“You cannot escape the responsibility of tomorrow by evading it today.” – Abraham Lincoln

அமுதம் 7
அங்கு காளிரூபிணியாய் நின்றிருந்தாள் பூங்கோதை…
அவள் கண்கள் சிவந்து உதடு துடிக்க ,” யாரை பார்த்து டா அசிங்கமா பேசின??”, அவள் குரலில் தான் எவ்வளவு கோபம்..
சாந்தஸ்வரூபிணியாய் கண்ட கோதையா இவள் என்று ஒரு நிமிடம் ஆதி கூட ஆடிப்போய் விட்டான்.
“ஒருத்தர் மேல அன்பும் அக்கறையும் காட்ட அவங்க நமக்கு உறவா இருக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஆதியை பார்த்த எனக்கு மதிப்பு வந்தது. முதல் முறை அத்தான் என்று அழைத்தால் தான் இன்றும் அப்படியே அழைக்கிறேன். அவரின் லட்சியம் எனக்கு பிடிச்சுது அதுக்கு என்னாலான உதவியை தான் நான் செஞ்சேன். சொல்லப்போன அவரு உன்னோட நண்பன் , நீ தான் அதெல்லாம் அவருக்கு செய்திருக்கணும். இன்னிக்கு வரைக்கும் அவர் என்னிடம் கண்ணியமான முறையில் தான் பழகறார். நீ உன்னோட நண்பனை அவமானப்படுத்துறது கூட உனக்கு தெரியல. நீ எல்லாம் ஒரு ஜென்மம் இல்லன்னு தான் நான் உன்னை கண்டும் காணாம ஒதுங்கி போனேன். நீ என் நடத்தையை தப்பா பேசுற… சீ…” ,என்று அவனை குதறி எடுத்துவிட்டாள்.
அவள் இரவு நேரம் என்றும் பாராமல் வீட்டை விட்டு வெளில் சென்றுவிட்டாள்..
ஆதி அவள் பின்னாலேயே பூமா பூமா என்று கூப்பிட்டபடி வெளியேறினான்.
இப்போது கூடத்தில் தாத்தா,மீனாட்சி முகிலன் மூவர் மட்டுமே இருந்தனர்.
முகிலன் மீனாட்சியைப் பார்த்தான். அவர் தன்னிடம் அவர் மகள் தன்னை அடித்ததற்காய் மன்னிப்பு கேட்பார் என்று அவரை அவன் பார்க்க, அவரோ வெளியில் செல்லும் தன் மகளை பெருமிதம் பொங்க பார்த்து நின்றார்.
“அத்தை உங்க பொண்ணு என்ன காரியம் பண்ணிருக்கா.. நீங்க அவளை ஒன்னும் சொல்லாம போக விட்டுட்டீங்க..”
“அவளை என் மகள் என்னடா சொல்லணும்.?”தாத்தா குரலின் கடினம் முகிலனுக்குள் குளிர் பரவச் செய்தது.
“அவள் என்னை அடிச்சிட்டு போறா தாத்தா”
“அதோட விட்டாளேன்னு போய் வேலையை பார். மறுபடியும் சொல்றேன் பூங்கோதையை வம்பு செய்யாதே.. அவளை பற்றி உனக்கு தெரியாது. பெயருக்கு ஏற்ப பூ போல தான் இருப்பா.. அவளை சீண்டினால் விட மாட்டாள்.. அன்னைக்கே உன்னை எச்சரிச்சேன். நீ கேக்கமா போய்ட்ட.. இனிமே அவள் சாதாரணமா இருக்க மாட்டா பாத்துக்கோ.”,
இரவு உணவைக் கூட தவிர்த்துவிட்டு ஜோதிலிங்கம் தன் அறைக்குள் சென்றார்.
மீனாட்சி முகிலனிடம் ஒரு பார்வை செலுத்தி விட்டு சமயலறைக்குள் நுழைந்தார்.
முகிலன் வெறித்து வாசலை கண்டபடி சோபாவில் அமர்ந்தான்.
