
அமுதம் 46
ஆதிக்கு மனம் பரபரப்பாக இருந்தது. உடனே பூமாவைக் காண ஆவல் எழுந்தது. அது இயல்பாக கணவனுக்கு மனைவி மேல் வரும் காதலையும் தாண்டி, அவள் தனக்கு ஏதோ சர்ப்ரைஸ் என்று சஸ்பென்ஸ் வைத்தால் ஒரு உந்துதல் வர, மனைவியைக் காணும் ஆசையில் எஸ்டேட் பங்களா நோக்கி விரைந்தான். ஆனால் போகப் போக மனம் ஒரு வித சஞ்சலத்துக்கு ஆளானது.
எஸ்டேட் வாயிலுக்கு கொஞ்ச தூரம் முன்னாலே ஏதோ ஒரு வண்டி கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக வர, தன்னை இடித்துவிடாமல் காத்து காரை சாலையோரம் நிறுத்தினான். மனம் துடிக்கத் தொடங்கியது. உள்ளே ஆழ்ந்த வலி எழ அதன் அர்த்தம் உணர முடியாத குழப்பமான சூழலில் இருந்தான்.
தன் மனதை முயன்று ஒருநிலைப்படுத்தி எஸ்டேட் நோக்கி விரைந்தான். வாயிலில் செக்யூரிட்டி இடம் காலியாக இருக்க, காரின் வேகத்தை குறைத்து சுற்றும் முற்றும் பார்த்தபடி மெதுவாக முன்னேறினான். நூறு அடி வரை எந்த பாதுகாவலரும் கண்ணுக்குத் தென்படாமல் போக, உடனே செக்யூரிட்டி நிறுவனத்திற்கு அழைத்தான்.
“என்ன இன்னிக்கு எஸ்டேட் வாசலில் யாரும் பாதுகாப்புக்கு இல்ல?”
“இல்லயே சார். இன்னிக்கு இரண்டு பேர் பாதுகாப்புக்கு இருக்காங்களே?”
“என்ன ரெண்டே பேர் தானா? ஏன் நான் உங்களுக்கு ஏதும் பேமெண்ட் பாலன்ஸ் வைத்திருக்கிறேனா?”
“ஐயோ… இல்லை சார். இன்று சாந்திநிலையத்தில் கோதை மேடம் மட்டும் தான் இருக்காங்க. அவங்க ஒருத்தர் தானே என்று ரெண்டு செக்யூரிட்டி தான் அலாட் பண்ணினோம். மத்தவங்க எல்லாரும் வசந்த இல்லத்தில் இருக்காங்க. அங்க டயிட் செகியூரிட்டி குடுத்திருக்கோம் சார்.”
“அறிவு இருக்கா சார் உங்களுக்கு? ஆபத்தே கோதைக்கு தான். அவளுக்கு செகியூரிட்டியை குறைக்கிற நல்ல ஐடியாவ உங்களுக்கு யார் குடுத்தா? உங்களை நம்பி விட்டுட்டு போனா, இங்க நீங்க சொன்ன ரெண்டு பேரும் இல்ல. ஒருவேளை உள்ளேயும் அவங்க இல்லன்னா, நான் உங்க நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டியதா இருக்கும். மைண்ட் இட்.”
கோபத்தில் உருமியவன், வேகமாக காரில் ஏறி வீட்டின் வாயிலை நோக்கிச் செலுத்தினான்.
வாயிலிலும் பாதுகாவலர்கள் இல்லை. வேகமாக வீட்டிற்குள் செல்ல, வீட்டின் பொதுவான இடங்களில் பூமா இல்லை.
“பூமா… பூமா…” அழைத்தபடி வீட்டின் ஒவ்வொரு அறையாகத் தேட, அவள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
“பூமா… உன் அத்தான் பாவம் இல்லையா? நீ இப்படி விளையாடுறியே?’
பதில் இல்லை.
“பிளீஸ் பூமா. சர்ப்ரைஸ் பண்றேன்னு ஒளிஞ்சு விளையாடுறியா செல்லம்மா? பிளீஸ் மா… வா”
என்று அந்த பிரதேசத்திலே இல்லாதவளை தன்னுடன் விளையாடுகிறாள் என்று நினைத்து பேச, அந்த வீட்டின் அசாத்திய அமைதி அவனை பயம் கொள்ளவைத்தது.
“பூமா… பூமா…” எனும் அவன் குரல் மெது மெதுவாக தன் ஆளுமை, அன்பு, விளையாட்டுதனம் விட்டு கவலையாக ஒலிக்கத் தொடங்கியது. அவளின் மொபைலில் அழைக்க அதுவோ கீழே இருக்கும் அறையில் ஒலித்தது.
