“Without love, there is no relationship. Without respect, there’s no reason to stay in it.”

அமுதம் 20
அந்த பெரிய வீட்டின் அமைதியே அந்த வீட்டினரின் மனநிலையை பிரதிபலித்தது.
சுந்தரை கதிர் சாப்பிட வைக்க போராடிக்கொண்டிருந்தார். சுந்தர் சோபாவை விட்டு நகரவே இல்லை. முகம் இறுகி அமர்ந்தவர் தேவைக்கு எழுந்து சென்றுவிட்டு மீண்டும் அங்கேயே இருந்துகொண்டார் இரண்டு நாட்களாய்.
லட்சுமி அறையை விட்டு வெளியில் வரவே இல்லை. தமயந்திக்கு தன் இளைய மகன் தவறு செய்தான் என்றதுமே பாதி உயிர் சென்று விட்ட நிலையில் மூத்தவன் வீட்டின் மூன்றாம் தலைமுறை பிள்ளைகளையும் மூத்தவர்களையும் அழைத்து கொண்டு சென்றதும் மொத்தமாக உடைந்து போனார்.
அவர் மனதில் ஓடியதெல்லாம் ‘இதில் என் தவறு என்ன..? நான் ஏன் மொத்தத்தையும் இழந்து நிற்கிறேன்.??’ ‘முகிலன் ஒருவனால் தான், அவனை நான் சரியாக கவனிக்க வில்லை’, என்று பதில் மனதிற்குள் வந்ததும் மயங்கி சரிந்தவர் இன்னும் சீராகாமல் இருக்கிறார் மருத்துவமனையில். அவருடன் இந்திரனும் எதையோ வெறித்த படி அமர்ந்திருந்தார்.
இவர்கள் எல்லாரையும் விட மீனாட்சியின் நிலை அந்தோ பரிதாபம் தான். மகளின் அறைக்குள் சென்று கதவடைத்தவர் இரண்டு நாட்களாய் வெளியில் வரவே இல்லை. அவரை கதவை திற என்று சொல்லவும் அந்த வீட்டில் ஆள் இல்லை. கதிர் தான் தனக்கும் சுந்தருக்குமாக மெடிக்கல் லீவ் அப்ளை செய்து விட்டு, மருத்துவமனையில் இருக்கும் அண்ணனுக்கு கடையில் உணவை வாங்கி கொடுத்துவிட்டு, வீட்டிற்கும் உணவு வாங்கி வந்தவர் முதலில் கண்டது சுந்தரைத்தான். அவரை அரைமணி நேரமாக உலுக்கிக்கொண்டிருக்கிறார். அவர் எழுந்து வருவது போல் தெரியாமல் போக, அடுத்து அவர் கண்டது காமாட்சியை.
“சாப்பிடும்மா”
“வேண்டாம் அண்ணா.”
“சாப்பிடாம இருந்தா சரியா போய்டுமா? சரி அவங்க எல்லாரும் தான் அப்படி பண்றாங்கன்னா, நீயும் ஏன் மா? வா வந்து சாப்பிடு நான் லட்சுமியை கூட்டிட்டு வரேன். “
காமாட்சி உணவு மேசையில் காத்திருக்க, கதிர் லட்சுமியிடம் வந்தவர் வேறு ஒன்றும் பேசாமல், “வெளில வா” என்று சொல்லிவிட்டு அவரின் பதிலுக்கு இடமாளிக்காது வெளியேறினார்.
மீனாட்சியின் அறையில் தேடியவள் அவர் இல்லாது போகவே கீழே வந்தார்.
லட்சுமி ஹாலில் நின்றிருந்தார்.
“வந்து சாப்பாடு போடு”, என்று லட்சுமியை பார்த்து அவர் சொன்ன நொடி லட்சுமி தீயாக மாறினார்.
“இல்ல உங்க எல்லாருக்கும் என்னை பார்த்தா எப்படி தெரியுது? இத்தனை வருஷத்துல நான் என்னைக்காவது எனக்கு மரியாதை தரணும், என் பேச்சைக் கேக்கணும், நானும் இந்த வீட்டு மருமக, எனக்கும் எல்லாம் கண்டிப்பா சொல்லிட்டு தான் செய்யணும் அப்படின்னு கண்டிஷனா நடந்திருக்கேனா?? உங்க எல்லாருக்கும் பார்த்து பார்த்து பண்றது மட்டும் தான் இந்த ஜென்மத்தில் எனக்கு கிடைத்த வரம்ன்னு இந்த வீட்ல இருக்கற ஒவ்வொருத்தரையும் அவங்களுக்கு பிடிச்சது பிடிக்காதது பார்த்து பார்த்து செஞ்சேனே எதுக்கு? இப்படி என் பிள்ளைகளை தொலைச்சிட்டு நான் தனியா நிக்கறதுக்கா?