‘என்னையாடி கை நீட்டி அறைஞ்ச… உனக்கு உன் அம்மா சப்போர்ட்.. இருங்க டீ… உங்களுக்கு இந்த முகிலன் யார்ன்னு காட்றேன்…’ அரை மணி நேரத்திற்கும் மேல் உக்கார்ந்து பார்த்தான். வீட்டினர் அனைவரும் கூடத்திற்கு வர ஆரம்பித்தனர். ஆனால் கோதையும் ஆதியும் வந்த வழியை காணோம்..
எரிச்சலுடன் மாடியேற போனவனை அருணா சாப்பிட அழைத்தாள்,
“வாங்க முகி, சாப்பிடாம மேல போறீங்க..”
அந்த நிமிடம் அவனுக்கு அன்று அருணா கோதைக்கு சார்பாக பேசியது நினைவில் வர கோதையின் மீதிருந்த கோபம் இப்போது அருணாவின் மேல் திரும்பியது.
இருடி இன்னிக்கு உன்னை எங்கண்ணன் கிட்ட அடி வாங்க வைக்கறேன் பாரு என்று துவேஷத்துடன் அருணாவைப் பார்த்து, “உன் வேலையை பாரு. எனக்கு சாப்பிட தெரியும்”, என்று கோதை மேல் இருந்த கோவத்தை அருணா மீது காட்ட, குடும்ப உறுப்பினர்கள் கடுப்பானார்கள்.
அவர்களுக்கு இவன் கோதையிடம் அறை வாங்கியது தெரியாதே… அதனால்..
“டேய் அண்ணின்னு மரியாதை இல்லாம பேசற”, என்றார் பார்வதி
“பாட்டி அவங்க புருஷனை மட்டும் கவனிக்க சொல்லுங்க.. வீட்ல இருக்கற எல்லா ஆம்பளைங்களையும் கவனிக்க தேவையில்லை..”
அகிலன் அமைதியாய் எழுந்து முகிலன் அருகில் வந்து, “அண்ணின்னா இன்னொரு அம்மா.. அம்மாவை அடுத்த ஆணோட வச்சு தப்பா பேசுவியா? இங்க பாரு முகில் நீ மனசுல ஏதோ வச்சி தான் பேசற. என்னன்னு சொல்லு.”
அகிலனின் இந்த பொறுமை பெரியவர்களுக்கு இல்லை.. அவரவர் முறுக்கிக்கொண்டு முகிலனை நெருங்க, அவர்களின் மனைவிமார்கள் அவர்களை தடுத்தனர்..
கதிர் , “டேய் அகிலா அவன் பேசுனா பேசிச்சுக்கு நீ இவ்ளோ நிதானமா பேசுற.”
“சித்தப்பா பொறுங்க. நீ சொல்லு முகி, நீ அருணாவை ஏன் அப்படி சொன்ன..”
“ரெண்டு நாள் முன்னாடி உன் பொண்டாட்டி அந்த ஆதி கூட முல்லைபந்தல் கிட்ட சிரிச்சு சிரிச்சு வெக்க பட்டு பேசிட்டு இருந்தா. இல்லன்னு அவள சொல்லச்சொல்லு பாக்கலாம்.. “
அருணா கண்களில் நீருடன், “இல்ல அத்தை.. “
ஆனால் அகிலோ,” நீ எப்படி பார்த்த..”
சுந்தர் கோபத்துடன்.. ,”அகிலா விசாரணை நடத்தி நம்ம வீட்டு பொண்ணை நீ கஷ்டப்படுத்தாத..”
“இருங்க மாமா.. நீ சொல்லு முகி.”
“என் ரூம் பால்கனியில் இருந்து..”
“அப்போ நீ சரியா தான் பார்த்திருக்க”, என்றவுடன் முகிலன் வெற்றி புன்னகையுடன் அருணாவை பார்த்தான்
அதில் ‘உன்னை மாட்டிவிட்டுட்டேன் பார்த்தியா’ என்ற கேலி இருந்தது..
