People often only see one side to someone’s personality, but there are levels.

அமுதம் 22
அறையை விட்டு வெளியில் வந்த கோதை கண்களில் புவனேஸ்வரனுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்த அவர் பட, அவள் ஞாபக அடுக்குகளில் அவரின் முகத்தைத் தேடியபோது, கொஞ்சம் இளமையாக புன்னகை தவழும் முகம் மங்கலாக நினைவுக்கு வந்தது.
அவள் அவரை தூரத்தில் இருந்தே உற்று நோக்கினாள். அவளால் அந்த மனிதரை தவறாகவோ ஒருவர் வாழ்வில் விளையாடுபவர் போலவோ ஒரு பெண்ணை கை விடுபவர் போலவோ கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. அவ்வளவு அன்பு சொல்லும் முகம். அமைதியாக புவனேஸ்வரன் பக்கத்தில் சென்றவள் “டேய் பொடிப்பயலே யாரு டா இது? எனக்கு சொல்லவே இல்லை.”
“இன்னும் உன் புருஷன் கூடவே சுத்து நெட்டைக்கொக்கு. எல்லாரையும் தெரிஞ்சிரும். ஆளை பாரு. வந்ததுல இருந்து உன்னை தான் கேட்டுட்டு இருக்காரு. நீ ஆடி அசஞ்சு இப்போ தான் வந்துட்டு, உனக்கு இண்ட்ரோ குடுக்கலன்னு என்னையே சொல்றியா?”
“உன்னை சொல்லாம வேற யாரை சொல்றதுடா பொடிடப்பா. நான் என் புருஷன் பின்னாடி தான சுத்தினேன். வேற யாரோடவும் சுத்தலையே! போடா போடா டண்டணக்கா டான். “
“ஐயோ உங்க சண்டையை கொஞ்சம் நிறுத்துங்களேன்… மாமா இது பூங்கோதை. அண்ணி இது எங்க தாய்மாமா மகேஸ்வரன்.” வது
“வணக்கம் சித்தப்பா.” அவள் குரல் உயிர் வரை தீண்டிச் சென்றிட,
“பூங்கோதை எனக்கு ஒரு ஆசை செய்வியாம்மா?”
“சொல்லுங்க சித்தப்பா.”
“என்னை நீ அப்பா ன்னு கூப்பிடுறியா? ப்ளீஸ்.”
“சரிப்பா. எங்க உங்க வைஃப்?”
“தெரியாது.” அவர் குரல் இறுகியிருந்தது.
“அதோ வராங்க பாரு அவங்க தான் மகேஸ்வரன் மாமா மனைவி நீலா. பக்கத்துல இருக்கே அது அவங்க பொண்ணு நர்மதா.”வது
அவளின் பார்வை நீலாவை அளக்கத் தொடங்கியது. கண்களில் அலட்சியமும், கர்வமும் மின்னிய அவரை பார்த்த நொடி கோதைக்கு ஏதோ சரியில்லாதது போல் தோன்றியது. அவரது மகள் நர்மதா முகத்தில் பல கோட்டிங் பெயிண்ட் அடித்து விகாரமாக இருந்தாள்.
“வது அவளுக்கு என்ன வயசு இருக்கும்? ஏன் இப்படி இருக்கா?”
“அவ இப்போதான் டென்த் படிக்கிறா அண்ணி. “
கோதை கமலாம்மாவை அனைவருக்கும் பழச்சாறு எடுத்துவர சொல்லி அதை அவள் கைகளாலேயே கொடுத்தார்.
மகேஸ்வரன் மகிழ்ச்சியுடன், “தேங்க்ஸ் தங்கம்..”
“என்ன நெட்டைக்கொக்கு இப்போ தான் உனக்கு எனக்கித குடுக்க தோணுச்சா? சரி போ. “
அவன் தலையில் ஒரு குட்டு வைத்தவள் நீலா விடம் வந்தாள்.
அவள் அலட்சியமாக “என் வீட்டுக்கு வந்துட்டு என்னயே உபசரிகிறியா?” என்று கோதையை நக்கலாய் கேட்க, இதை கேட்டபடி உள்ளே வந்த ராஜேஸ்வரன் கால்கள் அப்படியே நின்றன.
கோதை சிரித்த முகமாய், “அடடே சித்தி! இது என் வீடு, நீங்க எங்க விருந்தாளி அதான் நானே என் கையால குடுக்கறேன்.”
“ஏய் என்ன திமிரா. போ போய் இன்னிக்கு ஒரு நாள் உக்காரு. நாளையில் இருந்து நான் சொல்றததான் செய்யணும். எனக்கு இந்த மாதுளை ஜூஸல்லாம் பிடிக்காது, எனக்கு ஆப்பிள் ஜூஸ் தான் பிடிக்கும்.”
