கு மேல் அந்த குடும்பத்தில் ஒருவர் கூட பேசியது இல்லை. ஆனால் இன்று… ‘இவள் எனக்கு கட்டளை போடறாளா? இரு டி… நான் செஞ்சு வச்சிருக்கற வேலைக்கு வெடிகுண்டு இன்னும் கொஞ்ச நேரத்துல வெடிக்க தான போகுது. அப்போ மொத்த குடும்பமும் என் காலடிக்கு வந்து தானே ஆகணும்…’ ஆணவமாக நினைத்தவள் அங்கிருந்து அகன்றாள்.
ராஜேஸ்வரன் ஆதி சொன்ன விஷயங்களை அசை போட்ட படி இருந்தார். அன்னம் களை இழந்த முகத்துடன் அவர் அருகில் அமர்ந்தார்.
“என்ன அன்னம் உன் முகமே சரி இல்லை…”
“என்ன பண்ண சொல்றிங்க? வந்த பொண்ணு குடும்பத்தை சேர்த்து வைப்பான்னு பார்த்தா பிரிச்சிவிடறாளே…”
“ஓஹ்.. இப்போ அவ உன் மருமக இல்ல, வந்த பொண்ணு… சரி தான்… நீயும் சராசரி மாமியார் தான… நான் தான் மறந்துட்டேன்.”
“என்ன பேசறீங்க நீங்க?”
“பின்ன என்ன அன்னம்? இப்போ உனக்கென்ன உங்கப்பாவை பார்த்துக்கணும். நாங்க எக்கேடு கெட்டு போன உனக்கென்ன? பதினைந்து வருஷமா நான் ஏன் ரோடு காண்ட்ராக்ட் எடுத்து ஊரு ஊரா சுத்துறேன் தெரியுமா உனக்கு? காலேஜ், வேலை எல்லாத்தையும் என் பையன் வெளிநாட்டுலயே பண்ணினானே ஏன்னு தெரியுமா உனக்கு? நீ உன் பொண்ணை மட்டும் பாதுகாப்பா பக்கத்துல வச்சிகிட்டியே! எங்க ரெண்டு பேர பத்தி நினைச்சு பார்த்தியா… சொல்லு.. .நான் ஒன்னும் யாரோ இல்லயே! உன் அத்தை பையன் தானே… என் மாமாவை பார்த்துக்கணும் அப்பிடின்னு கேட்டதும் சரின்னு சொன்னேன். அதுக்கு பதினஞ்சு வருஷமாவா எங்களை விட்டுட்டு போய் பார்த்துக்குவ?
இங்க இருந்தா ‘அம்மா இல்லிங்களா ஐயா’ன்னு கேள்வி அங்க வந்தா அந்த சனியன் என்னை பார்த்து ‘ஓசி சோறு திங்க வந்தியா?’ன்னு கேட்டுச்சு. எங்கேயும் இருக்க முடியாம நான் ஊரு ஊரா போனேன். என் பிள்ளை அம்மா பக்கத்துல இருந்தா அந்த ராட்சசி பேசி பேசி கொல்றான்னு நாட்டை விட்டே போனான். “
“ஐயோ எனக்கிதெல்லாம் தெரியாதுங்க.”
“உனக்கு ஒன்னுமே தெரியாது அன்னம். நாங்க யாரும் இதை உன்கிட்ட சொல்லல. ஏன்? கோதை கிட்ட கூடத்தான் நாங்க சொல்லல. ஆனா அவ புரிஞ்சுகிட்டா. உன் அனுபவம் அந்த பொண்ணோட வயசு. ஆனா அவளுக்கு புரிஞ்சதுல கால்வாசி கூட உனக்கு புரியல. ஆமா நான் தெரியாமத்தான் கேக்குறேன் நீலாவை என்ன உன் தம்பி விரும்பி கல்யாணம் பண்ணிடு வந்தானா?
அவ ஏதோ சதி பண்ணி அந்த பொண்ணு காமாட்சியை ஏமாத்தி நம்ப வச்சி அவளை வச்சே இவன் கைல தாலி வாங்கிட்டு வந்தவ. கொஞ்ச நஞ்சமா படுத்தினா? நீயாவது உன் அப்பாவை கூட்டிட்டு தனியா வந்திருக்கலாம். அந்த வீடு, அதான் அவரோட சுவாசம் அது இதுன்னு… சும்மா இல்ல அன்னம், பதினஞ்சு வருஷம். இப்போவாவது சேர்த்து இருக்க மருமக யோசிச்சு செஞ்சா.
உனக்கு அவ ‘வந்த பொண்ணா’? நல்லா இல்லை அன்னம். அவ்ளோ தான் நான் சொல்லுவேன்.”, கர்ஜனையாய் சொல்லிவிட்டு பிள்ளைகளின் கல்லூரி அட்மிஷன் விஷயமாக வெளியேறினார்.
அன்னம் இடிந்து போனார். அவர் தன் கணவன் மனதில் இவ்வளவு இருக்கும் என்று எண்ணவில்லை.
‘தான் ஒன்று நினைக்க, அது ஒன்று நடக்கிறதே, ராகுலயும் மதியையும் சேர்த்து வைக்க நினைத்து தன் குடும்பம் பிரிகிறதே!’ என்ற ஆதங்கத்தில் அவர் பேசிவிட, கணவரின் பதில் தாக்குதல் அவர் அவரை கண்ட காலம் தொட்டு கண்டிராதது. மனம் நொந்தபடி அறைக்குச் சென்று விட்டார்.
மாலையில் அனைவரும் வீடு திரும்பி இருக்க, கோதை ஆதியின் பக்கத்தில் அமர்ந்து ரிச்சர்ட்டில் யாருக்கு என்ன வேலை என்று வகுத்துக்கொண்டிருந்தாள்.
உள்ளே வந்த புவனேஸ்வரன் அமைதியாய் ஒரு சோபாவில் அமர்ந்திட,
கோதை “டேய் பொடிப்பையா.. ஏன் டா சொல்லாம கொள்ளாம ஊருக்கு போன? நான் வெளில போகும்போது உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் டா.”
அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. ஆதி அவனிடம் தங்கள் பிளானை சொல்ல, அவனோ
“நான் இங்கே வரல. அங்க அம்மாவோடவே இருந்துக்கறேன்.” புவியின் இந்த பதிலைக் கேட்டு குடும்பமே ஆடிப்போனது.

Joint family ya maintain pannrathu romba kashtam pa…puvi payyan Yenna pudhusaa kelappuraan….
Ama akka. Ellam neela velai.
இந்த நீலா அப்படி என்னத்தை பண்ணி வைச்சிருக்கான்னு தெரியலையே…
ஆதியோட ப்ளானுக்கு ஆப்போசிட்டா…?
😀😀😀
CRVS (or) CRVS 2797
👌👌👌👌