லட்சுமிக்கு மனமெல்லாம் வெந்தது தன் வீட்டு மருமகளை தன் வீட்டு பையன் தவறாக சொல்லுவதும் அதை மற்றொருவன் ஆமோதிப்பதும்.. அவரால் தாளமுடியாது போக, “அகிலா நம்பாத டா நம்ம அருணாவ உனக்கு தெரியாதா”, என்று கண்ணீர் உகுத்தார்.
ஆனால் அகிலானோ, “சித்தி அவன் சரியாத்தான் பார்த்திருக்கான் ஆனா முழுசா பார்க்கவும் இல்லை தெரிஞ்சுகவும் இல்லை. அன்னைக்கு அங்க ஆதி, அருணா மட்டும் இல்ல. நானும்,கோதையும் கூட இருந்தோம். பந்தல் மறச்சத்தால அவனுக்கு தெரியல. என்ன அவன் பார்த்தது என்னன்னு பக்கத்துல வந்து விசாரிச்சிருந்தா நாங்க இருந்தது அவனுக்கு தெரிஞ்சிருக்கும். விடுங்க சின்னவன் தான. தெரியாம பேசிட்டான்.
அருணா என் தம்பிக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். நீ ரூமுக்கு போ முகி. “,என்று அவனை அனுப்பி வைத்தான்.
முகிலனும் இதற்கு மேல் நம் பேச்சு இங்கு செல்லாது என்று மாடிக்கு விரைந்தான்.
அவன் மேலே சென்றதும் மொத்த குடும்பமும் அகிலனை சுற்றி நின்று அவனை திட்டி தீர்த்தது..
அகிலன் மிகவும் பொறுமையாக, “என் மனைவி பத்தி எனக்கு தெரியும், உன் வேலைய பாருன்னு நான் சொல்ல எவ்வளவு நேரம் ஆகிருக்கும் சொல்லுங்க. கல்யாணம் ஆகாத பொண்ணை தப்பா சொன்னா நாம அய்யோன்னு நினைக்கனும். ஆனா அப்போ கூட நல்லா விசாரிக்கணும்.என் அருணாவ பத்தி எனக்கு தெரியும். ஆனாலும் அவன் எதனால் இப்படி சொல்றான்னு நான் இன்னிக்கு தெரிஞ்சுக்காம போய்ட்டேன்னா, நாளைக்கு எனக்கே தெரியாம அருணா ஆதியோட நின்னு பேசும்போது முகில் சொன்னது நினைவுக்கு வரும். அவளை நான் நம்பினாலும் மற்றவர் பார்வைக்கு அவள் தவறாகப்படலாம். இதே இந்த காரணத்தால் என்று அவன் சொன்னதும் நான் என் மனைவியை நியாய படுத்தி நிரூபித்துவிட்டேன். இனி தெரியாமல் கூட அவனோ, நீங்களோ,ஏன் நானே கூட அருணாவை தவறாக நினைக்க முடியாது. நம் பெண்கள் மேல அவதூறு வரும்போது உணர்ச்சிவசப்பட்டு பேசறத விட சிந்திச்சு பேசிட்டா பெண் நாளைக்கு கஷ்டப்பட மாட்டாள். இன்னிக்கு வேணும்னா நாம அவளுக்கு சப்போர்ட் பண்ணலாம். மனுஷங்க மனசு மாறும்போது நாமளே நாளைக்கு அவள தப்பா பேசுற சூழ்நிலை உருவாகும். அதும் இல்லாம பேசுபவன் என் தம்பி, நானும் சட்டுனு வார்த்தையை விட்டுட்டா குடும்பம் என்ன ஆகும்? எங்கள் தலைமுறையில் நான் மூத்தவன் அந்த பொறுப்பும் எனக்கு இருக்கே..அதனாலதான் அவனுக்கும் புரிய வச்சு , எல்லாருக்கும் என் மனைவி மேல் விழுந்த பழிசொல்லுக்கு பதிலும் தந்துட்டேன். இனி யாரும் என் அருணாவை தப்பா பேச முடியாதுல்ல.. “,என்று பிரசங்கமே நடத்திய அகிலன் அருணாவை அணைத்தபடி நின்றான்.
