“That which does not kill us makes us stronger.” —Friedrich Nietzsche

அமுதம் 9
சுஜியைக் கண்ட குடும்பம் நிம்மதி அடைந்தது.
கோதையிடம் வந்த தாத்தா, “கண்ணு எப்படிடா ? எப்படி சுஜி வீட்டுக்கு வந்தா? இவங்கெல்லாம் என்னென்னவோ சொன்னாங்களே!”
கோதை தாத்தாவின் கைப்பிடித்து சோபாவில் அமரவைத்து, “முதல்ல எல்லாரும் ஆசுவாசப்படுத்திக்கோங்க. நம்ம சுஜிக்கு ஒன்னும் இல்ல. கொஞ்சம் பயந்திருக்கா. அவ்ளோ தான்.”
அனைவரும் ஆங்காங்கே அமர, உள்ளே சென்ற ஆதி அனைவருக்கும் குடிக்க காப்பியோடு வந்தான்.
அந்த நேரம் அவர்களுக்கு அது தேவையாய் இருந்தது.
கோதை சோர்வாய் உணர்ந்தாள் அவள் கண்கள் இன்பாவை தேட, அவன் ஆதியோடு பேசிக்கொண்டிருந்தான்.
ஷியாம் அரற்றிக்கொண்டிருக்கும் தன் தங்கையை சமாதானம் செய்ய இயலாது போக, அந்த கோபத்தையெல்லாம் தன் தந்தையிடம் காட்டினான்.
“பாருங்க எப்படி இருக்கா பாருங்க. எல்லாம் உங்களால…”
“ஷியாம் வாய மூடு. யாரை பார்த்து என்ன சொல்ற… மாமா என்ன பண்ணினார்?”
“இவரால தான என் தங்கச்சி இப்படி இருக்கா. “
“அவளுக்கு ஒன்னும் இல்ல. டாக்டர் கிட்ட காட்டி ஊசி போட்டு தான் கூட்டிட்டு வந்திருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்துல தூங்கிடுவா. நாளைக்கு சரியா இருப்பா. ஆனா உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா மாமாவை பார்த்து அப்படி பேசுவ.உனக்கு உன் தங்கச்சி பத்தி மட்டும் தான கவலை? ஆனா அவருக்கு அப்படி இல்லை. ஊர்ல உள்ள எல்லா பெண்ணுக்கும் அவங்க தான காவல்? விஷயம் தெரியாம பேசாத.”
“கோதை நீ அவருக்கு சப்போர்ட் பண்ற. ஆனா யோசிச்சு பாரு. நீ கூட்டிட்டு வரலன்னா சுஜி நிலை என்ன? இவரால சுஜியை காப்பாத்த முடிஞ்சுச்சா?”
“மாமாவும் என் அப்பாவும் இல்லனா என்னால எப்படி சுஜியை காப்பாதியிருக்க முடியும்?”
“என்னம்மா சொல்ற?”சுந்தர்
கோதை பதிலளிப்பதற்குள், ஆதி அவளிடம் வந்து கை பற்றி அமரவைத்தான்.
“நான் சொல்றேன் மாமா. அவ ரொம்ப டயர்டா இருப்பா “என்று இன்பாவிடம் கண் காட்ட அவன் அவளுக்கு ஒரு கையில் உணவும் மறுகையில் மாத்திரைகளுடன் வந்தான். அவளை உணவு மேசைக்கு இன்பா அழைத்துச் செல்ல ஆதி பெருமூச்சொரிந்தான்.
ஷ்யாமும் சுஜி அரற்றியபடியே உறங்கிவிட்டதால் அவளை அறையில் விட்டு வந்தான்.
பொதுவாக நடுவில் நின்றவன் நடந்ததை விவரிக்கலானான்.
ஆதி வரும் போதே இவர்கள் முழு திட்டத்துடன் தயாராக இருந்தனர்.
ஆதி,பிரவீன் இருவரும், கோதையை அவர்கள் காரில் இழுத்து சென்றவுடன், அவளிடம் இருந்த பிரவீன் மொபைலையும் ஆதியின் மொபைலையும் இணைக்கும் செயலியின் மூலம் அவளை ட்ராக் செய்து பின் தொடர்ந்தனர்.
ராகுல், கமிஷனர் அலுவலகத்தில் சுந்தருக்கு நம்பிக்கையானவர் யார் என்ற கண்டுபிடிப்பில் இருந்தான். ஒரு வழியாய்… ஏட்டு ஒருவர் சுந்தர் மீது மரியாதை கொண்டவர் என்றுணர்ந்து அவரிடம் சென்றான்.
“ஏட்டையா… நான் கமிஷனர் சார் பொண்ணு பூங்கோதையோட பிரென்ட். “
“சொல்லுங்க தம்பி.”