நானும் தமயா(தமயந்தி) அக்காவும் என்ன தப்பு பண்ணினோம்? எங்க கிட்ட கோதைக்கும் முகிலனுக்கும் கல்யாணம், அகிலனுக்கு பிடிக்கல. இப்போ சொல்ல வேண்டாம்ன்னு சொன்னிங்க. அதை தவிர எங்களுக்கு என்ன தெரியும்? கோதை பேசும்போது தான் அவளுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலன்னு எங்களுக்கு தெரியும். அவளை எல்லாரும் தப்பா பேசும்போது நாங்க அவளுக்கு ஆதரவா பேசல தான்! இல்லன்னு சொல்லல. எப்படி பேசிறது? என்னைக்கு இந்த வீட்ல நாங்க பேசி இருக்கோம்? படிச்சு பெரிய பதவில இருக்கற தமயா அக்காக்கும் இதான் நிலைமை, வீட்லயே இருந்து உங்களையே உலகமா நினைச்ச எனக்கும் இதான் நிலைமை.
நீங்க எல்லாரும் நீங்க செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிங்க. நானும் அக்காவும் ஏன் அனுபவிக்கணும்? சரி அதாவது போய் தொலையுது. கட்டிக்கிட்டு வந்த பாவத்துக்கு உங்க பாவத்துல எங்களுக்கும் பங்கு. விடுங்க. இப்பயும் உங்களால என்கிட்ட நல்ல விதமாவோ ஆறுதலாவோ பேச முடியலை! இப்பயும் ஆர்டர் தான் இல்லாயா? நீங்க வான்னா வரணும், சிரின்னா சிரிக்கணும். இல்லாத பழியை ஏத்துக்கணும். அதோட இப்பயும் உங்களுக்கு நேரத்துக்கு வடிச்சு கொட்டி பாத்துக்கணும். என்னை என்ன மனுஷின்னு நினைச்சிங்களா? இல்ல எப்படி? எனக்கு புரியல!
நான் உங்க மனைவியா? இல்ல உங்க பழி பாவங்களை சுமந்து, உங்களுக்கு பணிவிடை மட்டும் பண்ற அடிமையா? எனக்கு இன்னிக்கே தெரிஞ்சாகணும்.”என்று எப்பொழுதும் சாந்தமாய் இருப்பவர் இன்று சலங்கை கட்டி ஆடாத குறையாக ஆடித் தீர்த்தார்.
கதிருக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அவர் வாயை திறப்பதற்குள், “உங்க அண்ணனை வீட்டுக்கு வர சொல்லுங்க. நானே அக்கா வை பார்த்துக்கறேன். இனிமே எனக்கு மிஞ்சி இருக்கிறது தமயா அக்கா தான். நான் மீனாட்சியை உயர்வா நினைச்சிருந்தேன். எனக்கு நாத்தனாரா இல்லாம தோழி மாதிரி இருக்காங்களேன்னு! ஆனா அவங்களும் எங்களை பிரிச்சி பார்த்துடாங்க. இனிமே இந்த குடும்பத்தில எனக்கு சொந்தம்ன்னா அக்கா மட்டும் தான்.” விட்டால் குதறிவிடும் ஆத்திரத்துடன் பேசிய லட்சுமி மருத்துவமனை செல்ல வாசலில் இறங்கிவிட்டார்.
கதிர் தன் மொத்த சக்தியும் இழந்தது போல நாற்காலியில் அமர்ந்தார். ஒரு நிமிடம் யோசித்தார். லட்சுமி இல்லாத நாள் தன் வாழ்நாளில் எப்படி இருக்கும் என்று…
விடை தான் அவர் கண் முன் நிற்கிறதே!
மீண்டும் வீடு நிசப்தமானது.
வாங்கி வந்தவைகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள் கோதை.
“அத்தான் இந்த பார்ட்டி வேர் இப்போ எதுக்கு?”
“ஏன் நாம பார்ட்டிக்கு போக மாட்டோமா?”
“சரி தான்” என்று வேலையில் கவனமானாள்.
அவளை பின்னொடு அணைத்த ஆதி அவன் மீசையால் அவளின் பின்னங்கழுத்தில் குறுகுறுக்க, அவள் துள்ளி அவன் மார்பிலே சரிந்தாள்.
