Amudham 6

“A man should never neglect his family for business.” – Walt Disney

Amudham

அமுதம் 6

இந்திரனும், அகிலனுக்கு அறுவடை நேரம் என்று பிசியாக இருக்க, காவல்துறை கமிஷனர் சுந்தரும், இணை கமிஷனர் கதிரும் ஒரு குற்றவாளியின் மிராட்டல்களை சமாளிக்க பிசியாக, ஷியாம் நண்பர்களுடன் மெடிக்கல் கேம்ப் சென்றுவிட்டான்.கோதை, வெண்மதி கல்லூரிக்கும், சுஜி பள்ளிக்கும்,ஆதி தொழிற்சாலை பயிற்சிக்கும் சென்றுவிட காலையில் தமயந்தியும் அருணாவும் பள்ளிக்கு சென்றால் திரும்ப மாலை 7 ஆகும்.. வீட்டில் எப்போதும் போல மீனாட்சியும் லட்சுமியும் வீட்டு வேலைகளில் பிஸியாக காமாட்சி தாத்தா பாட்டியுடன் கோவிலுக்கு சென்று திரும்பியபோது மணி 7. முகிலன் அறையை விட்டு வெளியில் வரவே இல்லை.
மாலை வீடே வெறிச்சோடி இருந்தது.

லட்சுமி ஏதோ மனப்போராட்டத்தில் இருந்தார். மீனாட்சி என்னவென்று கேட்க,
“ரெண்டு நாளா உங்க தம்பி முகமும், எங்கண்ணன்(சுந்தர்) முகமும் சரி இல்லை அண்ணி.. பயம்மா இருக்கு. எப்போதும் செல்லும் கையுமாவே திறியராங்க. வாசல்ல எப்பயும் ஒரு சென்ட்ரி தான் இருப்பார். இப்போலாம் 3 பேரு இருக்காங்க. என்னமோ சரி இல்லன்னு என் மனசு சொல்லிட்டே இருக்கு அண்ணி.”

“விடு லட்சுமி. எல்லாரும் வீடு திரும்பற நேரம் ஆகுது. எல்லாரும் வந்துடுவாங்க. இன்னிக்கு அவர் கிட்ட நான் பேசுறேன் மா. நீ மனச போட்டு உழப்பாதே..
இல்லனா வா நாமளும் கோவிலுக்கு போய்டு வருவோம்.”

“இல்ல அண்ணி. வேண்டாம். வேலை இருக்கு.”

“வேலை என்னைக்கு தான் இல்லை லட்சுமி. இல்லனா வா தோட்டத்துல கொஞ்ச நேரம் நடந்துட்டு, பூ பறிச்சிட்டு வரலாம். மனம் கொஞ்சம் தெளிவாகும். “

“இருக்கட்டும் அண்ணி.”

தான் என்னதான் இந்த குடும்பத்தை தாங்கினாலும், மீனாட்சி வெளியூரிலிருந்து இங்கு வந்த பின்பு தான், தன்னை தாங்கவும், தனக்கு ஆறுதலாக தோள் கொடுக்கவும் ஒருவர் இருப்பது எவ்வளவு இதமானது என்று லட்சுமிக்கு புரிந்தது. மீனாட்சி போல ஒரு நாத்தனார் கிடைத்தது வரம் என்று நினைத்தார் லட்சுமி.

பெண்கள் இயந்திரம் போல நாள் முழுவதும் கூட ஓடி வேலை செய்வார்கள் அதற்கு அவர்களின் எரிபொருள் குடும்பத்தாரின் அன்பு மட்டுமே. அது சரிவர கிடைக்காத பெண்கள் தான் ஒன்று முடங்குகிறார்கள் இல்லை தவறான சிந்தனைக்கு செல்கின்றனர். யாரேனும் ஒருவர் அன்பு காட்டினாலும் பெண்ணின் சக்கரம் முழு குடும்பத்திற்காகவும் சுழலும்.