அருணா ஹால் என்றும் பாராமல், “ஐ லவ் யு அகி”, என்று அணைத்துக்கொண்டு அழுதாள்.
பெரியவர்களுக்கு அவர்களின் நிலை புரிந்தது. அகிலனை மனதால் மெச்சிக்கொண்டவர்கள், அமைதியாய் கலைந்து சென்றனர். அவர்களுக்கு தெரியவில்லை இன்று அகிலன் சொன்னதை இவர்கள் அனைவரும் மறந்து ஒருநாள் என்னென்ன பேசப்போகிறார்கள் என்று..
கோதையின் பின்னால் ஓடிய ஆதி,”நில்லு பூமா”, என்று அவள் கை பிடித்து தடுக்க அவளோ,”விடுங்க அத்தான்.. இன்னிக்கு அவனை ஏதாவது செஞ்சிருப்பேன். அவன் மேல தமயந்தி அத்தைக்கு நிறைய பாசம் இருக்கு. அவங்க மனசு வருத்தப்பட கூடாதுன்னு தான் நான் அவனை விட்டுட்டேன். அங்க இருந்தா அவனை… அப்படியே…”
“பூமா.. உனக்கு இவ்வளவு கோவம் வருமா டா.”
“என்ன அத்தான் அவன் என்னை பத்தி தப்பா பேசறான் அப்போ எனக்கு கோவம் வராதா?”
“இல்லடா இதனை நாள் உன்னை அன்பா மட்டுமே பார்த்துட்டு உன் கோவம் எனக்கு புதுசா இருந்தது. அதும் இல்லாம… கிட்ட வா..”, என்று அவளை அருகில் அழைத்து காதருகில், நான் ரொம்ப பயந்துட்டேன்..”, என்று கண் சிமிட்டினான்.
கோதை தன் கோவமெல்லாம் மறந்து கலகலவென சிரித்துவிட்டாள்.
“போங்க அத்தான்.. சரி நான் உங்களை ஒண்ணு கேப்பேன்.. உண்மை சொல்லுவிங்களா?”
“கேளு பூமா..”
“நீங்க எப்படி அவனுக்கு பிரென்டானிங்க? உங்க குணத்திற்கும் அவனுக்கும் சம்மந்தமே இல்லையே.. அவனுக்கு என்னை தெரியாது,வந்ததும் அவனை நான் ஒரு மாதிரி பேசிட்டேன் அதனால தப்பா பேசறான் அப்படின்னு வச்சிக்கிட்டாலும் நீ அவனோட பிரென்ட், உன்னை போய் எப்படி தப்பா பேசறான்.”
“நீ கோபப்பட மாட்டன்னா சொல்லு நான் உண்மையை சொல்றேன்.”
“அடடே ஏதோ களவாணித்தானம் தெரியுதே அத்தான் உங்க கண்ணுல… சொல்லுங்க சொல்லுங்க”, என்று இவ்வளவு நேரம் நின்று பேசிய தெருவில் சற்று தள்ளி இருந்த திட்டில் ஏறி அமர்ந்தாள்..
ஆர்வமாக,” சொல்லுங்கன்றேன்..”.
“அது அவன் என் கிட்ட பிரேன்ட்ஸிப் வச்சுக்கல நான் தான் அவனை தேடி தேடி போய் பிரென்ட் பிடிச்சேன்.”
“அடகொடுமையே.. ஏன் உங்க டேஸ்ட் அவ்ளோ மட்டமா போச்சு”
“அது.. சொன்னா சிரிக்கக் கூடாது..”
“அத்தான் பர்ஸ்ட் மேட்டருக்கு வாங்க..”
