
அமுதம் 36
கோதையின் வார்த்தைகளைக் கேட்ட சுந்தர் நொறுங்கிப் போனார். ஆதி நினைவிழந்த கோதையை பார்த்துக் கதறினான். அவளின் தோளிலிருந்தது வழியும் ரத்தத்தை நிறுத்த, தன் சட்டை கொண்டு இறுக்கிக் கட்டியவன் அவளை கைகளில் ஏந்தியபடி வாகனம் நோக்கி ஓட, அங்கே அதற்குள் ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது.
கோதையை ஆம்புலன்ஸில் விட்டவன் மருத்துவர் அவளுக்கு சுவாசிக்க பிராண வாயுவைப் பொருத்தியபடி மருத்துவமனை நோக்கி விரைவாகச் செல்லச் சொன்னார்.
ஆதி ஆம்புலன்ஸில் ஏறப்போனவன், நினைவு வந்தவனாய் அவரை காத்திருக்க சொன்னவன், புவியைத் தேடி ஓட, அப்போது தான் நினைவு வந்து நடந்த களேபரங்கள் புரியாத புவி ஏதோ சொல்ல வந்தான்.
“புவி நீ நினைக்கறதுக்கும் மேல நிறைய நடந்துடுச்சு, முடிஞ்சா என்னோடு இப்ப வா. இல்லன்னா மலைவாசி ஒருத்தர் கூட ஹாஸ்பிடல் வந்து சேரு.”
புவி இன்னும் நிலையாக நிற்க முடியாமல் தடுமாற, அவனுக்கும் ஒரு ஆம்புலன்ஸ்க்கு சொல்லிவிட்டு கோதையோட சென்று விட்டான்.
புவி அங்கிருந்தவர்களிடம் நடந்ததை கேட்க, அவர்கள் சொன்னதைக் கேட்டவன் “அக்கா அக்கா”, என்று அரற்றத் தொடங்கினான். அவன் அருகில் வந்த மலைவாசி முதிய பெண்மணி.
“உன் அக்கா எவ்வளவு சிரமப்பட்டு எங்க அத்தனை பேர் உயிரை காப்பாத்தியிருக்கா தெரியுமா? அழுவாத… எங்க காளியாத்தா அவளை சீக்கிரம் குணப்படுத்திடுவா… நீ மெதுவா வா… இங்க அடிபட்ட பிள்ளைகளுக்கு டாக்ட மாறுக பாக்குறாக, அங்க நீயும் உன் தலையைக் காட்டு… டேய் மாரப்பா தம்பி பொருளு எல்லாம் எங்கன்னு பார்த்து சேகரிச்சி குடு.”
புவியும் கொஞ்சம் மனதைத் தேற்றிக்கொண்டு குடிலை விட்டு வெளியில் வர, சற்று தொலைவில் இருந்த மரத்தில் அவன் கேமரா தொங்குவதை கண்டான். அவன் மாரப்பனிடம் சொல்ல அவனும் அந்த மரத்தில் ஏறி அதை எடுத்து கொடுத்தான். அவன் உதவியோடு மருத்துவமனை வந்த புவி அங்கு ஐ.சி.யு வாசலில் நின்ற கூட்டத்தைப் பார்த்தான்.
புவியை கண்டதும் ஓடி வந்த ராஜேஸ்வரன், “டேய் என்ன டா தலைல காயம்? வா வா”, என்று மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, அவன் தலையில் சிறிய கட்டோடு ஆதியை நோக்கி விரைந்தான்.
“அத்தான்! அக்கா… அக்கா… கிட்ட சொல்ல தான் வந்தேன் அதுக்குள்ள யாரோ என்னை அடிச்சிட்டாங்க…”
“புரிஞ்சது புவி, உன்னைப் பார்த்ததும், உனக்கு மருத்துவ உதவி குடுத்துட்டு தான் நாங்க அங்க அவங்களை பாதுகாக்கப் போனோம். ஆனா… பூமா… என் பூமா…”, என்று அவன் மறுபடியும் கதறத் தொடங்கினான்.
யார் வார்த்தைகளும் அவனை ஆறுதல் படுத்தவில்லை. அப்போது வேக நடையுடன் உள்ளே வந்த சுந்தர்
“மாப்பிள்ளை! மாப்பிள்ளை! பூங்கோதை எப்படி இருக்கா? “என்று அவன் கை பிடித்துக் கேட்ட அவரை பூமாவை போல அவனால் தள்ளி வைக்க முடியவில்லை.