அன்று தொழற்சாலை பயிற்சி முடிந்து வந்த ஆதி ஹால் சோபாவில் சோர்வுடன் அமர்ந்திருந்தான். அவனுக்கு சற்று மலைப்பாக கூட இருந்தது. ஒரு தொழிலை முதல் அடியிலிருந்து ஆரம்பிப்பது என்பது கடினம் தான் என்பதை அவன் உணர்ந்திருந்தாலும், அதை செயல்முறை படுத்துதலில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் இத்தனை நாட்களாய் அவனுக்கு தெரியவில்லை. கோதையின் யோசனையின் படி தொழிற்சாலைகளில் நேரடி பயிற்சியின் போது அவனால் சில சிக்கல்களுக்கு தீர்வு காண்பது முதலாளி மட்டும் இன்றி அதற்கு ஒத்துழைக்கும் நம்பிக்கையான சிலர் வேண்டும் என்பது புரிந்தது.. ஏதேதோ யோசித்து இறுதியில் இதையெல்லாம் தன்னை யோசிக்க வைத்த கோதையிடம் வந்து நின்றது.
அவள் தான் எத்தனை அன்பானவளாக இருக்கிறாள் கோபமாக கூட அவள் பேசி இதுவரை தான் காணவில்லையே.. சிரித்த முகமும் அவள் குண்டுக் கன்னமும்..அவன் சிரித்த படி யோசித்திருக்க..
காமாட்சி பாட்டியுடன் பேசியபடி வந்தார். அவரின் கண்கள் ஆதியை யோசனையாய் வருடிச் சென்றது. லட்சுமி அனைவருக்கும் சாப்பிட பலகாரம் எடுத்து வந்தார்.

ஆதி சலுகையாய் ,”லச்சு மா நான் 2 டேஸ்ல கிளம்பலாம் என்று இங்கு வந்தேன். வந்தே 1 வாரம் ஆகிவிட்டது.. உங்களை பார்த்துதான் என் அம்மா நியாபகம் அதிகம் இல்லாமல் இங்கேயே திரியறேன். போய் எங்கம்மாட்ட சொல்லுவேன் நீ எப்பயும் தங்கச்சியை தான கவனிப்ப என்னை கவனிக்க லச்சும்மா இருக்கங்கன்னு சொல்லுவேனே..”

“உன் அம்மா என்னோட சண்டைக்கு வர மாட்டாங்க தான ஆதிப்பையா”

“சேச்சே.. அப்பாடா தொல்லை விட்டுச்சுன்னு ஜாலியா என் தங்கச்சி கூட வெளில போயிடுவாங்க.”

“ஏன் ஆதி அவங்க உன்னோட டயம் செலவழிகலன்னு உனக்கு வருத்தமா.. “

“அதெல்லாம் இல்ல ம்மா. அவங்க நிலைமை அப்படி. எப்போது டா மூச்சு விட வெளில போலாம்ன்னு அம்மா நினைகற அளவுக்கு எங்க குடும்பம் அவங்கள படுத்தி வச்சிருக்கு. குடும்பம்ன்னு கூட சொல்லக்கூடாது. ஒரே ஒரு ஆள். சரி விடுங்கம்மா. எனக்கு என் அம்மான்னா ரொம்ப பிடிக்கும் ஆனா சேர்த்து தான் இருக்க முடியாத சூழ்நிலை. இருக்கும்போது அங்கு நடக்கும் விஷயங்களை என்னால் சகிக்க முடியாது நான் கோவப்படுவேன். அம்மா என்னை சமாதானம் பண்ண முடியாம திட்டி அனுப்பிவிட்டுடுவங்க.”

“சரி இப்போ தொழில் செஞ்சு அவங்களோட தான இருக்க போற.”

“இல்லம்மா என் வீட்ல எல்லாரும் கோயம்புத்தூருல இருக்காங்க.தாத்தா வீடும் தான். அதுனால தான் ஊட்டில இருக்கற எங்க எஸ்டேட்டை பாத்துட்டு டீ பாக்டரி வச்சுக்கலாமுன்னு பிளான் போட்டேன். அங்க போனதுக்கு அப்பறமாவது அம்மா அப்பா தங்கச்சி என்னோட வந்துட்டா நல்ல இருக்கும்.”

“இப்போ எல்லாரும் எங்க இருக்காங்க.”

“என் அம்மாவோட அப்பா வீட்ல. “

“நீ ஊட்டிக்கு போய் கூப்பிட்டா வந்துடப்போறங்க அப்பறம் எதுக்கு கவலப்படுற.”

“இல்லம்மா வரமாட்டாங்க.. அட்லீஸ்ட் அங்க அவங்க சந்தோசமா இருந்தா கூட நான் கவலைப்பட மாட்டேன். அவங்க ஒன்னும் அங்க சந்தோசமா ஆசைப்பட்டு இருக்கலை. என் தாத்தாக்காகவும் மாமாக்காகவும் அவரோட பையனுக்காகவும் தான் அங்க இருக்காங்க. நான் கூப்பிட்டாலும் மாமாவ விட்டு வர மாட்டாங்க.”