“அன்னைக்கு எனக்கு மனசு சரி இல்லை பூமா. அம்மாகிட்ட பேசணும் போல இருந்தது ஆனா அம்மாவால என்னோட பேச முடியாது.எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.அப்போ தான் நான் இருந்த அதே கஃபேல பக்கத்து டேபிளில் முகில் இருந்தான். அப்போ.. “என்று இழுக்க..
“அத்தான் பில்டபை குறைச்சுட்டு நச்சுன்னு நாலே வரில சொல்லுங்க எனக்கு பசிக்கிது, வீட்டுக்கு போகணும். பிளாஷ்பேக்க ஷார்ட்டா முடிங்க.”
அவளை பொய் கோபத்துடன் முறைத்த ஆதி, “சரியான சேட்டை, அவன் அன்னைக்கு லச்சும்மா கூட வீடியோசாட் பண்ணிட்டு இருந்தான்.எனக்கு என் அம்மா குரல் கேட்டது போல இருந்தது.. கொஞ்ச நேரத்துல உங்க மொத்த குடும்பமும் அவனுடன் பேச , எனக்கு ஏக்கம் வந்தது. இவனுடன் சிநேகம் வைத்தால் இவன் குடும்பத்தின் அன்பு கிடைக்கும் என்று தான் பல கஷ்டங்களுக்கு அப்பறம் அவனுக்கு நண்பனானேன். ஆனாலும் அவனைவிட எந்த விதத்துலயும் உயர்வாக இருந்தா அவனுக்கு பிடிக்காது. அதை தெரிந்த பின்னால் அவன் முன்னாடி நான் என்னை பெருசா காட்டிக்காம இருக்கப்போய்த் தான் இன்னிக்கு உங்க எல்லாரோட அன்பும் எனக்கு கிடைத்தது.”
“நீங்க சொல்றத நான் நம்புறேன். ஆனாலும் எனக்கு அவன் மேல செம்ம கோவம்.”
“இங்க பாரு பூமா.அவன் சில விஷயங்கள்ள மட்டும் கொஞ்சம் மோசம். நீ அவனை அவமானப்படுத்தினதா அவன் நினைச்சிருப்பான்.அவன் உன்னை ஏதாவது செஞ்சு அவமதிக்க நினைப்பான். நீ கவனமா இருக்கணும்.புரியுதா.. இன்னும் 2 நாள்ள நான் ஊருக்கு போயிடுவேன். நீ தான் உன்னை பார்த்துக்கும். புரியுதா பூமா.”
“புரியுது அத்தான். நீங்க கவலைப்பட வேண்டாம். அவன் என்கிட்ட வாலட்டினா அவன் அவ்ளோதான்”, என்றாள் பெருமையாய்.
ஆதியும் சிரித்துக்கொண்டான். அவர்கள் முகிலனின் நிஜமுகத்தில் பாதி கூட அறிந்திருக்க வில்லை. ஒருவேளை அறிந்திருந்தால் பின்னாளில் வரும் விபரீதங்களை தவிர்த்திருக்கலாம்.

பாம்புக்கு பால் வார்க்காதீங்க… இவன் ரொம்ப டேஞ்சர் பார்ட்டியா இருக்கான்.
அமுதங்களால் நிறைந்தேன்..!
எழுத்தாளர்: ஜெயலட்சுமி கார்த்திக்
(அத்தியாயம் – 7)
அடேயப்பா…! இந்த முகிலனைப் பத்தி ஆதி பில்டப் கொடுக்கும் போது அத்தனை பெரிய அப்பாடக்கரா இவன்னு தான் தோணுது.
அப்படி பார்த்தா, இந்த ஆதி கூட ஏதோவொரு திட்டத்தோடத் தானே அந்த வீட்டுக்குள்ளயே நுழைஞ்சிருக்கான். அப்படிப் பார்த்தா முகிலன் ஆதி ரெண்டு பேருக்கும் எந்த வித்தியாசமும் தெரியலையே..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
👌👌👌👌👌