“மாமா… பூமா…மாமா…” என்று அரற்றியபடி இருந்தான்.
மகேஸ்வரனும் வந்து சேர, அனைவரும் மருத்துவரின் வரவுக்காக வெளியில் காத்திருந்தனர்.
கோதையின் காயமும், அதிலிருந்து வழிந்தோடிய ரத்தமும், அவளைத் தூக்கி வந்ததால் ஆதியின் முண்டா பனியனிலும், அவன் தோளிலும் கரங்களிலும் காய்ந்திருந்த ரத்தக்கறையும், அங்கிருக்கும் அனைவர் நெஞ்சையும் நடுங்கத்தான் செய்தது.
அந்த குளிரில் கூட உடை மாற்றாமல் தன் மனைவியை எண்ணி கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தான் ஆதி.
அவளின் நண்பர்கள் அவளின் தைரியத்தை பலமுறை கண்டிருப்பதால், இந்த முறையும் மீண்டு வருவாள் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர்.
மூன்று மணி நேரப் போராட்டத்திற்கு பின், மருத்துவர்கள் வெளியில் வந்தனர். ஆதியின் அருகில் வந்தவர்,
“கவலைப்படாதீங்க மிஸ்டர். உங்க மனைவி இன்னும் ஆறு மணி நேரத்தில் கண்டிப்பா உங்களை பார்த்துப் பேசுவாங்க. ஆனா அவங்க தோளில் ஆழமான வெட்டு விழுந்திருக்கு, அதனால தோள் எலும்புல சின்ன பிராச்சர். காயம் ஆறினாலும் அவங்க தோள், கை எதையும் இன்னும் மூணு மாசத்துக்கு அசைக்க கூடாது.
வேற ஒன்னும் இல்ல. கவலைப்படத் தேவையில்லை சரியா?”, அன்பாகவும் நம்பிக்கையாகவும் சொல்லிவிட்டு மருத்துவர் செல்ல, அத்தனை பேர் மனமும் ஒரு பெருமூச்சோடு, ஆசுவாசம் கொண்டது.
முகத்தை அழுந்தத் துடைத்த ஆதி ரெஸ்ட்ரூம் நோக்கி சென்றான். அவனை அறிந்த நவிலன் காரில் இருந்த அவன் உடையை எடுத்துக்கொண்டு அங்கு விரைந்தான்.
உடை மாற்றிய ஆதி நேராக வந்து நின்றது சுந்தர் முன்னால் தான்.
“சொல்லுங்க மாமா, நீங்க எப்படி அங்க வந்திங்க? நான் நவிலன் கிட்ட மீடியா ஆட்களைத்தான் வரவைக்க சொன்னேன். ஆனால் நீங்க…”
“கோதை போன் பண்ணினா மாப்பிள்ளை. ஒரு குடிமகளா காவல்துறை கிட்ட உதவி கேட்டா. அங்கிருந்த சூழ்நிலை சொல்லி, ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகுது முடிஞ்சவரைக்கும் சீக்கிரமா வாங்கன்னு சொன்னா. நாங்களும் வந்தோம். ஆனா அந்த பகுதி ரொம்ப அடர்ந்து இருந்ததால எங்களால சரியான இடத்தை சரியான நேரத்தில் கண்டுபிடிக்க முடியல. நாங்க மட்டும் கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா கோதைக்கு இப்படி நடந்திருக்காது.”
“இதுக்கெல்லாம் அஞ்சாத ஆள் தான் என் பூமா. நான் மீடியாவை கொண்டு வர நினைச்சேன். ஆனா அவ போலீசை கூப்பிட்டிருக்கா. அவ எப்பவுமே ஸ்மார்ட் தான்.”, என்று தன் மனைவியை பெருமையாக நினைத்துக்கொண்டான்.
அங்கே பரபரப்பாக வந்த புவி “அத்தான் இங்க பாருங்க” என்று கேமராவை காட்ட, அதில் நிறைய புகைப்படங்கள் இருந்தது.
உடனே அதை லேப்டாப்பில் கனெக்ட் செய்த ஆதி ஒவ்வொன்றாய் பார்க்க, மரத்தில் மாற்றுவதற்கு முன்பிருந்து அதை எடுத்தது வரை, நிமிடத்திற்கு 16 படங்கள் என்று ஆயிரம் படங்களுக்கு மேல் இருந்தது.