மூச்சு சற்று சீராக, வேகமாக படியிறங்கி அந்த அறைக்கு வந்தால், மொபைல் டேபிளில் இருந்தது. அறை முழுவதும் தேட, அவள் இருந்த சுவடு கூட இல்லை.
வேகமாக கமலாம்மா இருக்கும் குவாட்டர்ஸ்க்கு விரைய, அவனை பூட்டு தான் வரவேற்றது..
வெறுத்துப்போன ஆதி, தன் அம்மா எங்கே போனார்? என்ற கோபத்தில் அவருக்கு அழைப்பு விடுத்தான்.
“என்ன கண்ணப்பா? உன் பொண்டாட்டிக்கு உன்னை பார்த்ததும் எனர்ஜி வந்திருக்குமே?”
“என்ன உளறிட்டு இருக்கிங்க?”
“அவ தான் உன்னை ரொம்ப தேடிட்டு இருந்தா. சோர்வா இருக்காளேன்னு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகலாம்ன்னு பார்த்தா என் அத்தான் வந்தா சரியா போய்டும் அப்டிங்கறா. என்னை என்ன பண்ண சொல்ற?”
அவன் மனதில் தன் மனைவி தன் மீது கொண்டுள்ள காதலை வெளிப்படுத்திய விதம் இதமளித்தது. ஆனால் அடுத்த நொடி, அவள் இப்போது எங்கே என்ற கேள்வி தொக்கி நிற்க,
“அம்மா நீங்க ஏன் பூமாவை தனியா விட்டுட்டு அங்க போனிங்க?”
“கண்ணப்பா… தனியா என்னவோ போல இருந்தது, அவளையும் தான் எப்பவும் கூப்பிடுறேன். உன்னை விட்டு வர மாட்டேன்னு சொல்றா. என்னை என்ன பண்ண சொல்ற?”
இவர்களை விட்டால் பேசிக்கொண்டே இருப்பார்கள் என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு அகிலனை அழைக்க, கோதையின் வாக்கே வேதம் என்னும் அகிலன், அவள் சொல்படி ஊட்டியை தாண்டும்போதே செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டான்.
ஆதிக்கு அடுத்து என்ன என்று தெரியவில்லை. வேகமாய் வீட்டிற்குள் சென்றவன் மீண்டுமொரு முறை தேட, ஷியாம் அவனுக்கு போன் செய்தான்..
“அண்ணா. என்னவோ சரி இல்லை.”
“என்ன சொல்ற ஷியாம்?”
“அது அகி அண்ணா சென்னை போறேன்னு தீடீர்ன்னு கிளப்பி போயிருக்காரு. நான் சென்னை ஈ.சி.ஆர். வீடுக்கு பல தடவை கூப்பிட்டுட்டேன். பதில் இல்லை. உங்களை போக சொல்லவும் முடியாது. நான் நாளைக்கு போகட்டா?”
“ஐயோ! ஷியாம் இங்க என்ன நடக்குதுன்னு தெரியல டா. பூமாவை காணொம் டா.”
“அண்ணா அவ உங்களோட ஒளிஞ்சு விளையாடுவா.”
“இல்ல ஷியாம் நான் ரொம்ப நேரமா தேடறேன். இங்க செகியூரிட்டி கூட இல்ல டா.”
“அண்ணா! நான் வந்தப்போ இருந்தாங்களே! நான் எல்லாத்தையும் செக் பண்ணிட்டு, கோதை உங்க கூட தனியா டயம் ஸ்பெண்ட் பண்ண நினைக்குறான்னு தானே வதுவையும், நர்மதாவையும் கூட்டிட்டு வந்தேன்?”
“என்ன சொல்ற, அவ போன் இங்க இருக்கு டா. ஆனா அவ இல்லயே!”
“அண்ணா அவ போன்ல உங்களுக்கு மெஸ்ஸேஜ் விட்டு போயிருப்பா பாருங்க. விளையாடுவா அண்ணா. நான் வேற அதை உங்க கிட்ட சொல்லக்கூடாது. நீங்க அவ போனை பார்த்துட்டு இருங்க. அவ என்னை கரடின்னு நினைச்சலும் பரவாயில்லை இதோ கிளம்பி வரேன்.”
நிலைமையை சகஜமாக்க ஷியாம் கோதை விளையாடுகிறாள் என்றே நினைத்து சொன்னான்.
