பக்தி ஸ்பெஷல் – திருப்புகழ்

பாடுவோம் அவன் பாடலை!

thirupugal

தமிழ் கடவுள் முருகன் பற்றி பேச வேண்டுமென்றால் பேசிக்கொண்டே இருக்கலாம். திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் என்பார்கள். அப்படிப்பட்ட திருக்கடவுளின் திருப்புகழ் பாடவும் அவனை எண்ணி எண்ணி எண்ணத்தில் முகிழவும் திரு. சிதம்பரநாதன் அவர்களின் குரலில் ஒரு திருப்புகழ் இதோ!

பாடல் :

இருவர் மயலோ அமளி விதமோ
எனென செயலோ …… அணுகாத

இருடி அயன்மா லமர ரடியா
ரிசையு மொலிதா …… னிவைகேளா

தொருவ னடியே னலறு மொழிதா
னொருவர் பரிவாய் …… மொழிவாரோ

உனது பததூள் புவன கிரிதா
னுனது கிருபா …… கரமேதோ

பரம குருவா யணுவி லசைவாய்
பவன முதலா …… கியபூதப்

படையு முடையாய் சகல வடிவாய்
பழைய வடிவா …… கியவேலா

அரியு மயனோ டபய மெனவே
அயிலை யிருள்மேல் …… விடுவோனே

அடிமை கொடுநோய் பொடிகள் படவே
அருண கிரிவாழ் …… பெருமாளே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!