“அண்ணா இங்க இருக்கற அசிஸ்டண்ட் கமிஷனர்ல யாரு கதிர் சாருக்கு அப்பறம் முக்கியமானவங்க. அதும் உண்மையா ஆக்ஷன் எடுக்கறவங்க?”
“ஏன் தம்பி?”
“சொல்லுங்க அண்ணா.”
“சித்ரஞ்சன் சார் தான்.”
“அண்ணா அவரை நம்பலாமா?”
“கண்டிப்பா தம்பி.”
“என்னை அவர்கிட்ட கூட்டிட்டு போங்க. வேற யாருக்கும் நான் வந்ததோ இல்ல ஏ.சி யை மீட் பண்றதோ தெரிய வேணாம்.”
“வாங்க.”
சித்ரஞ்சன் அறையை அடைந்ததும், அவரிடம் அறிமுகம் செய்துகொண்டு.
“சார், கமிஷனர், ஜாய்ண்ட் கமிஷனர் ரெண்டு பேரும் வீட்ல தான் இருக்காங்க. ஆனா சுஜிக்கு ஆபத்துன்னு தெரிஞ்சு இப்போ கோதை அவளா போய் அவங்க வலைல விழுந்திருக்கா. தயவுசெஞ்சு ரெண்டு பொண்ணுங்களுயும் காப்பாத்துங்க.”
“ஏங்க ஒண்ணுக்கு ரெண்டு பொண்ணை மாட்ட வச்சிட்டு காப்பாத்துன்னா எப்படி”
“சார். யோசிக்காம யாரும் ரிஸ்க் எடுக்கல சார். உங்க உதவியும் இருந்தா சீக்கிரமா அவங்கள கண்டுபிடிச்சிடலாம். முடியாதுனா சொல்லுங்க. எங்க காலேஜ் பசங்க இருக்காங்க. கால் பண்ணி வர சொல்லிக்கறேன்.”,என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேறப் போனான்.
சித்ரஞ்சன், “இருங்க ராகுல், நான் மத்தவங்க கிட்டயும் சொல்றேன். “
அவன் பதிலளிக்க இடம்கொடுக்காமல் கான்பிரன்ஸ் அறைக்கு அனைவரையும் வர சொல்லிவிட்டார்.
ராகுல் கடுப்புடன்,” ஏன் சார் எனக்கு இதை முதலிலேயே செய்ய தெரியாதா? உங்களுக்குள்ளேயே அவங்களுக்கு உதவி பண்ண யாரோ இருக்காங்க சார். அதுக்கு தான் நேர்மையான ஆள் கிட்ட சொல்லணும்ன்னு தேடி வந்தேன். இப்படி பண்றிங்க?”
“அதையும் இன்னிக்கே கண்டுபிடிக்கலாம் ராகுல். வாங்க. “
கன்பிரன்ஸ் அறையில்,
“இவர் ராகுல். இவர் நம்ம கமிஷனர் சார் பொண்ணோட பிரென்ட்.”
அங்கிருந்தவர்கள் அவரைக் கேள்வியாய் பார்க்க.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யாரோ கமிஷனர் சார் பொண்ணை இவர் கண்ணு முன்னாடி கடத்திட்டாங்க”
அனைவர் முகமும் பதற, ஒருவர் முகம் மட்டும் குழப்பம் கொண்டது.
சித்ரஞ்சன் அவரை மனதில் குறித்து கொண்டார். கண்ட்ரோல் அறைக்குச் சென்று அவன் சில கட்டளைகள் பிறப்பித்துவிட்டு. மற்றவர்களையும் கோதையைத் தேடும்படி பணித்துவிட்டு இருபது பேர் கொண்ட படாலியனுடன் வெளியில் சென்றார்.
ராகுல், சித்ரஞ்சன், படாலியன் அனைவரும் சென்றதும், அந்த மனிதர் செல்போனுடன் தனியறைக்கு சென்று,
“ஏன் சார் நான் கதிர் பொண்ணை தான கடத்த சொன்னேன்? நீங்க ஏன் கமிஷனர் பொண்ணை கடத்திருக்கிங்க?”
“அப்படியா? இல்லையே…”
“இங்க ஒரு பையன் அவளை கடத்தினதை நேர்ல பார்த்தேன்னு கம்பிலைன்ட் குடுத்து. இப்ப ஊரு பூரா அந்த பொண்ணை தேடுறாங்களே…”
…
“எதுக்கும் கேளுங்க. அங்கேயும் போய் பாருங்க.”
…
வைத்துவிட்டுத் திரும்ப, அங்கே மர்மச் சிரிப்போடு சித்ரஞ்சன் நின்றிருந்தார்.