ஷியாமோடு பேசியபடி வெளியில் வர, வீட்டின் வாயிலை தாண்டி ஏதோ அவன் காலில் இடரிவிட, அதை கூர்ந்து பார்த்தான், அது பூமாவின் செருப்பு.
அது இருக்கும் கோலமே அவனை பயம் கொள்ளச் செய்ய, பூமாவின் செல்போனை உயிர்ப்பித்து பார்க்க, அவனின் மிஸ்ஸ்ட் கால் இருந்தது, அதை ஒதுக்கியதும், ஒன் வொய்ஸ் ரெகார்ட் ஸ்டோர்ட் சக்ஸஸ்புல்லி என்றிருக்க, அதை ஆன் செய்தான். அதில் பூமா தன் சிசுவைப் பற்றி சொல்லிக்கொண்டிருக்க, கேட்ட ஆதியின் கண்களில் நீர் நிறைந்து கரை தாண்டியது.
அதில் அவள் பேசி முடிக்கும் தருவாயில் கேட்ட குரலை கூர்ந்து கவனித்தவன், அது நீலாவின் குரல் என்று தெரிந்த நொடி தான், பூமாவின் ஆபத்தான தற்போதைய நிலை அவனுக்கு புரியத்துவங்கியது.
அவர்களின் உரையாடலை கேட்டபடி இருந்தவனுக்கு, பூமா வின் பலமான தாக்குதல் சத்தம் கேட்க, பின்னொடு அவளின் நீயா என்ற கேள்வியும் அதன் பின் இருந்த ஒருவனின் பேச்சும் சற்றே குழப்பத்தை அதிகரிக்க, ஷ்யாமின் ஏதோ சரியில்லையோடு அது ஒத்துப்போனது.
‘ஐயோ.. இவன் சக்தி…’
நம் கண்காணிப்பில் சென்னையில் இருப்பவன், இங்கெப்படி வந்தான்? அவன் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியவர்களை அவன் அழைத்துக்கொண்டிருக்கும்போதே ஷியாம், ராகுலுடன் வந்துவிட, போனை ஸ்பீக்கரில் போட்டவன்,
“யோவ், சென்னையில் சக்தியை பார்த்துக்க சொன்னேன்ல அவன் எங்கய்யா?”
“சார் இன்னும் அங்க இருந்து எனக்கு ரிப்போர்ட் வரல சார், வந்ததும் சொல்றேன்.”
“கிழிச்ச… அவன் அங்க இருந்து தப்பிச்சு, இங்க வந்துட்டான். இப்போ என் மனைவியை காணோம். உன் ஆளுங்களும் இங்க இல்ல. என்ன அவன்கிட்ட காசு வாங்கிட்டியா?”
“சார். இல்ல சார். நான் எல்லாத்தையும் செக் பண்ணிட்டு உங்களை திரும்பவும் கூப்பிடறேன் சார்.”
“என்ன சொல்றிங்க அண்ணா? அந்த சக்தி தப்பிச்சிட்டானா?”
“அது மட்டும் இல்ல. நாம தேடிட்டு இருந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனே அவன் தானாம்!”
“உங்களுக்கு எப்படி தெரியும்?”
“இதை கேளு” என்ற பூமாவின் மொபைலில் இருந்த ரெகார்டிங்கை ஒலிக்க விட,
ராகுல் அழுத்துவிட்டான்.
“இன்னும் அவ என்ன என்ன தான் படணுமோ?”
“அவ கர்ப்பமா இருக்கா அண்ணா. உங்க கிட்ட தான் முதல்ல சொல்லுவேன்னு என்னை சொல்ல கூடாது சொல்லிட்டா.”
“எனக்கு என்ன பண்றதுன்னு புரியல ராகுல்.”
“அண்ணா. நாம ஏன் முகிலனை கேக்க கூடாது?”
“அதான் சரி. வாங்க.”
மூவரும் கிளம்பி கோத்தகிரி போக, நவிலனை அழைத்த ஆதி உடனே வரச்சொன்னான்.
இவர்கள் கோத்தகிரியை அடைந்தபோது, அங்கே வீடே களேபரமாய் கிடந்தது.
முகிலன் சக்தியால் காப்பற்ற பட்டிருந்தான்.
வெளியில் வந்த அவர்கள், வேறுவழி தெரியாது தவிக்க,
“பூமா” என்ற ஆதியின் அலறலை கேட்டபடி வந்த நவிலன் கீழே சரியப்போன அவனை தாங்கிப் பிடித்தான்.
அவன் அலறலில் அந்த பகுதியே அதிர, அதன் பின் இருந்த நிசப்தத்தை ஆதியின் செல்போன் அழைப்பு கலைத்தது.