அதை பார்த்துக்கொண்டே வந்தனர் அனைவரும். அதில் கோதை யாருக்கோ போன் செய்வது, பெண்களோடு பேசுவது, குத்தீட்டிகளை எடுத்து கொள்வது, அவர்கள் வந்தது, கோதை தடுத்தது, அவள் வெட்டு பட்டது என்று அனைத்தும் இருக்க, அடுத்த பெண்ணை காக்க அவள் வெட்டு பட்டிருக்கிறாள் என்றதும், அவளை நினைத்து பெருமிதம் கொண்டனர்.
அடுத்தடுத்து வந்த படங்களில் அந்த ஆட்கள் ஓட முயற்சி செய்வது வரும்போது ராகுல் “நிறுத்துங்க ஆதி அண்ணா..” என்று கத்தினான்.
அதற்கு முன்னால் இருந்த புகைப்படத்தை உற்று நோக்கியவன்,
“இவன் அவன் தான் அண்ணா! அன்னைக்கு இவனை நான் பார்த்தேன்… சுஜி! சுஜி… இங்க வா… இவனை உனக்கு ஞாபகம் இருக்கா? இவன் அன்னைக்கு உன்னை கடத்திட்டு போன கும்பல்ல இருந்தவன் தான? நல்லா பாரு டா. நான் இவன் கைல அடிச்சேன். எனக்கு நினைவு இருக்கு நீயும் பார்த்து சொல்லு.” என்று அன்றைய நிகழ்வை நினைவுபடுத்திக் கொண்டே சொன்னான்.
“ஆமா ஆமா! மாமா… சென்னைல என்னை முதல்ல தூக்கிட்டு போனது இவன் தான் மாமா.”
“அப்போ சென்னை கடத்தல்காரங்களுக்கும் இங்க மலைகிராமத்தை காலி பண்ண நினைக்கிற கும்பலுக்கும் என்ன சம்மந்தம்?”, ஆதி குழப்பமாய் கேட்டிட
“ரெண்டும் ஒரே கும்பல் தான். அவங்களை பிடிக்க தான் ஸ்பெஸல் போர்ஸ்ல நாங்க இங்க வந்தோம்” என்றார் சுந்தர்.
ஆதிக்கு ஏன் அந்த ஆள் கோதையை வெறியோடு தாக்கினான் என்று புரிந்தது. அன்று அவள் உள்ளே நுழையாமல் போயிருந்தால் அவர்கள் சுஜியை வைத்து அழகாக போதை பொருளை கடத்தி இருப்பார்கள்.
ஆனால் கோதையின் திட்டத்தால் அன்று அவர்கள் திட்டம் முழுவதும் குழம்பி போய் அவர்கள் போதைப்பொருள் மாட்டியதோடு, அனைவரும் தலைமறைவாக சுற்றியது கோதையால் தான். அதனால் அவளை இம்முறை இங்கே கண்டதும் கொன்றுவிடும் வெறியோடு தாக்கி இருக்கிறான்.
ஓரளவு எதற்கு, யார் என்று தெரிந்துவிடாதால் இனிமேல் கூடுதல் கவனத்ததோடு இருந்து கொள்ள வேண்டும், என்று எண்ணமிட்டவனின் மனதில் அடுத்த நொடி மின்னல் வெட்டியது.
‘என்ன ஆனது தாங்கள் ஏற்படுத்தி வைத்த பாதுகாப்பு?’
உடனே அந்த பாதுகாப்பு நிறுவனத்தை தொடர்பு கொள்ள, அவன் சொன்ன பதிலில் ஆதி வெறி பிடித்தவன் போல கத்தத் தொடங்கினான்.
அவனை யாராலும் சமாளிக்க முடியவில்லை. அவன் வெறி கூடிக்கொண்டே போனது. இறுதியில் அவனுக்கு ஊசி போட்டு அடுத்த அறையில் அவனை தூங்க வைத்த பின் தான் அனைவருக்கும் மூச்சே வந்தது.
அந்த பாதுக்கப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு சுந்தர் விவரம் கேட்க, ஸ்பீக்கரில் இருந்தது போன்.