“எங்க எஸ்டேட்ல விளஞ்ச மாதுளை இது. உடம்புக்கு பலம். அதான் குடுத்தேன். அப்பறம் என்ன சொன்னிங்க நாளையில் இருந்து நீங்க சொல்றதை கேக்கணுமா? எதுக்கு? என்னை என்ன உங்க வீட்ல இருக்க சாதா டிக்கெட்ல ஒண்ணுன்னு நினைச்சிங்களா?? அதுக்கு வேற ஆளைப் பாருங்க. இன்னோரு தரம் என்னை ஏய்ன்னு சொல்லி கூப்பிடிங்கன்னா நடக்கறதே வேற. உங்க வெட்டி சீன் எல்லாம் அவங்களோட நிறுத்திகணும். சொல்லிட்டேன்.” கராராகக் கூறினாள் பூங்கோதை.
நர்மதாவிடம் நீட்ட அவளோ என்றும் இல்லாமல் தன் தாயை யாரோ எதிர்ப்பதால் மிகவும் பயத்துடன் அந்த ஜூசை எடுத்து கொண்டாள். அவள் வாயில் வைக்க போகும் நொடி கோதை அவளை தடுத்து,
“முதலில் உதட்டில் இருக்கும் லிப்ஸ்டிக்கை துடச்சிட்டு குடி. இதென்ன பூதம் மாதிரி இவ்வளவு மேக் அப். அப்படியே முகம் கழுவிட்டு வா. எனக்கு உன் முகத்தைத்தான் பார்க்கணும், முகமூடியை இல்லை.”
நர்மதா அவள் மீது பயம் கொண்டு முகம் கழுவ சென்றுவிட மீண்டும் நீலாவிடம் வந்தவள், “உங்க பொண்ணுதான அவ, பார்க்க பேய் மாதிரி மூஞ்சில மாவு பூசிக்கிட்டு திரியறா.. அதை கூட பார்க்காம உங்களுக்கு என்ன வேலை?”
“என் பொண்ணு சிட்டியில் வளர்ந்தவ. அவ மேக் அப் போடத்தான் செய்வா. உனக்கெல்லாம் என்ன தெரியும் மேக் அப் பத்தி”
“அப்போ நாங்கெல்லாம் பட்டிகாட்ல இருந்து வரோமா? வது அப்படியா இருக்கா? எங்க அத்தம்மா அவளை எப்படி வளத்திருக்காங்க பாருங்க. அவங்களைப் பார்த்து பிள்ளை வளர்க்கக் கத்துக்கோங்க.”
“யாரை பார்த்து என்னடி பேசுற? வாய் ரொம்ப நீளுது…”
“நீலான்னு பேர் வெச்சவங்க கிட்ட மட்டும் நல்லா நீளுன்னு கடவுள் என் வாய் கிட்ட சொல்லிட்டாரோ என்னவோ!” என்று அலட்சியமாக தோள் குலுக்கி விட்டு திரும்ப அங்கே ராஜேஸ்வரனும் மகேஸ்வரனும் தோளில் கை போட்டபடி நின்று அவளைப் பார்த்து கொண்டு இருந்தனர்.
“என்ன மாமாவும் மச்சானும் என்னை லுக் விட்டுட்டு இருக்கீங்க?”
“இன்னிக்கு வெறும் வரவேற்பு மட்டும் வைக்கலாமா இல்ல பாராட்டு விழாவும் நடத்தலாமான்னு ஒரே யோசனை!”, என்றார் ராஜேஷ்வரன்.
“நீங்க பாராட்டு விழா வைக்க நான் என்ன செஞ்சேன் சொல்லுங்க அப்பா”, என்று அவள் மகேஷ்வரன் பக்கம் திரும்ப,
அவரோ, “யாருமே சமாளிக்க முடியாத அவளை நீ நல்லா.. பண்றியே!”
“நியாயமா நீங்க என்னை திட்டனும் அப்பா.”
“அதான் நியாயமான்னு சொல்லிட்டியே! அப்படி ஒரு வார்த்தைக்கும் அவளுக்கும் சம்மந்தமே இல்ல… அதனால நீ பேசுனது தப்பே இல்ல.” சொன்ன அவர் குரலில் வலி, வெறுப்பு இரண்டும் கலந்திருந்தது.
“ஆதி எங்கம்மா?”,என்று ராஜேஷ் கேட்டவுடன் ஷாக் அடித்தது போல, யாரையும் பார்க்காமல் அவர்கள் அறை நோக்கி ஓடினாள்.