அவரைக் கொஞ்சம் அன்பாய் கவனித்த பின் அவர் சொன்ன விவரங்கள், ஆதி ,பிரவீன் கோதையை தொடர்ந்து சென்று சொன்ன விவரங்கள் வெவ்வேறாக இருக்க. இரண்டு பிரிவாகி அங்கே சென்றனர்.
கோதை கண்ணை கட்டி இருந்ததால் அவள் இருக்கும் இடம் தெரியவில்லை என்றாலும் காற்றில் வரும் பழைய வாசனையையும் மீறி சுஜி உபயோகிக்கும் டியோடரன்ட் வாசம் ஒரு வித நிம்மதியைக் கொடுத்தது.
சித்ரஞ்சன் ராகுலுடன் அந்த ஏ.சி சொன்ன இடத்திற்குச் செல்ல அது ஒரு சொகுசு பங்களாவாக இருந்தது. இவர்கள் அதை கண்காணிக்கும்போதே அங்கிருந்து ஒரு விலையுயர்ந்த கார் வெளியில் செல்ல, சித்ரஞ்சன் தங்கள் டீமில் இருக்கும் சிறந்தவரை அனுப்பி அந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்து வரச்சொன்னார்.
அவரும் உள்ளே சென்று நால்வர் இருப்பதாய் சமிஞ்சை செய்தார். அதோடு அவசரம் என்றார். மொத்த போலீஸ் படையும் உள்ளே சென்று அந்த நால்வரையும் துவம்சம் செய்து ஒவ்வொரு அறையாக ஆராய்ந்தனர். பெண்கள் இந்த வீட்டில் இல்லை என்று புரிந்தது. அதுவும் நல்லது என்று நினைத்து வர கடைசி அறையை கண்ட போலீஸ் படை திடுக்கிட்டது. கிலோ கணக்கில் போதைப் பொருள். அனைத்தையும் சீஸ் செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரை வரவழைத்து ஒப்படைத்துக்கொண்டிருந்தார் சித்ரஞ்சன்.
ராகுலுக்கு நெருப்பில் நிற்பது போல் இருந்தது. அவன் துரிதப்படுத்த, ரெண்டாம் இடத்திற்கு சென்ற போலீசாரிடம் விசாரிக்க அங்கே ஒரு முன்னேற்றமும் இல்லை.
பெண் பிள்ளைகள் என்பதால் அவர்கள் கூடுதல் அக்கறை கொண்டு கவனமாக இருந்தனர்.
சித்ரஞ்சன் அங்கே தான் படையுடன் விரைய, அந்த கார் அந்த குடோன் வாசலில் நின்றது. பொருட்கள் கைப்பற்றப்பட்டதால் இனி அதிரடியாக பெண்களை மீட்கலாம் என்று உள்ளே நுழைந்தது காவல்படை.
ஆதியும் பிரவீனும் அவர்களோடு உள்ளே சென்று சுஜியையும் கோதையையும் தேடினர். அங்கிருந்த குண்டர்கள் எல்லாம் ஆளுக்கொரு பக்கம் சிதற, தேடுதல் கடுமையானது.
ஆதி ஒரு வழியாய் ஒரு உட்புற அறையைக் கண்டான். பிரவீனை இழுத்துக் கொண்டு அங்கு சென்று பார்க்க சுஜி கோழிக்குஞ்சு போல் நடுங்கியபடி சுருண்டிந்திருந்தாள். அவளை கண்டதும் பாதி நிம்மதி அடைய, “சுஜி” என்ற அவன் விளிப்பில் “அண்ணா” என்று அவனை அணைத்தவளின் நடுக்கம் ஆதிக்குப் புரிந்தது. இன்னும் அவன் மனம் ‘பூமா பூமா’ என்று அடித்துக்கொண்டிருக்க..
சுஜியை பிரவீனிடம் ஒப்படைத்து விட்டு கோதையைத் தேட விரைந்தான். போலீசார் குற்றவாளியைப் பிடிக்க காட்டிய ஆர்வத்தை பெண்களைக் கண்டறிய காட்ட மறந்தனர்.
ராகுல்,”பூங்கோதை” என்று அலற ஆதிக்கு உயிர் வலி எடுத்தது. சத்தம் வந்த திசையில் செல்ல தலையில் பலமான அடியிடன் ராகுல் தள்ளாடிய படி,”ஆதி ஆதி பூ பூ அங்கே”, என்று ஒரு திசையைக் காட்டினான். பிரவீனையும் சுஜியையும் அனுப்பிவிட்டதால் ராகுலை என்ன செய்ய என்று அவன் யோசிக்க, ராகுல்,” நீ பூவை பாரு. ஐ கேன் மேனேஜ்”, என்று ஆதியை கோதையை இழுத்துசென்ற பக்கம் தள்ளினான்.