“சரி நீ அங்க அவங்களோட இருக்கலாமே ஆதி”

“ஐயையோ அந்த ராட்சசி இருப்பாளே.. அவளோட தினம் ஒரு போராட்டம் பண்ணி அந்த வீட்ல வாழறதை விட எங்கயாச்சும் போய் சாமியாராய்டலாம்”

“யாரை நீ ராட்சசின்னு சொல்ற”

“என் மாமா பொண்டாட்டியத் தான்.”

“அவ்ளோ பெரிய அப்பாடக்கரா உங்க அத்தை நீ இவ்ளோ மிரள்ற..”, என்றபடி வந்தாள் கோதை.

“அய்யே, அப்படிலாம் இல்ல பூமா. அதுதான் எல்லா கேட்ட சக்திகளுக்கும் காப்பிரைட்ஸ் வாங்கின ஒரு ஜென்மம். ஐயோ அது பேர எடுத்தாலே எனக்கு கடுப்பா வருது.”

“ஏய் அத்தான் நீ எவ்ளோ டலேண்ட் நீ போய் ஒரு லேடிக்கு இவ்ளோ பில்டப் குடுக்கற.”

“உனக்கு சொன்னா புரியாது பூமா.. வந்து பாரு தெரியும்.”

“வரேன். வந்து அந்த ராட்சசி கொட்டத்தை அடக்கி உன் அம்மா உன்னோட அன்பா நேரம் செலவழிக்க வைக்கறேனா இல்லையா பாரு”, என்று சொன்னாள் கோதை.

பின்னாளில் செய்யப்போவதைத் தான் சொல்கிறோம் என்பதை உணராமல் ஆதியை சமாதானம் செய்து கொண்டிருந்தாள் கோதை.

ஆதி கோயம்புத்தூர் என்று சொன்னதும் விலுக்கென்று திரும்பிய காமாட்சி, அதன் பின் அவன் பேசியதை அனைத்தையும் கேட்டவளுக்கு , சில சந்தேகங்களும் பல கேள்விகளும் முளைத்தன.

ஆதியை நெருங்கி,” உன் அம்மா பெயர் என்ன “,என்று காமாட்சி கேட்டிட.

அதுவரை சிரித்த முகத்துடன் கோதையிடமும் லட்சுமியிடமும் பேசியவன், கடினமான முகத்துடன் “அன்னபூர்ணேஸ்வரி”. என்று சொல்லிவிட்டு வேகமாக மாடியேறினான்.

காமாட்சி சிலையென சமைந்தாள்.

அறைக்கு வந்த ஆதிக்கு இன்னும் முகம் கடினமாகவே இருந்தது. அவனால் என்ன முயன்றும் காமாட்சியிடம் இயல்பாய் பேச முடியவில்லை.
இதெல்லாம் நடக்கும் என்று அறிந்து தானே அவன் இங்கு வந்தான். இருந்தும் அந்த சூழ்நிலையில் அவனால் கடினப்படாமல் இருக்க முடியவில்லை.
இங்கு வந்து இந்தக் குடும்பத்துடன் பழகி சில விஷயங்களை தெரிந்துகொள்ளத் தானே தன் குணத்திற்கு சற்றும் பொருந்தாத முகிலனிடம் நட்பு பாரட்டியதும் அவன் விலகிச் சென்றாலும் தானே வலிய சென்று பழகியதும் அவனுடன் அறையை பகிர்ந்துகொண்டதும்.. இதற்குத்தானே..

ஆனாலும் காமாட்சியை காணும் நேரம் அவன் நெஞ்சில் எரிமலையின் சிதறல்கள் தான். அவனால் அவர்களை நேருக்கு நேர் காணக்கூட முடியவில்லை.

ஆரம்பத்தில் ஆதி மொத்த குடும்பத்தையுமே தவறாக நினைத்து தான் வந்தான். ஆனால் இங்கு உள்ளவர்களின் அன்பும், அக்கறையும் அனுசரணையும்.. அவன் நினைத்தது போல் இல்லை என்று உணர வைத்தது. அதனால் எந்த விஷயங்களும் தனக்கு தெரிய வேண்டாம் என்றுதான் 2 நாட்களில் கிளம்பிவிட நினைத்தான். ஆனால் கோதை, லட்சுமி, மீனாட்சி என்று அவன் உள்ளம் பலர் அன்பால் நெகிழ்ந்து போனது. அதனால் வந்த நோக்கத்தை தூர எறிந்துவிட்டு தன் நண்பன் குடும்பம் என்றே பாவிக்கலானான்.
நெருடலெல்லாம் காமாட்சியோடு மட்டுமே நிற்கிறது.