‘ஐயோ….’ என்று தன்னை தானே திட்டிக்கொண்டு கதவை திறக்க,
அவள் வெளியில் செல்லும்போது எந்த நிலையில் இருந்தானோ அதே நிலையில் அவன் நிற்க கோதையின் நெஞ்சம் பதறியது.
“அத்தான்” என்று அவனை அணைத்துக்கொண்டதும் ஏதோ சிலை உயிர் பெற்றதை போல அவன் கோதையை பார்த்து விழித்துவிட்டு,” பூமா நான் உன்னை வேணும்னு ஏமாத்தல. மறைக்கல… புரிஞ்சுக்கோ டா.” என்று அவளை பேசவிடாமல் அவன் புலம்பினான்.
அவள், ” இல்ல அத்தான்..”, என்று ஏதோ சொல்ல வர,
“பூமா பூமா.. என்ன விட்டு போய்டாத டி.. “,என்று அவன் அழுது புலம்ப அவள் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அவன் இதழ்களை அவள் இதழ்களின் கட்டுக்குள் கொண்டுவந்தாள்.
கண்களை விரித்து அவள் செய்கையினால் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் முன்னே வர, நிம்மதி அவன் கண்களில் நிலை கொண்டது. அவன் கண்கள் நிம்மதியை பிரதிபலித்த பின்பு தான் அவள் அவனை விடுவித்தாள்.
அவள் முகத்தை தன் கையில் ஏந்திய ஆதி, “பூமா உனக்கு கோவம் இல்லையா? போகமாட்டதான…” என்று சிறுபிள்ளையாய் வினவி விட்டு, அவன் மாமாவின் வாழ்வில் அத்தையின் பகுதியை சொல்ல போக, அவள் அவனை தடுத்து,
“அத்தான் நான் மகேஷ் அப்பாவை பார்த்தேன். கண்டிப்பா தப்பு செய்யறவரா எனக்கு தோணால. அதே போல அந்த சோ கால்ட் வைஃப் கூட அவர் சந்தோசமா இருப்பது போல தெரியல. அதனால அவரும் என்னை போல ஏதோ சூழ்நிலையில் அடுத்தவங்களால பாதிக்கப்பட்டவரா தான் இருப்பாருன்னு எனக்கு தோணுது. அதனால அவரோட பாஸ்ட். இந்த குடும்பத்தோட ஹிஸ்டரி. எதுமே எனக்கு வேண்டாம். ஆனா ஒன்னு சொன்னா தப்பா எடுக்க மாட்டீங்களே அந்த பொண்ணு நர்மதாவ பார்த்தா நம்ம வீட்டு பொண்ணுன்னு பீல் வர மாட்டேன்கிது.”
ஆதி சிரித்துக்கொண்டவன், “நீ இவ்வளவு புத்திசாலியா இருக்க வேண்டாம். ஆனா அதுக்கு முன்னாடி பண்ணியே ஒரு வேலை.. அப்பப்பா… சூப்பர்..”
“அத்தான்”, என்று சிணுங்கி விட்டு, “ஆமாம். லூசு மாதிரி புலம்பிக்கிட்டே இருக்கீங்க நான் சொன்னதை கேட்கலை. அதான் உங்களுக்கு எப்படி சொன்னா புரியுமோ அப்படி சொல்லிட்டேன்.” என்று கண் சிமிட்டினாள்.
“சரி லேட்டாகுது. போகணும். கிளம்புங்க…”, என்று அவனை தள்ளிக்கொண்டு குளியலறையில் விட்டு ஹாலுக்கு வந்தவளை அவள் நட்பு கூட்டணி ஓடி வந்து அணைத்து கொண்டது.
இன்பா, பிரவீன், ராகுல், கிருத்தி, சுபா, கோதை அறுவரும் ஆரத்தழுவி தங்கள் இரண்டு நாள் பிரிவுத்துயரை போக்கிக்கொண்டனர்.
“அடடா… இங்க ஒரே கொசுத்தொல்லை.”, என்று அவர்களை புவனேஸ்வரன் கிண்டல் அடிக்க.
“என் பிரென்ட் போல யாரு மச்சான் “,என்று வது பாட
ராஜேஸ்வரன், மகேஸ்வரன் இருவரும் அவளை மகிழ்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்க,
அன்னம் தன் மருமகளுக்கு திருஷ்டி எடுக்க,
நீலா மட்டும் தொலைவில் நின்று அவளை யோசனையாய் நெற்றியை நீவிக்கொண்டிருந்தாள்.

👌👌👌👌👌