அவளின் மென்மையான ஸ்பரிசம் அவன் ஆண்மையைத் தூண்ட, மெல்ல மெல்ல அந்த மென்மையை தன் வசப்படுத்தும் வழியில் முன்னேறினான். அவன் உதடுகள் அவள் கழுத்தில் கோலம் போட அவளோ அவனிடம் கலந்துபோக குழைந்து நின்றாள், அவனின் ஊர்வலத்தில் ஏதோ அவன் உதடுகளில் உரச, கிறங்கிபோயிருந்த தன் விழிகளை திறந்த அவன் கண்களுக்கு பட்டது அவள் கழுத்தில் அவன் அணிவித்த பொன்மஞ்சள் தாலி. அவன் தலையில் யாரோ தட்டியது போல் ஒரு உணர்வுடன் அவளிடமிருந்து மெதுவாய் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு,
“இன்னிக்கு ரொம்ப அலஞ்சிட்டோம். நீ நல்லா ரெஸ்ட் எடு பூமா” என்று அவளின் தோளில் முகவாய் வைத்து அவன் சொல்ல..
“அத்தான்.. என்னாச்சு… ஏன் என்கிட்ட உங்களுக்கு இவ்வளவு தயக்கம்?”, அவனின் ஆசை ஊர்வலத்தில் கட்டுண்டு கிடைந்தவளை முகத்தில் தண்ணீர் தெளித்துப்போல இருந்த அவன் செயலால் கோதைக்கு வருத்தம் வந்தது. ஆனால் அது அவனை இன்னும் தன்னை விட்டு தயங்கி தள்ளி நிற்க வைக்கும் என்று, அவனே அவன் தயக்கங்களை உடைத்து அவளை நாட வேண்டும், அதனால் சூழ்நிலையை சகஜமாக முயன்றாள்.
“இல்ல பூமா”
“சொல்ல மாட்டீங்கல்ல. நான் சொல்லவா? ‘நான் ஏதோ மனசு வருத்தத்தை வச்சிட்டு வெளிய காட்டாமல் இருக்கேன். என் மனசு சரியாகற வரைக்கும் நீங்க எனக்கு டயம் குடுகிறீங்க.’ சரியா?”
அவள் கேட்டதும் ஆதி விழித்தான்.
“இவரு பெரிய கதாநாயகன்! இவரை போல யாரும் இல்லன்னு… ஏதோ ஒரு பாட்டு கூட வருமே…
உன்ன போல ஒருத்தர நான் பார்த்ததே இல்ல
ஓ உசரம் பார்த்து வானம் கூட
குறுகுமே மெல்ல
சாமி போல வந்தவனே
கேட்கும்முன் நீ தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
என் ஒட்டுமொத்த
ஜென்மத்துக்கு சொந்தம் நீ தானே
அப்படி நான் உங்க பின்னாடி பாடிட்டே ஓடி வரணும்.. அதான உங்க பிளான்?”
“இல்ல பூமா”
“அப்பறம் என்னவாம்? நேத்து கல்யாணம் பண்ணுவாராம். இன்னிக்கு அலஞ்சிருக்கோம் ரெஸ்ட் எடுன்னு சொல்லுவாராம்!” சிறுப்பிள்ளையாய் முகம் திரும்பிக் கொண்டாள்.
“ஏய்! மக்கு பிள்ளை! அப்படி இல்லை. கல்யாணம் நேரம் காலம் பார்க்காம, என் அம்மா அப்பா இல்லாமையே பண்ணிட்டோம். இன்னும் நான் உன் புருஷன் நீ என் பொண்டாட்டின்னு ஊர் உலகத்துக்கு சொல்லவே இல்ல. அதுக்குள்ள எப்படி பூமா? “
“நிஜமாவே இது தான் காரணமா?”°
“ஆமா பூமா. நாளைக்கே நீ யார்கிட்டயாவது நான் ஆதி பொண்டாட்டி அப்படின்னு சொன்னா அவங்க நம்புவங்களா? எப்போ கல்யாணம் ஆச்சு எங்க யாருக்கும் தெரியாதேன்னு தானே சொல்லுவாங்க. வீட்ல எல்லாரையும் வச்சு, தொழில் முறையில் உள்ளவங்க, தொழிலாளர்கள் எல்லாரையும் மொத்தமா கூப்பிட்டு இவ என் மனைவின்னு சொல்ல வேண்டாமா? அதுக்கு கொஞ்ச காலம் ஆகலாம், அதுக்குள்ள நம்ம வாழ்க்கையை தொடங்கி உனக்கு ஒரு அவப்பெயர்ன்னா, அது உன்னையும் என்னையும் மனசால பாதிச்சிடும். அதுக்கு தான் வெய்ட் பண்ண சொன்னேன். எனக்கு மட்டும் ஆசை இல்லையா என் பூமா மேல? நீயே யோசிச்சு பாரு டா. நம்ம ஒரு வருஷம் கழிச்சு பார்த்திருக்கோம், இப்போ நீ என் மனைவி என் பக்கத்துலயே இருக்க, இந்த ஊரோட குளிருக்கு நான் உனக்கும் எனக்கும் மில்லிமீட்டர் இடைவெளியாவது விடுவேனா?? ஆனா இதெல்லாதயும் விட ரொம்ப முக்கியம் நீ என் மனைவின்னு எல்லாருக்கும் சொல்றது. அதுக்கப்பறம் உன்னோடு நான் ஆரம்பிக்கப்போற வாழ்க்கை தான் நம் உறவுக்கான கவுரவம்.”