“என்ன ஆதிலிங்கேஸ்வரன்… நல்லா இருக்கியா? அதெப்படி நல்லா இருப்ப? நான் தான் உன் பொண்டாட்டியை ஓட ஓட விரட்டிருக்கேனே? உன் பொண்டாட்டி உன்கிட்ட சொல்லிருப்பாளே! எனக்கு தெரியும். அவ தான் எதையும் உன்கிட்ட இருந்து மறைக்க மாட்டாளாமே! முகிலன் சொன்னான்.”
“டேய். நீயா டா அந்த அண்டர்க்கிரவுண்ட் ட்ரக் டீலர்… பாவி.”
“ஹே ஹே… உன் பொண்டாட்டி சொல்லலையா? நான் தான் சொல்லிட்டேனா? சரி போய் தொலை.”
“டேய் நாயே. எங்க டா என் பூமா?”
“ம்ம். சொல்ல மாட்டேன்.. அவளுக்கு எவ்வளவு தெனாவெட்டு இருந்தா என்னையே ட்ரேஸ் பண்ணிருப்பா. நீயே இன்னும் ஒரு மாசம் என்னை காப்பாத்த ஆள் வரலன்னா விட்ருப்ப. அதுக்கு தானே நான் இவ்வளவு மெனக்கெட்டேன்.
ஆனா அதை அவ எப்படி டா உடைச்சா? எப்படி கண்டுபிடிச்சா? நான் தான் எல்லாத்துக்கும் மெயின் அப்படின்னு முகிலனுக்கே பல வருஷம் தெரியாது டா!”
“என்ன முகிலனை பல வருஷமா உனக்கு தெரியுமா?”
“ஆமா ஆரம்பத்தில் இருந்தே என் லிங்க்குக்கு(link) கீழே இருக்கறது அவன் தான். நீ நல்லவனா இருந்ததால உன்னோட அவன் தங்கினா அவன் மேல சந்தேகம் வராதுன்னு தான் நான் உன்னை அவனோட தங்கவிட்டேன். சுந்தரும்,கதிரும் எனக்கு இங்க டிஸ்டர்ப் பண்றாங்கன்னு தான் அவனை சென்னை வர சொன்னேன்.”
இதைக் கேட்ட ஆதி அப்படியே காரில் சாய்ந்து அமர்ந்தான்.
‘தான் அவனைக்கொண்டு அவன் குடும்பத்துடன் பழக நினைத்தால் அவன் தன்னை கொண்டு அவனை காத்துகொண்டதோடு எத்தனை பேரின் வாழ்வை அழித்தானோ?’
சக்தி தொடர்ந்தான்.
“அவனை வச்சு கடத்தலை ஈஸியா முடிக்கலாம்ன்னு பார்த்தா உன் பொண்டாட்டி இவனுக்கு முதல் நாளே நல்ல பேர் இல்லாம பண்ணிட்டா. அதான் சுஜியை தூக்கினோம். எல்லாம் சரியா தான் போச்சு. நீயும் அவளும் வர்ற வரைக்கும். அவளை ஒன்னும் பண்ண முடியாம விட்டுட்டு வந்துட்டேன். இவனும் அவளை படுத்தி எடுத்தான். என்ன உன்னை கல்யாணம் பண்ணி அவ இங்க வந்ததும் அப்பயாவது சும்மா இருந்திருக்கணும். நாங்க என்ன பண்ணினா உங்களுக்கு என்ன டா? உன்னை யாருடா மலைவாசிக்கு உதவ சொன்னது?
அப்போ கூட, எனக்கு மேல ஒருத்தன் இருந்து இயக்குறான்னு நான் பண்ணி வச்சிருந்த மாய வலையை உன் பொண்டாட்டி எப்படிடா அறுத்தா? எப்படி கண்டுபிடிச்சா? முகிலனுக்கு கூட தெரியாத ரகசியத்தை அவ எப்படி பிடிச்சா? நான் தான் சக்தி சரவணன். நான் தான் தலைவன்னு அவ எப்படிடா கண்டுபிடிச்சா? அவளை நான் சும்மா விட்ருவேனா?”
“டேய், இப்போ நீ தான் தலைவன்னு தெரிந்தால என்ன டா?” என்று நவிலன் இடைமறிக்க..