விரைந்த ஆதி கண்டது கிளம்பிச்சென்ற அந்த விலையுயர்ந்த காரைத்தான். அவன் உலகமே சுழன்றது. அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் ஆதி தள்ளாடி அங்கிருந்த பேரலில் சரிய… அதனுள் அவன் கேட்ட முனகல் அவனுக்கு உயிர் கொடுத்தது.
அங்கே கோதை அந்த பேரலுக்குள் இருந்தாள்.
ஆம் அவன் பூமா கிடைத்துவிட்டாள்.
அவன் அவசரமாய் ஆம்புலன்ஸூக்கு அழைத்துவிட்டு. கோதையைத் தூக்கியபடி காவலர்களின் வாகனங்கள் பக்கம் விரைந்தான். அங்கிருந்த பிரவீனிடம் ராகுல் விவரம் சொல்லி அவனை அழைத்துவர பணித்துவிட்டு “பூமா பூமா” என்று அவளை தட்டி எழுப்ப முயற்சித்தான்.
ஆம்புலன்ஸ் வந்ததும், சுஜி, கோதை இருவருக்கும் அங்கேயே ஊசி போட்டுவிட்டு, ராகுலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பிரவீன் அவனுடன் துணையாகச் சென்றான்.
இதோ இப்போது இருவரும் உங்கள் முன்னே பத்திரமாய் இருக்கிறார்கள்.
சொல்லிமுடித்த ஆதி ஒரு பெருமூச்சோடு சோபாவில் விழுந்தான். அவனின் அலைச்சலின் சிரமமும் மன அலைக்களிப்பின் ஆழமும் சுந்தருக்கும் கதிருக்கும் புரிந்தது. ஆதரவாய் அவனை இருவரும் தோள் தொட்டனர்.
“ரொம்ப நன்றி ஆதி… “
“மாமா என்ன நீங்க! நான் ஒன்னுமே பண்ணல. பூமா தான் அவ்ளோ ரிஸ்க் எடுத்துருக்கா. அவ எழுந்தா தான் அங்க என்ன பாடு பட்டாள்னு தெரியும், சுஜி இருப்பது மட்டும் அவள் வாசத்தால் உணர்ந்தேன் என்று மட்டும் சொன்னாள்..
அவளுக்குத் தான் எவ்வளோ தைரியம் மாமா! நீங்க பெருமையா பூமா உங்க பொண்ணுன்னு சொல்லிக்கலாம்.”
இதயெல்லாம் கேட்ட தாத்தா ஜோதிலிங்கம், “சரி எல்லாரும் போய் படுங்க. காலையில் பேசிக்கலாம்.”, என்று அனைவரையும் அனுப்பினார்.
இன்பா ராகுலைப் பார்க்கக் கிளம்பிச் சென்றான். ஆதியின் மனதில் கோதை ‘அவன் பூமா’வாய் சிம்மசனமிட்டு அமர்ந்துவிட்டத்தை உணர்ந்தான். ஒவ்வொருவரும் வெவ்வேறு சிந்தனைகளில் அந்த இரவைக் கழித்தனர்.
Adangatha Adigara Adhigara Amazon kindle amudhangalal nirainthen anjuvanna poove Arivoli Audio novel Bakthi special Become a member Future of Plastics How to register Jeyalakshmi Karthik Jeyalakshmi Karthik Novels Membership made easy mushroom dishes new novel rerun story Revolutionary Plastic Short story SundayFundaySeries Tamil Novels WhatIfSeries youtube திருப்புகழ் தேவாரம் பாடல்கள் மனதின் மை ரெசிபி வாசி தீரவே

வாவ், வீரப் பெண்மணி👌👌👌👌
thanks ma
👏👏👏👏👏adi dhool 👏👏👏👏
thank you akka
அமுதங்களால் நிறைந்தேன்..!
எழுத்தாளர்: ஜெயலட்சுமி கார்த்திக்
(அத்தியாயம் – 9)
அட பரவாயில்லையே, நல்லாத்தான் ப்ளான் பண்ணி சுஜி இருக்கிற இடத்தை கண்டு பிடிக்க பூங்கோதை கெத்தோட இறங்குனதும் இல்லாத,
தன் நண்பர்களையும் ஆதியையும் அழகா இணைச்சிக்கிட்டா.
என்னவொன்னு, ஆதி மனசுல அவனோட பூமாவா
சிம்மாசனம் போட்டு உட்காந்தது பூமாவுக்கு தெரிஞ்சா, கோபப்படுவாளா, சந்தோஷப்படுவாளா…
அதான் தெரியலை.
😀😀😀
CRVS (or) CRVS 2797
💕💕💕💕💕