காதல் என்ற வார்த்தை இருவருக்குள் முளைத்ததும் பெண்ணை தனதாக்கிக்கொள்ளும் எத்தனையோ ஆண்களுக்கு மத்தியில், தன்னை யாரும் மரியாதை குறைவாக நினைக்கக் கூடாது என்று அவன் ஆசைகளை கூட தள்ளிப் போடும் கணவனைக் கண்ணீரோடு காதலாய் இதழொற்றினாள்.
“அப்படியே ஓடி போய்டுங்க. என் கண்ணலேயே இன்னிக்கு ராத்திரி பட கூடாது. பட்டா நீங்க சொன்ன எந்த விளக்கத்தையும் நான் ஏத்துகாம உங்களை….. போங்க அத்தான்.”
அவனைப் பிடித்து தள்ளினாள். அவன் நகராது அவளை கிறக்கத்துடன் பார்க்க “வரு….. ஓடுங்க.. இல்லனா கடிச்சிருவேன்…”
“ஏய் அதென்ன பூமா வரு..”
“ம்ம்.. நீங்க மட்டும் என்னை யாரும் கூப்பிடாத பேரா வைக்கறப்போ நாங்க யோசிச்சி வைக்க மாட்டோமா?”
“அதற்குத்தான் விளக்கம் கேட்கிறேன் மனைவி அவர்களே…” நாடக பாணியில் அவன் கேட்க,
“சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள் கணவர் அவர்களே. ஆதிலிங்கேஸ்வரன் என்னும் உங்கள் பெயரின் கடைசி பாகமான வரனை சுருக்கி வரு என்று வைத்துவிட்டேன் கணவர் அவர்களே…” என்றாள் அவளும் அதே பாணியில்..
“ஐயோ போதும் பூமா சுத்த தமிழ், அப்பறம்”, என்று இழுத்தான்.
“என்ன அத்தான்?”
“இல்ல அதான் இவ்வளவு நேரம் பேசிட்டோம்ல. நார்மல் தான. நான் இங்கே உன் பக்கத்துலேயே சமத்து பையனா படுத்துகிறேன்.”, என்று அவள் பதிலுக்கு காத்திராமல் கட்டிலில் படுத்து கண்ணை மூடிக் கொண்டான்.
அவனைப் பார்த்துச் சிரித்துவிட்டு, அவனருக்கில் வந்து அவன் சிகையைக் கலைத்து விளையாடியவள் அவன் உறங்கியப்பின் அவன் நெற்றியில் முத்தமிட்டு, அவ்வறையை விட்டு வெளியேறினாள்.
வேலைக்கு வந்த கமலாவுக்கு ஏதோ வித்தியாசமாக தெரிந்தது. எப்போதும் பின்கட்டின் வழியே வீட்டிற்குள் வரும் பழக்கம் கொண்ட கமலா, சாப்பாட்டு அறையில் நுழைய அங்கே மேஜையில் பல வித உணவுகள் தயார் நிலையில் இருந்தது.
அவர் சமையலறையை நெருங்கும்போதே “கமலாம்மா, வந்தாச்சா… அப்படியே டைனிங்ல இருக்கிறத வெளில இருக்கற பந்தலுக்கு கொண்டு போங்க.. நான் வந்துட்டேன். ” என்று ஏப்ரனை கழட்டியபடி சொன்னவள், தன் அறையை நோக்கிச் சென்றாள்.