“என்னது? தெரிஞ்சா என்னவா? டேய் நான் என்ன அரசியல்வாதியா? நான் தான் எல்லாத்துக்கும் காரணம் அப்பிடின்னு விளம்பரம் தேடிக்க, நான் என்ன அட்ட டப்பா வியாபரமா பண்றேன்? நான் பண்றது அண்டர்க்கிரவுண்ட் பிசினஸ் டா. நான் மறைஞ்சு இருந்து எவ்வளவு சாதிச்சிருப்பேன் தெரியுமா? சக்திக்கு மேல ஒருத்தர் இருக்காரு அவரை நெருங்கவே முடியாதுன்னு நான் செஞ்சு வச்சிருந்த மொத்த செட்டப்பையும் கலச்சிட்டீங்களே டா. சக்தியைத் தொட்டா, அந்த லிங்க் வேலை செய்யாதுன்னு என்னைத் தொடவே யோசிப்பானுங்க டா. ஆனா நான் தான் தலைன்னா என்னை போட்டுட்டு, என் சாம்ராஜ்யத்தை ஆண்டுருவானுங்க. உன் பொண்டாட்டி தெரிஞ்சுக்க கூடாததை தெரிஞ்சுகிட்டு என் மொத்த சாம்ராஜ்யத்தை ஆட்டி பார்த்துட்டா. இனிமே நீ அவளை வாழ்நாள்ல பார்க்க முடியாது டா.” என்று போனை வைத்துவிட்டான்.
“ஷியாம் அந்த காலை டிராக் பண்ண சொல்லு.”
“ப்ரோயோஜனம் இல்ல நவி அண்ணா. இது நெட் கால். அவனை ட்ரெஸ் பண்ணவே முடியாது. ட்ரை பண்ணினாலும் அது நிமிஷத்துக்கு ஒரு நாட்டைக் காட்டும்.”
“இப்ப என்ன டா பண்றது?”
“வீட்டுக்கு போகலாம்.” என்றான் ஆதி.
“என்ன சொல்ற ஆதி?”
“அம்மாவை பாக்கணும். அப்பாவுக்கு போன் பண்ணி வசந்த இல்லத்துக்கு வரச்சொல்லு.”
ராகுல் ராஜேஸ்வரனுக்கு போன் செய்து விஷயத்தை கூறாமல் வீட்டுக்கு வரச் சொன்னான்.
நால்வரும் வீட்டை நோக்கி பயணித்த வேளையில்,
“சக்தி. அந்த கோதை தான் நம்ம கிட்ட இல்லயே! அப்பறம் ஏன் அவன் கிட்ட அப்படி சொன்ன?”
“அது அவனுக்கு தெரியாதுல்ல?”
“அவ வந்துட்டான்னா.”
“அதெப்படி வருவா? ஆப்பரேஷன் ஆன உடம்பு, இப்போ மாசமா வேற இருக்காளாம். இது குளிர் காலம் வேற, கண்மண் தெரியாமல் அவ ஓடின ஓட்டத்தை நீ பார்த்திருக்கணும்…” என்று குரூரமாய் சிரித்தான் சக்தி.
“அப்போ அவ என்ன ஆவா?”
“எங்கயாவது விழுந்து சாவட்டும். ஒருவேளை பிழைச்சு வந்துட்டான்னு வை மறுபடியும் அவளை கொல்லத்தான் போறேன். ஏன்னா அவ என்னை இந்த வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டிட்டா. இனிமே சுதந்திரமா என்னால இருக்க முடியாது, எந்த நாய் எப்போ சுடுவான்னு என்னை பயத்தோட வாழ வச்சிட்டா.”
“என்ன சக்தி நீ? இதுக்கு முன்னாடியும் உனக்கு குறி வைக்க தானே செய்வாங்க? அதுவும் இல்லாம இந்த தொழிலில் உயிருக்கு பயந்தா ஆகுமா?”
“டேய். நான் இந்த தொழில் செய்யறது காசுக்காக. காசு வாழறதுக்காக. சாக இல்ல. புரியுதா? நான் ஏன் என்னை வெளிய ரெண்டு பேரா காட்டி உள்ள ஒருத்தனா இருந்தேன்னு…”
“மம் புரியுது சக்தி.”
“அதான் தேரை இழுத்து தெருவுல விட்டுட்டாளே. இன்னும் என்ன சக்தி? சக்தி சரவணன் அப்படினே கூப்பிடு. என்னை இத்தனை வருஷமா லிங்க்கா தானே பார்த்திருக்காங்க எல்லாரும். இனிமே உண்மையான தலைவனா, சக்தி சரவணனா பார்ப்பாங்க. ” என்றான் அந்த மிருகம்.

Interesting
அப்பாடா..! நல்லவேளை கோதை சக்தி சரவணன் கிட்ட சிக்காம தப்பிச்சிட்டா.
😀😀
CRVS (or) CRVS 2797