“சார், மேடம் கொஞ்ச நாள் முன்னாடி வசந்த இல்லம் வாசல்ல ஒரு பைக்கில் இருந்தவனை பார்த்து விவரம் கேட்டாங்க. குடுத்தோம், அடுத்தநாள் எங்க ஆளுங்க கூட அவனை போய் பார்த்து மிரட்டிட்டு வந்திருக்காங்க. அன்னைல இருந்து அவனை குளோஸா வாச் பண்ண சொன்னாங்க. அந்த ஆள் அடிக்கடி சந்தேகப்படும் படி சில இடங்களுக்குப் போனான். நேத்து சில ஆயுதங்கள் கூட வாங்கினான். இன்னிக்கு அவன் பேசறதை கேட்ட நாங்க எங்களோட பொறுப்பை சரியா செய்யணும்ன்னு நினைச்சு கடைசில அதுல கோட்டை விட்டுட்டோம்.”
“என்ன ஆச்சுன்னு சொல்லு யா” கடுப்பில் கத்தினார் சுந்தர்.
“அது அந்த ஆள் சில கூலிப்படை கூட பேசி, ‘இன்னிக்கு கோதையும் ஆதியும் மலை கிராமத்துக்கு போறாங்க. அவங்க செக்யூரிட்டி பூரா அவங்களோட போய்டும். அது தான் நமக்கு சரியான நேரம். அவங்க வீட்ல இருக்கற ஒவ்வொருத்தனையும் எங்க இருக்காங்களா அங்கேயே வெட்டணும் அப்டின்னு சொன்னான். அவன் அது மட்டும் இல்லாம. அவங்க பிரெண்ட்ஸ் எல்லாரயும் சேர்த்து வெட்டணும்’, அப்டின்னு சொல்லவும், நாங்க முழு பாதுகாப்பையும் குடும்பத்து ஆளுங்க மேலயும், அவங்க நண்பர்கள் மேலயும் வச்சோம். ஒருத்தருக்கு ரெண்டு கார்ட்ஸ் போட்டோம். எப்படியும் அவங்க ரெண்டு பேருக்கும் பாதுகாப்பு தேவை இல்லை. ஏன்னா அவனோட டார்கெட் இவங்க தானேன்னு நாங்க இங்க கவனம் வச்சோம். கடைசில எங்களை திசை திருப்பிட்டு அங்கே என்னென்னவோ பண்ணி வச்சிருக்காங்க…”
அவர் சொல்லி முடித்ததும்.
“யார் அவன்?” என்று கேட்டனர் அனைவரும்.
“அவன் பேர் முகிலன் சார்.”
மொத்த பேருக்கும் அதிர்ச்சி. முகிலன் ஊட்டியில் இருக்கிறானா? அது கோதைக்குத் தெரியுமா? அவள் அவனை எச்சரித்தாளா? ஏன் நம்மிடம் அவள் சொல்லவில்லை?
அகிலனுக்கு அன்று காலை அவள் வெளியில் இருந்து வந்ததும், ‘ஆதி வந்ததும் சொல்றேன்’ என்றதும் நினைவுக்கு வர, தன் தம்பியாய் பிறந்தவன் மேல் கொலை வெறி வந்தது.
“அவனை அப்படியே விட்டிட்டீங்க தான மாமா நீங்க? எங்க போனான்? என்ன ஆனான்? இன்னும் கோதைக்குக் குறி வச்சிருக்கானா எதுவும் பாக்கல தான நீங்க… அவன் சாவு என் கைல தான்…” வெறியோடு வெளியேறிய அகிலனைத் தடுக்க முடியாமல் அனைவரும் தவித்தனர்.
இதை எதையும் உணர முடியாத நிலையில் மயக்கத்தில் கோதையும், தூக்கத்தில் ஆதியும் இருந்தனர்.

போச்சு போ, அட் எ ஷேம் டைம் மெட்ராஸ் பார்ட்டி & முகிலன் பார்ட்டியோட அட்டாக் போல. ஆனாலும், பை காட்ஸ் க்ரேஸ் வெறும் வெட்டு காயத்தோட தப்பிச்சா, அந்த மட்டுக்கு நிம்மதி தான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
முதலிலேயே அகிலன் இல்ல ஆதி கிட்ட முகிலன் விஷயத்த சொன்னா இன்னும் அலார்ட்டா இருந்திருக்கலாம்
👌👌👌 interesting