ஆதி தயாராகி இருக்க,”அத்தான் ரெண்டு நிமிஷம் புடவை மாத்திட்டு வந்துடறேன்”, என்று அவனிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அறை வாயிலில்
“எந்த பொண்ணுங்க பா ரெண்டு நிமிஷத்துல புடவை கட்டினது? அதுக்கெல்லாம் இரண்டு மணிநேரம் ஆகும். புடவை, மேச்சிங் நகை, மேக் அப்.. அப்பப்பா…”
குரல் கேட்டதுமே,”ஆமாமா டெய்லி ஒரு பொண்ணை கிளப்பி கூட்டிட்டு போறவங்க சொன்னா சரியா தான் இருக்கும்! என் நவி அண்ணா போல.. இல்ல அத்தான்…” என்று இவளும் எதிர்க் குரல் கொடுத்தாள்.
“தங்கச்சிம்மா அண்ணன் சரண்டர்…” என்று உள்ளே வந்தான் நவிலன்.
“சரி பேசிட்டு இருங்க அண்ணா. வந்துடறேன்.” என்று தன் உடையுடன் வெளியேறினாள்.
“அட நான் உன்னோட ஹால்ல பேசிட்டு இருப்பேன்ல டா. அவ இங்கேயே சேன்ஜ் பண்ணலாமே! ஏன் டா?” என்றான் ஆதியிடம்
“பூமா அப்படித்தான். சரி என்ன நடக்குது இங்க? அவ என்னை ரெடியாக சொன்னா. இப்போ நீ வர.”
“நீ வேற! நைட் எல்லா வேலையும் முடிச்சிட்டு உன் மொபைல்ல இருந்து கால் பண்ணி லாஸ்டா தான் எனக்கே சொன்னா உன் பொண்டாட்டி.”
“இப்போ மட்டும் என் பொண்டாட்டி, அப்போ தங்கச்சிம்மா வா? இரு அவ வரட்டும் சொல்றேன்.” தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக அவன் பயன்படுத்த,
“டேய் ஏன் டா? ஏன் டா உனகிந்த நல்ல எண்ணம்… அவளே என்ன சும்மா கலாய்ச்சு தள்ளிட்டு இருக்கா. நீ வேற எடுத்து கொடுக்காத.”
“சரி விஷயத்துக்கு வா.”
“நீ ஏதோ அவளை உன் பொண்டாட்டின்னு ஊர் முன்னாடி சொல்லாம சங்கடப்படுறியாம். அதான் தொழிலாளர்கள் எல்லாரையும் ராத்திரி 8 மணிக்கு அழைச்சு, இன்னிக்கு உங்க கல்யாண அறிவிப்பு அப்பறம் பிரஞ்சு(brunch) அப்படினு சொல்லிட்டா. அம்மா அப்பா எல்லாரும் வராங்க. சாயங்காலம் பிஸ்னெஸ் பிப்பிள்க்கு அப்பறம் சொந்தக்காரங்களோட ரிசெப்ஷன்.”
“ஓ இவ்வளவு பண்ணிருக்காளா, அதான் மேடம் காலைல இருந்து சமையலறைய விட்டு வரவே இல்லையா?? அவ கையாலேயே இன்னிக்கு எல்லாருக்கும் சாப்பாடா?சரி சரி. ரிசெப்ஷன் ஒரு ராத்திரியில் ரெடி பண்ண முடியுமா டா?”
“பண்ணிருக்கா டா. முக்கியமானவங்களை நேர்ல போய் இப்போ தான் நான் அழைச்சிட்டு வரேன். எப்படி டா? அவளுக்குன்னு பார்த்து பார்த்து நீ செய்யற. உனக்கு அவ செய்யறா. எனக்கு அப்படி பூரிப்பா இருக்கு டா.”
“இருக்குண்ணா. இருக்கு. இன்னிக்கு பூரியும் இருக்கு.”, என்று நவிலனை வம்பிழுத்தபடி உள்ளே வந்த கோதையை கண்ட இரு ஆண்களின் கண்களும் ஆச்சர்யத்துக்கு மாறின.
நேற்றும் பட்டு சேலையில் பார்த்திருந்தாலும், இன்று புது சேலையில், நகைகள் மின்ன, தலை கொள்ளாப் பூவுடன், முகமெல்லாம் மலர்ந்து அவ்வீட்டில் அவளின் மணத்தை அனைவர் மனங்களிலும் பரப்பிக் கொண்டிருந்தாள் கோதை.

Eththana naal aathangam lakshmi ma vedichchittaanga 😔
Yen booma varu naa ponnu peru maari ella 😝😝😝😝
லக்ஷ்மி தன் ஆதங்கத்தை எல்லாம் கொட்டிட்டாங்க,
பூமா செம்ம பாஸ்ட்
thank you amma
அடேயப்பா…! ஆதியோட பூமா செம பாஸ்ட் தான் எல்லா விஷயத்திலேயும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
💕💕💕💕💕