ஒருவாறு தன்னை சமன்படுத்திக்கொண்டவன்.இரவு உணவுக்கு கீழே வந்தான். அங்கே தாத்தா மட்டுமே இருந்தார். அமைதியாய் தாத்தா பக்கத்தில் அமர்ந்தான். தாத்தாவின் கண்கள் அவனை வாஞ்சையாய் வருடியது. அவரால் அவனிடம் எதையும் வெளிப்படையாய் பேச முடியவில்லை. இருந்தும் ,”ஈஸ்வரா நீ ரொம்பவும் புத்திசாலி அதனால் தான் நீ இவ்ளோ அமைதியா இருக்க. நீ நல்லா இருப்ப டா கண்ணா”, என்றார்.

ஆதிக்கு பதறிவிட்டது. அவர் தன்னை ஈஸ்வரா என்று அழைத்ததுமே தன்னை இவர் கண்டுகொண்டார் என்பது ஒருபுறமும் ஐயோ இவர் சொல்லிவிட்டால் இந்த குடும்பத்தின் அன்பு பறிபோகுமே என்ற கவலை மறுபுறமும் சூழ..

“தாத்தா.. “

“எனக்கு தெரியும் ஈஸ்வரா.. விடு. எல்லாம் ஒருநாள் சரியாகும். என்ன.. சிலதை என்றுமே சரிசெய்ய முடியாதபடி சிலர் செய்துட்டாங்க.. அதுக்கு நாம ஒன்னுமே செய்ய முடியாது”, என்று அவன் தலையை தடவினார். ஆதி அவர் மடியில் படுத்துக்கொண்டான்.

அப்போது முகிலன் மாடியில் இருந்து இறங்கி வந்தான். அவன் பார்வை ஆதியின் மீது எரிச்சலாய் விழுந்தது.

“ஏய் ஆதி எழுந்திரு. இதென்ன மனேர்ஸ் இல்லாம படுத்திருக்க நடுவீட்டில..”

ஆதி எழுந்துகொள்ளப் போனான்.

“நீங்க படுங்க ஆதி அத்தான். அது நம்ம தாத்தா.. இது நம்ம வீடு .. நாம என்ன வேணாலும் பண்ணலாம். இதுல மனேர்ஸ் எங்க இருந்து வருது மிஸ்டர் முகிலன்?”, என்று ஆதியிடம் ஆரம்பித்து முகிலனிடம் முடித்தாள் கோதை.

“யூ.. என்னை நீ சீண்டிட்டே இருக்க.. இட்ஸ் நாட் குட் பார் யூ.”

“அட அமெரிக்கா… நான் உன் வழிக்கு வரவே இல்லை. நீ ஆதி அத்தானை சொன்னதால் தான் வந்தேன்.”

“அவன் உனக்கு அத்தானா??”, என்று கேட்டுவிட்டு.. “மீனா அத்தை… “,என்று வீடே அதிர கத்தினான்.

மீனாட்சி என்னவோ ஏதோ என்று பதட்டத்துடன் வர

“என்ன பொண்ணு வளர்த்து வச்சிருக்கிங்க. போற வரவனையெல்லாம் அத்தான்னு ஈஷிட்டு அலையரா”

அவன் சொல்லிமுடிப்பதற்குள் அவன் கன்னத்தை ஒரு கை பதம் பார்த்திருந்தது.


5 thoughts on “Amudham 6

  1. அமுதங்களால் நிறைந்தேன்..!
    எழுத்தாளர்: ஜெயலட்சுமி கார்த்திக்
    (அத்தியாயம் – 6)

    நல்ல வாங்கிக்கட்டும். இதை முதல்லயே செஞ்சிருக்கணும்.
    செய்யாததாலத்தான் இப்படி கண்டபடி பேசறான், இஷ்டத்துக்கு நடந்துக்குறான்.

    ஆதி காமாட்சியோட புள்ளையோ…? அப்படின்னா, பூமாவுக்கு உறவால கூட அத்தான் ஆகுறானோ..?

    😀😀😀
    CRVS (or) CRVS2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!